Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆண்குழந்தைக்கு தாயானார் சரண்யா மோகன்..!

Posted:

'வெண்ணிலா கபடிக்குழு', 'ஈரம்', 'வேலாயுதம்', 'யாரடி நீ மோகினி' ஆகிய படங்களில் நடித்தவர், சரண்யா மோகன். வெள்ளந்தியான அழகு முகம் கொண்ட இவரால் கதாநாயகியாக சோபிக்க முடியாவிட்டாலும், தங்கை நடிகை என்கிற பெயரை தட்டிச்சென்று ரசிகர்களின் மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது. கேரளாவை சேர்ந்த இவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, ...

“என் மேல் பொறாமை” ; அடூர் கோபாலகிருஷ்ணன் பதிலடி..!

Posted:

மலையாள சினிமாவை பற்றி சாதாரண அளவுக்கு அறிந்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு கூட, அடூர் கோபாலகிருஷ்ணன்' என்கிற பெயர் நிச்சயமாக தெரியாமல் இருக்காது... மலையாள சினிமாவின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படும் அவர் குவித்துள சர்வதேச விருதுகள், தேசிய விருதுகள், கேரள அரசு விருதுகள் ஆகியவற்றை பட்டியலிட்டால் நான்கு ஏ4 பேப்பர்கள் ...

இசை ஆல்பத்தில் இனியா

Posted:

இசை அமைப்பாளர் கணேஷ் பிரசாத், இந்தியாவின் 70வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில் எனது இந்தியா என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். "அசோக சக்கரம் பறக்குதடா, காணும் கனவுகள் பலிக்குதடா..." என்று தொடங்கும் பாடல் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. டாக்டர் எஸ்.செல்லமுத்து, மஞ்சுநாத் தயாரித்துள்ளனர், பரத்குமார் பாடலை எழுதி, இயக்கி ...

தமிழ் சினிமாவில் போங்கு ஆட்டம்: லிங்குசாமி

Posted:

ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் நடிக்கும் படம் போங்கு. ருஹி சிங் ஹீரோயின். முண்டாசுப்பட்டி ராம்தாஸ், அர்ஜுன், அதுல் குல்கர்னி, ஷரத் லோகித்தாஸ் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ் இயக்குகிறார் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ...

கலாபவன் மணியின் தம்பி கதாநாயகன் ஆனார்..!

Posted:

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. ஆனால் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கலாபவன் மணியின் மரணத்தை தொடர்ந்து, அவரது தம்பி ராமகிருஷ்ணன், தனது அண்ணன் சாவில் மர்மம் ...

பிருத்விராஜூக்கு டைட்டிலை விட்டுத்தர மறுத்த இயக்குனர்..!

Posted:

இரண்டு தினங்களுக்கு முன் மலையாளத்தில் 'ஆடம்' (ஆதாம்) என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் அதைப்பற்றி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.. முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தை சமர் ரஷீத் என்பவர் இயக்கியுள்ளார்.. இப்போது இந்தப்படத்தை பற்றிய ...

உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பவன் கல்யாண்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகரான வினோத் குமார், ஜூனியர் என்.டி.ஆர்-பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் உயிரிழந்தார். இத்தகவலறிந்த வருத்தமடைந்த பவன் கல்யாண் திருப்பதியில் உள்ள வினோத் குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பதாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, ...

பவன்கல்யாண் - ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மோதல் - ஒருவர் மரணம்

Posted:

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர், வினோத் குமார் உயிரிழந்த சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆகஸ்ட் 24) கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ...

மீண்டும் இயக்குநராகும் ரவிமரியா : மிளகா இரண்டாம் பாகம் தயாராகிறது

Posted:

6 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் மிளகா. நட்டி நடராஜ் நடித்த படம். பூங்கொடி என்ற புதுமுகத்துடன் ரவிமரியா, சிங்கம்புலி, சுஜா வாருணி, இளவரசு உள்பட பலர் நடித்திருந்தனர். சபேஷ் முரளி இசை அமைத்திருந்தார், பாலாஜி வி.ரங்கா ஒளிப்பதிவு செய்திருந்தார். ரவிமரியா இயக்கி இருந்தார்.

நட்டி நாளை, சக்கரவியூகம் படத்தில் ...

பெண் ஓவியரின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறர் அனுமோல்

Posted:

ராஜா ரவிவர்மன் போன்று பல பிரபல ஓவியர்களை தந்த பூமி கேரளா. ஆனால் அங்கு பெண் ஓவியர்கள் மிகவும் குறைவு. 1940 முதல் 1969 வரை வாழ்ந்த பெண் ஓவியர் டி.கே.பத்மினி ஆண் ஓவியர்களுக்கே சவாலாக இருந்தார். புகழின் உச்சியில் இருக்கும்போது தனது 29வது வயதில் ஒரு குழந்தையை பிரசவிக்கும்போது இறந்து போனார். பத்து வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்து 19 ஆண்டுகளில் ...

‛சிரிப்புடா': விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

Posted:

கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடல்வரி ஒரு படத்தின் தலைப்பில் இருந்து பச்சை குழந்தைகளின் மழலை வார்த்தை வரை ஊடுருவிவிட்டது. இப்போது இந்த நெருப்புடாவை சிரிப்புடா என்று மாற்றி விஜய் டி.வியில் புதிய காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

இதில் விஜய் டி.வியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஈரோடு மகேஷ் ...

பிளாஷ்பேக்: தமிழ் சினிமாவின் முதல் ‛சகலகலாவல்லவன்

Posted:

தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிக்க வந்தவர்கள் அனைவரும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர், நம்பியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலரும் நாடகத்திலிருந்து வந்தார்கள். சிறுவயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்துவிடுவதால் இவர்கள் நிறைய படித்திருக்க மாட்டார்கள் எல்லாமே அனுபவம்தான். நடிப்பார்கள், ...

செவாலியே விருது: கமலுக்கு கேரள முதல்வர் வாழ்த்து

Posted:

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் இதுவரை வாழ்த்து சொல்லாத நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கமலுக்கு தனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் இது தொடர்பாக ...

செக்ஸ் தொழிலாளியாக நடிக்கும் ஸ்வரா பாஸ்கர்

Posted:

பாலிவுட்டின் மிகத்திறமையான நடிகைகளில் ஸ்வரா பாஸ்கரும் ஒருவர். எப்படிப்பட்ட ரோலிலும் அருமையாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். இவர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் செக்ஸ் தொழிலாளியாக நடிக்க உள்ளார். பிரபல எழுத்தாளரும், உதவி இயக்குநருமான ஆதித்யா கிருபலாணி தான் எழுதிய நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ‛‛திக்லி ...

ரன்பீர்-கத்ரீனாவை விடுங்க என் தலை முடியை பாருங்க - கரீனாகபூர்

Posted:

பாலிவுட்டில் காதலர்களாக வலம் வந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் தற்போது பிரிந்து, இருவரும் வேறுவேறு பாதையை நோக்கி சென்றுவிட்டனர். இதனிடையே பாலிவுட்டின் மற்றுமொரு நடிகையான கரீனா கபூர், தற்போது கர்ப்பமாக உள்ளார். இருந்தும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரீனாவிடம், ...

மராத்திய மொழியில் பாடுகிறார் பிரியங்கா சோப்ரா

Posted:

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ‛குவாண்டிகோ' எனும் அமெரிக்க சீரியலுக்கு பின்னர் ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். தற்போது ‛பேவாட்ச்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகையாக மட்டுமல்லாது நன்கு பாடும் திறன் உடையவரான பிரியங்கா, தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவர், மராத்திய மொழியில் ...

ரன்பீர் அசாத்தியமான நடிகர் - கரண் ஜோகர்

Posted:

இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், தற்போது ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரண் ஜோகர், ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் ரன்பீரின் நடிப்பு அனுபவம் பற்றி புகழ்ந்து ...

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் கங்கனா

Posted:

பாலிவுட்டின் குயினான கங்கனா ரணாவத், சஞ்சய் லீலா பன்சாலி படத்தில், நடிகர் ஷாரூக்கான் உடன் நடிக்க இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்தன. இந்நிலையில் கங்கனா, தான் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா, சஞ்சய் படத்தில் நடிப்பது பற்றி கூறியிருப்பதாவது... ‛‛சஞ்சய் சார் என்னிடம், ...

'இருமுகன்' தள்ளிப் போக என்ன காரணம் ?

Posted:

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'இருமுகன்' படம் செப்டம்பர் 2ம் தேதியன்று வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. தற்போது படத்தை செப்டம்பர் 8ம் தேதியன்று தள்ளி வைத்திருக்கிறார்கள். திடீரென படம் ஒரு வாரம் தள்ளிப் போனதற்கு சென்சார் இன்னும் முடிவடையாதது ஒரு காரணம் என்றும் ...

அதிக வருமானம், உலகின் டாப் 10 நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே

Posted:

இந்தியத் திரையுலகத்தில் கிளாமர் மற்றும் நடிப்பில் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்துள்ளவர் தீபிகா படுகோனே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஓம் சாந்தி ஓம் என்ற படத்தின் மூலம் 2007ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்ததால் மிகப் பிரபலமான நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™