Tamil Star |
| உடலுக்கு பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள் Posted: 26 Jul 2016 07:42 PM PDT
வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்காயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும். வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து. இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும். வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும். வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். The post உடலுக்கு பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோமாலிய குடியேற்றவாசி உயிரிழப்பு: விசாரணகளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு Posted: 26 Jul 2016 07:51 AM PDT
ஒட்டாவாவில் கைது செய்யப்பட்ட அந்த 37 வயதான நபர் தொடர்பிலான விவகாரங்களில் குழப்பநிலை காணப்பட்டதனை அடுத்தே அது தொடர்பான விசாரணைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். கனேடிய காவல்த்துறையால் கைது செய்யப்பட்ட அவர், மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் போது, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினுள் ஓடிச் செல்ல முயன்ற அவர் மீது சில காவல்த்துறையினர் தாக்குதல் நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டோரை ஆதாரங்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை குறித்த அந்த குடியிருப்பு பகுதியில் ஒருவர் குழப்பம் விளைவிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஒட்டாவா காவல்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றதாகவும, அதனைத் தொடர்ந்து அங்கு கைகலப்பு ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் போது பாதிக்கப்பட்ட குறித்த நபர் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. The post சோமாலிய குடியேற்றவாசி உயிரிழப்பு: விசாரணகளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


காவல்த்துறையினரின் தடுப்புக் காவலில் இருந்த சோமாலிய குடியேற்றவாசி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளமை தொடர்பில் ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.