Tamil Star |
- தமிழர்கள் மீதான கறுப்பு யூலைக் கலவரம் – கனேடியப் பிரதமர் இரங்கல்
- கனடாவின் கல்கரியைச் சேர்ந்த ஒருவர் துருக்கியில் கைது
- கனடாவின் ஆட்டிக் துருவ ஆய்வுப் பணிகளால் பாதிப்பில்லை – ரஷ்யா
| தமிழர்கள் மீதான கறுப்பு யூலைக் கலவரம் – கனேடியப் பிரதமர் இரங்கல் Posted: 24 Jul 2016 07:34 AM PDT
கனேடிய தமிழ் மக்கள் உட்பட உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்கள் இந்த கறுப்பு யூலையினை நினைவுகூரும் நிலையில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் வாயிலாக பிரதமர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கறுப்பு யூலையின் இந்த 33ஆவது ஆண்டு நினைவுநாளில், கனடாவில் உள்ள அனைத்து தமிழ் மக்கள், மற்றும் உலககெங்கும் உள்ள தமிழ் மக்களுடன் தாமும் இணைந்து கொள்வதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இநத கொடூரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் நினைவு கூர்வதுடன், இலங்கையில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்வதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரதமர் தெரிவித்துள்ளார். இடம்பெற்ற போர் அழிவுகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள வடுக்கள் ஆற்றப்பட வேண்டும் என்பதனை நினைவூட்டுவதுடன், எம்மத்தியில் பிரிவுகள் இன்றி ஒற்றுமை தழைத்தோங்க வேண்டும் என்பதையும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக நிறைவேற்றுமாறு கனடா தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்தும் எனவும், இலங்கையில் உண்மையான அமைதி, மீள் இணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மக்களுக்கான நீதி என்பற்றையும் நிலைநாட்டுமாறான அழுத்தங்களை கனடா மேற்கொள்ளும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார். The post தமிழர்கள் மீதான கறுப்பு யூலைக் கலவரம் – கனேடியப் பிரதமர் இரங்கல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் கல்கரியைச் சேர்ந்த ஒருவர் துருக்கியில் கைது Posted: 24 Jul 2016 07:28 AM PDT
கடந்த யூலை 15ஆம் திகதி துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்பு முயற்சியுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Davud Hanciஇன் குடும்ப நண்பரான Malik Muradov இது தொடர்பில் மேலும் வெளியிட்டுள்ள தகவலில், கல்கரியில் வசித்துவரும் Davud Hanci என்ற அந்த நபர், கனடா சீர்திருத்தச் சேவை மற்றும் அல்பேட்டா சீர்திருத்தச் சேவை என்பவற்றில் இமாம் ஆக பணியாற்றி வருவதாகவும், கடந்த யூலை 13ஆம் திகதி அவர் தவிடுமுறையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவரின் தந்தையாரைப் பார்ப்பதற்காக Davud Hanciயும் அவரின் குடும்பத்தினரும் துருக்கி சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையியேயே துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து Davud Hanciஇன் குடும்பத்தினர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்த Davud Hanciஇன் மனைவி, தாங்கள் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தாகவும், அதன் பின்னர் அவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியுடன் தொடர்புடையவர்களின் பட்டியலில் Davud Hanci பெயரையும் உள்ளடக்கி துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Davud Hanci கனடா மற்றும் துருக்கிய ஆகிய நாடுகளில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், அவர் அமெரிக்காவைத் தளமாக கொண்ட Fethullah Gulen என்ற துருக்கியின் முன்னாள் சனாதிபதிக்கு சார்பான மதகுருவுடன் பணியாற்றியவர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கனடாவில் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், அவருக்கு தேவை ஏற்படின் கனேடிய தூதரக அதிகாரிகள் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் கனடாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். The post கனடாவின் கல்கரியைச் சேர்ந்த ஒருவர் துருக்கியில் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவின் ஆட்டிக் துருவ ஆய்வுப் பணிகளால் பாதிப்பில்லை – ரஷ்யா Posted: 24 Jul 2016 07:04 AM PDT
ஆட்டிக் பிராந்தியத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்துவது குறித்த ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக, கனேடிய அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள நிலையிலேயே ரஸ்யா தரப்பு இவ்வாறு கருத்துக் கூறியுள்ளது. ரஸ்யாவின் இயற்கைவள அமைச்சர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். ரஸ்யாவின் வெளிப்புற எல்லைகள் ஆட்டிக் பிராந்தியத்தினுள் உள்ள போதிலும், அந்த பிராந்தியத்தில் கனடா மேற்கொள்ள ஆரம்பித்துள்ள ஆய்வுப் பணிகள், அங்குள்ள ரஸ்யாவின் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தவில்லை என்றும் அவர் அதில் விளக்கமளித்துள்ளார். ஆட்டிக் பிராந்தியத்தில் உள்ள ரஸ்யாவின் வெளிப்புற எல்லைகளை கனடாவின் செயற்பாடுகள் அண்டாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கனடா அறிவித்துள்ளது போலவே, தமது பிராந்தியங்களையும் வரையறுப்பதற்கான ஆய்வுகளை ரஸ்யா ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ரஸ்ய இயற்கைவள துறை அமைச்சர், இரு நடவடிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். The post கனடாவின் ஆட்டிக் துருவ ஆய்வுப் பணிகளால் பாதிப்பில்லை – ரஷ்யா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

33 ஆண்டுகளின் முன்னர் இலங்கையில் சிங்கள பேரினவாதிகளால் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை கோரச் சம்பவம் தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
கனடாவின் கல்கரிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் துருக்கியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவரின் குடும்ப நண்பரான Malik Muradov தகவல் வெளியிட்டுள்ளார்.
கனடா ஆட்டிக் துருவப் பிராந்தியத்தில் மேற்கொண்டுவரும் ஆய்வுப் பணிகள் தொடர்பில் தாம் கவலை கொள்ளவில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.