Tamil Star |
- ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
- ரொரன்ரோவிற்கு வெப்ப எச்சரிக்கை
- பாலுடன் எதை சேர்க்க கூடாது?
| ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் Posted: 12 Jul 2016 05:25 AM PDT
இரவு சுமார் 11 மணியளவில் Queen Street மற்றும் Lansdowne Avenue பகுதியில் முதல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும், சிறிது நேரத்தின் பின்னர் Morningside Avenue பகுதியில் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளன. இந்த இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்த்துறையினர், இந்த இரண்டு சம்பவங்களின் போதும் எவரும் காயமடைந்தமை தொடர்பிலான முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள குறித்த அந்த இரண்டு இடங்களில் இருந்தும் வெற்றுத் தோட்டாக்களையும் காவல்த்துறையினர் கண்டெடுத்துள்ளதுடன், மேலதிக தடயங்களையும் சாட்சியங்களையும் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எவையும் இதுவரை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. The post ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவிற்கு வெப்ப எச்சரிக்கை Posted: 12 Jul 2016 05:22 AM PDT
இன்று பகல் வேளைகளில் 32 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும், ஈரப்பதன் காரணமாக அதன் தாக்கம் மேலும் அதிகமாக உணரப்படலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான அதிதீவிர வெப்பநிலை எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இரவு வேளைகளில் வெப்பநிலை சுமார் 21 பாகை செல்சியஸ் ஆக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெப்ப எச்சரிக்கை ஹமில்ட்டன், பீல், யோர்க், டூர்ஹாம், நயாகரா ஆகிய பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் சுற்றுச்சூழல் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் இவ்வாறு வெப்பம் அதிகமான வேளைகளில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ளக் கூடும் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், தமது அயலவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும், பாதிப்புக்கள் ஏற்படும் போது உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post ரொரன்ரோவிற்கு வெப்ப எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 12 Jul 2016 05:17 AM PDT
மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும். அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும். பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். The post பாலுடன் எதை சேர்க்க கூடாது? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரொரன்ரோவின் மேற்கு பகுதியில் நேற்று இரவு வேளை இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ரொரன்ரோ நகரம் உட்பட ரொரன்ரோ பெரும்பாகத்திற்கான அதி தீவிர வெப்ப எச்சரிக்கையினை கனடா சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்துள்ளது.
கால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.