Tamil News | Online Tamil News |
- அருணாச்சல பிரதேச கவர்னர் மாற்றப்படுவாரா?
- ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிக்கு அங்கீகாரம் ரத்து
- வெற்றி!அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை தொடர்கிறது காங்., * கவர்னரின் கலைப்பு உத்தரவு செல்லாது என கோர்ட் தீர்ப்பு
- தென்சீனக் கடலில் தைவான் போர்க்கப்பல் ரோந்தால் பதற்றம் !அமெரிக்கா தூண்டிவிடுவதாக சீனா ஆத்திரம்
- மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கு சூடுபிடித்தது ராம்குமாரிடம் மூன்று நாள் போலீஸ் காவல் விசாரணை
- மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு: அரசு மருத்துவமனைகளில் அவதி
- பழைய பென்ஷன் திட்டம்: அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்
- மண்ணெண்ணெய் விலை உயர்கிறது மானியத்தை குறைக்க அரசு அதிரடி
- 'கல்வி காவி மயமாகாது!':ஜாவடேகர் உறுதி
- தடபுடல் விருந்துடன் சி.எம்.டி.ஏ., வசூல் வேட்டை * திட்ட அனுமதி ஆய்வு என்று கூறி அடாவடி
- சென்னையில் ரயில் பெட்டிகளில் திடீர் தீ
- பெட்ரோலுக்கு ஒரே சீரான விலை; அரசுக்கு ஏ.ஐ.பி.டி.ஏ., கோரிக்கை
- தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம்
- இனி எனக்கு வேலை இல்லை: கேமரூன் கடைசி பேச்சு
| அருணாச்சல பிரதேச கவர்னர் மாற்றப்படுவாரா? Posted: 13 Jul 2016 09:48 AM PDT வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ள உச்ச நீதிமன்றம், கவர்னர் ராஜ்கோவாவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, ராஜ்கோவாவை பதவியில் அமர்த்திய, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, அவரை மாற்றி, புதிதாக ஒருவரை அந்த மாநிலத்தில் பதவியில் அமர்த்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், இது போன்ற சூழ்நிலையில் தான், 2005ல், பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அரசை, 'டிஸ்மிஸ்' செய்த கவர்னர் பூட்டா சிங், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் பதவி விலக நேரிட்டது. ... |
| ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிக்கு அங்கீகாரம் ரத்து Posted: 13 Jul 2016 09:50 AM PDT மும்பை: மஹாராஷ்டிராவில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட 191 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தும், மாநில தேர்தல் கமிஷன், ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப்படும், ஓவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ் - இ - இத்தேஹதுல் முஸ்லிமீன் உட்பட, 191 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. வருமான வரிக் கணக்கு மற்றும் தணிக்கை செய்த கணக்குகளை தாக்கல் செய்ய தவறியதால், இந்த கட்சிகள் மீது, மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹாராஷ்டிர மாநில சட்டசபையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிக்கு, இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். ... |
| Posted: 13 Jul 2016 10:10 AM PDT புதுடில்லி : 'செவன் சிஸ்டர்ஸ்' என்றழைக்கப்படும், இந்தியாவின் வட கிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில், மீண்டும், காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது; அங்கு, காங்கிரஸ் அரசை கலைக்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் கவர்னர் பிறப்பித்திருந்த உத்தரவுகள் அனைத்தையும், ரத்து செய்துள்ளது. இது, காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது; காங்., ஆட்சியைத் தொடரவும் வழி வகுத்துள்ளது. மொத்தம், 60 தொகுதிகள் உடைய அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு, 2014ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் ... |
| தென்சீனக் கடலில் தைவான் போர்க்கப்பல் ரோந்தால் பதற்றம் !அமெரிக்கா தூண்டிவிடுவதாக சீனா ஆத்திரம் Posted: 13 Jul 2016 10:15 AM PDT தைபே, : 'தென்சீனக் கடல் பகுதியில் சீனா, வரலாற்று உரிமைகள் கோர சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை' என, சர்வதேச தீர்ப்பாயம் கூறியதை அடுத்து, தைவான் நாட்டு போர்க்கப்பல் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது; இதனால், தென்சீனக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள பல தீவுகளிலும், சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு, பிலிப்பைன்ஸ், மலேஷியா, புருனே, வியட்நாம், தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக, ஐ.நா.,வின் சர்வதேச தீர்ப்பாயம், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில், ... |
| மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கு சூடுபிடித்தது ராம்குமாரிடம் மூன்று நாள் போலீஸ் காவல் விசாரணை Posted: 13 Jul 2016 10:33 AM PDT சென்னை:மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம், மூன்று நாட்கள் போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து, சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, சூளைமேடு தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், சந்தான கோபால கிருஷ்ணன். அவரது இளைய மகள் சுவாதி, 24; மென்பொறியாளர். அவர், ஜூன், 24, காலை, 6:40 மணியளவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால், அரிவாளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்டார்.இது தொடர்பாக, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அடுத்த, ... |
| மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு: அரசு மருத்துவமனைகளில் அவதி Posted: 13 Jul 2016 10:35 AM PDT தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்சூரன்ஸ் திட்டத்தில், மருந்து வாங்க நிர்ப்பந்திப்பதே, இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான, மருந்து, மாத்திரைகளை, தமிழ்நாடு மருந்து கழகம் சப்ளை செய்கிறது. இக்கழகம் மூலம் சப்ளை செய்யப்படாத மருந்து, மாத்திரைகள், மருத்துவமனை பொறுப்பாளர்கள் மூலம், உள்ளூரில் கொள்முதல் செய்யப்படுகின்றன. சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில், குளுக்கோஸ் திரவம், இதய நோயாளிகளுக்கான ... |
| பழைய பென்ஷன் திட்டம்: அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Posted: 13 Jul 2016 10:38 AM PDT சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள், கடந்த பிப்., 10ல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 10 நாட்கள் நீடித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிப்., 19ல் வெளியிட்ட, 110வதுவிதியின் கீழான அறிவிப்பில், 'அரசு ஊழியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய, வல்லுனர் குழு அமைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால், ... |
| மண்ணெண்ணெய் விலை உயர்கிறது மானியத்தை குறைக்க அரசு அதிரடி Posted: 13 Jul 2016 10:41 AM PDT புதுடில்லி,: மண்ணெண்ணெய் மீதான மானிய சுமையை குறைக்கும் வகையில், அடுத்த 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா விலை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, அரசு மூத்த அதிகாரி கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல், மானிய விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை தவிர்க்க, மண்ணெண்ணெய் மீதான மானியச் சுமையை குறைக்க, பெட்ரோலியத் துறை முடிவு செய்தது. எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு, பெட்ரோலியத் ... |
| 'கல்வி காவி மயமாகாது!':ஜாவடேகர் உறுதி Posted: 13 Jul 2016 10:46 AM PDT டில்லியில் நேற்று,ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, பாரத் சிக் ஷா மண்டல் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: மேம்படுத்தப்படும்கல்வி என்பது, தனிப்பட்ட எந்தவொரு கட்சி அல்லது நபர் சம்பந்தப்பட்டது அல்ல; பா.ஜ., - காங்., அல்லது இடதுசாரி கட்சியுடன் தொடர்புடையதல்ல; இங்கே வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், நான் வந்துள்ளேன்.பிறர் கூப்பிட்டாலும், அங்கே செல்லத் தயாராக உள்ளேன். கல்வி முறை மற்றும் கல்வி மையங்கள், காவி மயமாக்கப்படலாம் என, யாரும் அச்சப்படத் தேவையில்லை. கல்வி கொள்கைகளை ... |
| தடபுடல் விருந்துடன் சி.எம்.டி.ஏ., வசூல் வேட்டை * திட்ட அனுமதி ஆய்வு என்று கூறி அடாவடி Posted: 13 Jul 2016 11:13 AM PDT உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் திட்ட அனுமதிகளை ஆய்வு செய்வதற்காகச் செல்லும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், தடபுடல் விருந்து, 'சிறப்பு கவனிப்பு' என அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வந்த புகாரால், உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகரமைப்பு சட்டப்படி, சாதாரண குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை, அந்தந்த பகுதிகளின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சி.எம்.டி.ஏ., பகிர்ந்தளித்து உள்ளது. இதில், உரிய கண்காணிப்பு இல்லாததால், பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன.குறிப்பாக, குன்றத்துார், ... |
| சென்னையில் ரயில் பெட்டிகளில் திடீர் தீ Posted: 13 Jul 2016 11:49 AM PDT சென்னை: சென்னை பெரம்பூர் கேரேஜ் லோகோ நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ரயில் பெட்டிகளில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நிலக்கரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில்தீ பிடித்தது. இந்த தீயை அணைக்க கீழ்பாக்கம் அயனாவரம், ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயனைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. சேத விபரங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி விருகின்றனர். எனினும்ரயில் பெட்டிகள் முற்றிலும் கருகின. ... |
| பெட்ரோலுக்கு ஒரே சீரான விலை; அரசுக்கு ஏ.ஐ.பி.டி.ஏ., கோரிக்கை Posted: 13 Jul 2016 12:44 PM PDT சண்டிகர் : பெட்ரோல், டீசலுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான விலை நிர்ணயிக்க வேண்டும் என, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கூட்டமைப்பான - ஏ..ஐ.பி.டி.ஏ., தெரிவித்துள்ளது. இதன் தலைவர், அஜய் பன்சால் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதற்கு, 'வாட்' வரி தான் காரணம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 60 பைசா முதல், 4 ரூபாய் வரையும், டீசலுக்கு, 1 ரூபாய் முதல், 7.50 ரூபாய் வரையும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான், மிக அதிகமாக, 35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கோவாவில், வரி குறைவாக உள்ளது. டீசலுக்கு ராஜஸ்தான், ... |
| தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம் Posted: 13 Jul 2016 01:56 PM PDT ஐதராபாத்: கல்வி மற்றும் வேலைக்காக நாட்டின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் சென்று வரும் நிலையில், தற்போது, தனியாக சுற்றுலா செல்வதில் தென் மாநில பெண்கள், முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனித்து சுற்றுலா செல்வதில், பஞ்சாப் மாநில பெண்கள், 66 சதவீதத்துடன் முதலிடத்தையும்; தெலுங்கானா பெண்கள், 60 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும்; கேரளா பெண்கள், 58 சதவீதத்துடன், மூன்றாவது இடத்தையும்; தமிழக பெண்கள், 55 சதவீதத்துடன், நான்காவது இடத்தையும் ... |
| இனி எனக்கு வேலை இல்லை: கேமரூன் கடைசி பேச்சு Posted: 13 Jul 2016 02:20 PM PDT லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவி வகித்தது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என பதவி விலகிய டேவிட் கேமரூன் கூறினார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா? வேண்டாமா? என்று நடந்த பொது வாக்கெடுப்பில், பெருபான்மை மக்கள் விலகுவதுஎன ஓட்டளித்தனர். இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து , தெரசா மே அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது.இந்நிலையில் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 14,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |