Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கபாலி படமே பிரமாண்டம் தான்: தயாரிப்பாளர் தாணு

Posted:

'அமெரிக்கா செல்வதற்கு முன், கபாலி படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, அவருக்கே உரிய பாணியில், 'படம் ச்சும்மா அப்படியே பிரமாதமா வந்திருக்கு' என, கைகளை அகல விரித்து சொல்லி சந்தோஷப்பட்டார்' என்று, கபாலி பட தயாரிப்பாளர் எஸ்.தாணு பேட்டியளித்தார்.

கபாலி படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பட வெளியீடு போன்ற ...

பிரேக் கிடைக்குமா?

Posted:

சூர்யா, சிம்பு, அஜித் போன்ற நடிகர்களுக்கு தேக்கநிலை ஏற்பட்டபோது, பிரேக் கொடுத்தவை, கவுதம் மேனன் இயக்கிய படங்கள் தான். அந்த வகையில், மாரி, தங்கமகன் படங்களால் கிடைத்த ஏமாற்றத்தை, என்னை நோக்கி பாயும் தோட்டா, தீர்த்து வைக்கும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார் தனுஷ். கவுதம் மேனன் படங்கள், வழக்கமாக, போலீஸ் படங்களாகத் தான் இருக்கும். ஆனால், ...

மன்றம் வேண்டாம்; பட்டம் போதும்!

Posted:

'ரசிகர் மன்றமே வேண்டாம்' என்ற முடிவுடன் இருக்கிறார் விஜயசேதுபதி. ஒரு படம் ஹிட் கொடுத்ததுமே, அடியாட்கள், ரசிகர் மன்றங்கள் என, அலப்பறையை கொடுப்பவர்களுக்கு மத்தியில், விஜயசேதுபதியின் இந்த முடிவு, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், தன் குருநாதர் சீனு ராமசாமியின் வற்புறுத்தலுக்கு ஏற்ப, 'மக்கள் செல்வன்' என்ற ...

நடிச்சா ஹீரோ தான்

Posted:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித் தான் போன்ற, சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்த படங்கள், ஊற்றிக் கொண்டன. ஆனாலும், 'நடித்தால் ஹீரோ தான்' என, பிடிவாதத்துடனும், உறுதியுடனும் இருக்கிறார் சந்தானம். இதற்கு இடையில், 'ரசிகர் மன்றங்கள் இருந்தால் தான், எதிர்காலத்தில் மிகப் பெரிய நடிகராக வலம் வர முடியும்' என, யாரோ அவருக்கு, ...

பிந்து மாதவிக்கு யோகம்!

Posted:

'நேற்று அறிமுகமான நடிகையர் கூட, ஏகப்பட்ட படங்களுடன் கல்லா கட்டுகின்றனர்; முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேருகின்றனர். நான் நடிக்க வந்து, எட்டு ஆண்டுகளாகியும், சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே' என, புலம்பி வந்த ஆந்திர அழகி பிந்து மாதவி, இப்போது, சற்று நிம்மதி அடைந்துள்ளார். சமீபத்தில் வெளியான, ஜாக்சன் துரை படத்தில், தன் நடிப்புக்கு ...

‛டுயூப்லைட்'டில் கத்ரீனா!

Posted:

சுல்தான் படத்தை முடித்த கையுடன், அடுத்த படத்துக்கான வேலைகளில், மளமளவென களமிறங்கி விட்டார் சல்மான் கான். கபீர் கான் இயக்கும் அந்த படத்துக்கு, டுயூப்லைட் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே தான், இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஹாலிவுட் படங்களில் அவர் பிசியாக இருப்பதால், கத்ரீனா கைப்புக்கு, அந்த வாய்ப்பு தேடி ...

1 கோடியைத் தொட்ட 'தெறி' டிரைலர்

Posted:

'கபாலி' டீசர் வந்த பிறகு அதற்கு முந்தைய டீசர், டிரைலர் சாதனைகளை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். ஆனாலும், விஜய் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் 'தெறி' டிரைலர் சாதனையை மறந்திருக்க மாட்டார்கள். 'கபாலி' படத்திற்கு இதுவரை டீசர் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் டீசர் வெளியாகவில்லை. அதுவரை 'தெறி' டிரைலர் அதன் சாதனையை ...

5வது ஆண்டில் 'நான் ஈ'

Posted:

'பாகுபலி' படம் வெளிவரும் வரை எஸ்.எஸ்.ராஜமௌலி யார் என்பது தீவிர சினிமா ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால், அந்தப் படத்திற்கும் முன்பே 'நான் ஈ' என்ற வித்தியாசமான படம் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை வியக்க வைத்தவர் ராஜமௌலி. 'நான் ஈ' என்று 2012ம் ஆண்டிற்கு முன்பு அப்படம் பற்றிய விளம்பரம் வந்த சமயத்தில் 'ஈ'யை ...

மதன் விவகாரம் : போலீஸ்க்கு மேலும் மூன்று வாரம் அவகாசம்

Posted:

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர், கடந்த மே 28-ம் தேதி, காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதி ஆகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். இதுஒருபுறம் இருக்க மதன் மீது ஏராளமான பண மோசடி புகார்களும் ...

மேஜிக்கால் உலகத்தை ஆள நினைக்கும் திலீப்..!

Posted:

தனது முந்தைய படமான '2 கண்ட்ரீஸ்' படத்தில் அகில உலக பொய் பேசுபவர்களின் தலைவர் ரேஞ்சுக்கு நடித்து படத்தை சூப்பர்ஹிட்டாக்கினார் திலீப்.. குழந்தைகளை டார்கெட் பண்ணி, புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திலீப். படத்தின் பெயர் 'புரபெஷர் டிங்கன்'. பெயரை பார்த்ததுமே இது நார்மலான புரபெஷர் மாதிரி தெரியலையே என தோன்றுகிறது ...

பேய்களை கலாய்க்க வரும் சந்தானம்

Posted:

சந்தானம் படம் என்றால் காமெடிக்கு நிச்சயம் கேரண்டி. அந்த வகையில், டிவி.,யில் சந்தானம் மற்றும் குழுவினர் நடித்து மிக பிரபலமான லொள்ளு சபா நிகழ்ச்சியை இயக்கிய இயக்குனர் ராம் பாலா, சந்தானத்தை வைத்து ‛‛தில்லுக்கு துட்டு'' என்ற படத்தை எடுத்துள்ளார். விஷால், ஆர்யா என்று அத்தனை பேரையும் கலாய்த்தவர் முதன்முதலாக பேயை இந்த படத்தில் ...

அம்மாவுக்கும் மகளுக்கும் ஜோடியாக நடித்ததில் யாருக்கு முதலிடம்..?

Posted:

எந்த மொழி சினிமாவை எடுத்துக்கொண்டாலும் அங்கேயுள்ள சூப்பர்ஸ்டார்கள் மட்டுமே பண்ணக்கூடிய சாதனை என ஒன்று இருக்கிறது.. ஒருகாலத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகையின் மகளுக்கும் ஜோடியாக நடித்து சாதனை செய்வது என்பது சினிமாவில் மிகப்பெரிய சாதனை தான். இந்த சாதனையை கூட எல்லா சூப்பர்ஸ்டார்களாலும் பண்ணிவிடவும் முடியாது.. தமிழில் ...

அமலாபால் - மஞ்சு வாரியர் மோதலை வேடிக்கை பார்க்கும் வரலட்சுமி..!

Posted:

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகின்றன.. அதில் இரண்டு படங்கள் இன்றே வெளியாகிவிட்டன. ஒன்று குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா ஆகியோருடன் அமலாபால் இணைந்து நடித்துள்ள 'ஷாஜகானும் பரீக்குட்டியும்'. போபன் சாமுவேல் இயக்கியுள்ள இந்தப்படம் நாற்கோண காதல் கதையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறதாம். ...

தெலுங்கு பேசும் மெட்ரோ

Posted:

பெருநகரங்களில் மலிந்து வரும் சென்யின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கிய இப்படம் ஜூன் இறுதியில் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் மெட்ரோ படத்தின் தெலுங்கு ரீமேக் ...

நாகார்ஜூனாவிற்கு அனுஷ்கா ஜோடி இல்லை : இயக்குனர் விளக்கம்

Posted:

பக்தி படங்களை இயக்கி வெற்றி கண்ட பிரபல தெலுங்கு இயக்குனர் ராகவேந்திர ராவ் பெருமாள் பக்தர் ஹாத்தி ராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தை இயக்குகின்றார். நாகார்ஜூனா இப்படத்தில் ஹாத்தி ராம் பாபாவாக நடிக்கின்றார். இப்படத்தில் நடிகை அனுஷ்காவும் நடிக்கின்றார்.

அனுஷ்கா ...

கோபிசந்துடன் ஜோடி சேரும் கேத்ரின் திரைஷா

Posted:

அல்லு அர்ஜூனுடன் இணைந்து சரைய்னோடு படத்தில் நடித்த நாயகி கேத்ரின் திரைஷா நடிகர் கோபிசந்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஆக்சிஜன் எனும் படத்தில் நடித்து வரும் கோபிசந்த் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சம்பத் நந்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகி வேடத்திற்கு நடிகை ...

பூஜையுடன் துவங்கியது ‛அஜித்-57'

Posted:

சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் சிவா, தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். இப்போது மூன்றாவது முறையாக இந்தக்கூட்டணி இணைந்துள்ளது. அஜித்தின் 57-வது படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, அதனால் அஜித்-57 என்ற பெயரிலேயே இப்பட செய்திகள் ...

தூசுதட்டப்படும் நிவேதா தாமஸின் முதல் தெலுங்கு படம்

Posted:

போராளி, நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம் போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நிவேதா தாமஸ் நாணிக்கு ஜோடியாக நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் ஜூன் இறுதியில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. மேலும் நிவேதா தாமஸிற்கு டோலிவுட்டில் நல்ல அறிமுகத்தை இப்படம் கொடுத்தது. இந்நிலையில் நிவேதா தாமஸ் நடித்து பின்னர் ...

வித்தியாசமான தானம்... நெகிழ வைத்த சார்மி

Posted:

சார்மியை தமிழ் ரசிகர்கள் மறந்தே போயிருப்பார்கள். 'காதல் அழிவதில்லை' படத்தில் சிம்புவுடன் நாயகியாக அறிமுகமானவர். அதன் பின் தமிழில் சில படங்களில் நடித்தாலும அவரால் இங்கு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தெலுங்கிற்குச் சென்று அங்கு சில காலம் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தார்.

சமீபத்தில் சார்மி செய்துள்ள ...

வட இந்தியாவில் 1000 தியேட்டர்களில் 'கபாலி' ரிலீஸ்

Posted:

'கபாலி' படத்தின் ரிலீஸ் ஜுலை 22ம் தேதிதான் என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. அதேசமயம் ஆகஸ்ட்டிற்கும் படம் தள்ளிப்போகும் என பேசப்படகிறது. கடந்த சில நாட்களாகவே அனைத்து மீடியாக்களிலும் கபாலி படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றித்தான் செய்தியாக உள்ளது. எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் சென்சார் நடந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™