Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மனைவியின் போட்டோவை பேஸ்புக்கில் போட்டதால் நடிகருக்கு கண்டனம்..!

Posted:

சோஷியல் மீடியாவில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்கிற சூழல் உருவாகிவிட்டது. நான் பத்து ரூபாய் தானம் செய்தேன் என ஸ்டேட்டஸ் போட்டால்.. சந்தோஷம் என பத்துபேரும், நீ யார் தானம் செய்ய, எத்தனை பேருக்கு செய்தாய், பத்து ரூபாய்தான் செய்யமுடிந்ததா என கேள்விகளால் துளைத்தெடுக்க நூறு பேரும் தயாராக இருப்பார்கள்.. இருக்கிறார்கள்.. ...

ஆமீர்கான் கையால் விருது பெற்ற துல்கர் சல்மான்..!

Posted:

நடிகர் துல்கர் சல்மானுக்கு. இரண்டு கௌரவங்கள் ஒரே நேரத்தில் கிடைத்திருக்கின்றன. ஆம்.. சமீபத்தில் ஜி.க்யூ(GQ) என்கிற பத்திரிகை தனது 7ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவை நடத்தியது. இந்த விழாவில் இந்தியாவின் சிறந்த ஆடையணிந்த பிரபலங்கள் நூறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த ஆடையணிந்த மனிதர் (Best Dressed Man) என்கிற விருது ...

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் புரியாத புதிரா?

Posted:

நடிகை நயன்தாராவின் காதல் அன்று முதல் இன்று வரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. மிகவும் தீவிரமாக காதலிப்பார். பிறகு அதே தீவிரத்துடன் பிரிவார். ஆரம்பத்தில் மலையாள இயக்குனர் ஒருவரை தீவிரமாக காதலித்தார். தமிழ் படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தும். அந்த இயக்குனர் கண்டிஷன் போட அவரை தூக்கி எறிந்து விட்டு ...

தமிழில் வெளிவருகிறது 'ஐஸ் ஏஜ் 5'

Posted:

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை கட்டிப்போட்ட படம் 'ஐஸ் ஏஜ்' அனிமேசன் படம். 2002ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளிவந்தது. சிரிஷ் வெட்ஜ் இயக்கினார். 56 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்ட படம் 383 டாலர் சம்பாதித்தது. இந்த மாபெரும் வெற்றியின் காரணமாக அடுத்தடுத்து ஐஸ் ஏஜின் பல பாகங்கள் வெளிவந்தது.
தற்போது இதன் 5ம் பாகம் வெளிவர இருக்கிறது. ...

இறுதி கட்டத்தில் கிடாரி

Posted:

'வெற்றிவேல்' படத்திற்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் 'கிடாரி'. தனது கம்பெனி புரொடக்ஷன் சார்பில் அவரே தயாரிக்கிறார். சசிகுமார் ஜோடிகளில் ஒருவராக 'வெற்றிவேல்' படத்தில் நடித்த நிகிலா விமல் இதிலும் சசிகுமார் ஜோடியாக நடிக்கிறார். வசந்தபாலனின் உதவியாளர் பிரசாந்த் முருகன் இயக்குகிறார். துர்பகா சிவா என்ற புதுமுகம் இசை ...

புற்று நோயை வெல்ல முடியும் என்பதற்கு நானே உதாரணம்: கவுதமி

Posted:

பெண் எழுத்தாளர் இஷா நாகப்பன் 'ஜஸ்ட் அனதர் டீனேஜ் கேர்ள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நடந்தது. புத்தகத்தை கவுதமி வெளிட்டார். விழாவில் கவுதமியின் லைஃப் அகைன் (மீண்டும் வாழ்வு) என்ற அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவுதமி பேசியதாவது:

புற்று நோய் என்பது வாழ்வின் ...

கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்: ரஜினி மீதான வழக்கு தள்ளி வைப்பு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளிவரும்போது பெங்களூருவில் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினி கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். இதனை எதிர்த்து பெங்களூரைவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பெங்களூர் மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "ஒவ்வொரு முறை ரஜினி படம் ...

இலியானாவுக்கு திருமணம்: ஆஸ்திரேலிய போட்டோகிராபரை மணக்கிறார்

Posted:

தமிழில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ண இயக்கிய 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு ஷங்கரின் 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்தார்.
இலியானாவுக்கும் நயன்தாரா போன்று நிறைய காதல்கள் வந்து ...

11 படங்கள் 50 விருதுகள்: அடூருக்கு இன்று 75வது பிறந்த நாள்

Posted:

மலையாள சினிமாவின் பிதாமகனாக கொண்டாடப்படும் அடூர் கோபாலகிருஷ்னுக்கு இன்று 75 வது பிறந்த நாள். அவரை பற்றிய சில நினைவுகள்...

அடூர் கோபால கிருஷ்ணன் புனே திரைப்படக் கல்லூரியில் சினிமா இயக்கத்தில் பட்டம் பெற்று முறைப்படி சினிமாவுக்கு வந்தவர். இவரது முதல் திரைப்படம் 'ஸ்வயம்வரம்' 1972ம் ஆண்டு வெளிவந்தது. மலையாள சினிமாவில் ...

ஒரே மாதிரியாக நடித்தால் போரடித்து விடும்: மஞ்சு வாரியர்

Posted:

மலையாளத்தில் நம்பர் ஒண் நடிகையாக இருந்த மஞ்சு வாரியார் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு 14 வருடங்கள் அவருடன் வாழ்ந்தார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது மஞ்சு வாரியர் திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இவர் மீண்டும் நடித்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் பெரிய ...

தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைந்து செயல்பட அம்மா முடிவு

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் வந்த பிறகு பல்வேறு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்கு மலையாள நடிகர்கள் தங்கள் ஆதரவை அளித்தனர்.
நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு ஒத்துழைத்த மலையாள நடிகர்களுக்கு பாராட்டு ...

பிளாஷ் ஃபேக்: எம்.ஜி.ஆருக்கு பதில் நடித்த ரஜினி

Posted:

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் தனி கணக்கராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் சத்யா மூவீஸ் என்ற பெயரில் தனி நிறுவனம் தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். அதில் பல படங்களுக்கு ஆர்.எம்.வீரப்பனே கதை எழுதியுள்ளார். அப்படி அவர் ...

என் படங்களுக்கு சென்சார் பிரச்னை வந்ததில்லை : ஷாருக்கான்

Posted:

சமீபத்தில் வெளியான உட்தா பஞ்சாப் படம், சென்சார் போர்டின் சான்றிதழ் பெறுவதற்காக பல போராட்டங்களை எதிர்கொண்டது. உட்தா பஞ்சாப் படம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் ஷாருக்கானிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய ஷாருக்கான், நான் குடும்ப படங்களில் நடிப்பதால் எனது படங்களுக்கு சென்சார் போர்டு பிரச்னை செய்தது ...

ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்'

Posted:

சிறுவர், சிறுமிகளின் நடன திறமைகள், பாடும் திறமைகளை வெளிப்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதன் முறையாக அவர்களின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்த இருக்கும் நிகழ்ச்சி 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்'. இதில் 4 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள் பங்கேற்கலாம்.
நிகழ்ச்சியில் ...

தங்கல் பட பற்றி மன திறந்த அமீர்கான்

Posted:

தனது 50வது வயதை நிறைவு செய்துள்ள நடிகர் அமீர்கான், தனது அடுத்த படமான தங்கல் படத்தில் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் டில்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமீர்கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்கல் ...

பிரியங்காவுடன் ஆட மறுத்தது ஏன்? தீபிகா விளக்கம்

Posted:

சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் (ஐஐஎப்ஏ) வழங்கும் விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் இணைந்து நடனம் ஆட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில், பிரியங்காவுடன் சேர்ந்து நடனம் ஆட தீபிகா மறுத்துவிட்டார். இந்நிலையில், தான் பிரியங்காவுடன் சேர்ந்து ஆட மறுத்ததற்கு என்ன ...

ஜோலி எல்எல்பி 2-ல் நடிக்கிறார் அக்சைகுமார்

Posted:

ஜோலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அக்சைகுமார் நடிக்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். இதனை தற்போது அக்சைகுமார் தனது பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இது பற்றி அக்சைகுமார் கூறுகையில், ஜோலி எல்எல்பி 2 படத்தின் கதை அற்புதமானது. இந்த கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த கதைக்காக சுபாஷ் கபூர் ...

கரீனா கர்ப்பத்தை உறுதி செய்த சைப் அலி கான்

Posted:

பாலிவுட்டின் காதல் ஜோடியான கரீனா கபூர் கான் - சைப் அலி கான் தம்பதிக்கு விரைவில் முதல் குழந்தை பிறக்க உள்ளதாக சைப் அலி கான் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த கரீனா கபூரும், சைப் அலி கானும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வந்த கரீனாவிடம் எப்போது குழந்தை ...

'கபாலி' பாடல்கள் மலாய் மொழியில் வெளியீடு

Posted:

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 'கபாலி' திரைப்படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் இதுநாள் வரையில் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானதில்லை. பல வருடங்களாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்ப் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தக் காலத்தில் ...

விரைவில் மணிரத்னம் படம் ஆரம்பம்

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்க உள்ள புதிய படம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னம் இயக்கிய 'ஒரு காதல் கண்மணி' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இருந்தாலும் தனது அடுத்த படத்தை அவர் உடனே ஆரம்பிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™