Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரூ 16 கோடிக்கு விலைபோன ஜனதா கேரேஜ் தொலைகாட்சி உரிமம்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பரில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. ...

பாடலுடன் துவங்கும் மகேஷ்-முருகதாஸின் வாஸ்கோடகாமா

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்ட்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாஸ்கோடகாமா என தற்சமயம் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நாளை(ஜூலை 29) முதல் துவங்குகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மகேஷ் பாபு படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பை பாடலுடன் துவங்க முருகதாஸ் முடிவு ...

கை நிறைய படங்களுடன் மகிழ்ச்சியில் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரைஉலகிற்கு சென்றார். முதலில் டோலிவுட்டின் இரண்டாம் தட்டு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார். வேங்கடகிரி ...

மாயவன் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகா

Posted:

ரன், ஒக்க அம்மாயி தபா போன்ற படங்களுக்கு சுதீப் கிஷான் நடிக்கும் மாயவன் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ளது. திருக்குமரன் என்டர்டையின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தை சிவி குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஹன்சிகா இன்று(ஜூலை 29) வெளியிட்டுள்ளார். சுதீப் ...

கன்னடத்தில் ரீமேக்காகும் நானி-யின் ஜென்டில்மேன்

Posted:

நானி நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் சக்கைபோடு போட்டது. இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஜென்டில்மேன் படத்தின் கன்னட ரீமேக் வாயிலாக கன்னட திரை உலகில் நாயகனாக ...

கேரளாவில் சூர்யாவின் 'அயன்' படத்துக்கு மீண்டும் மரியாதை..!

Posted:

சில தினங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வந்து சென்றது.. இதை தமிழ்நாட்டில் உள்ள அவரது ரசிகர்கள் வழக்கம்போல கொண்டாடி முடித்துவிட்டார்கள். ஆனால் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்களோ இந்த பிறந்தநாளுக்காக வித்தியாசமான ஒரு ஏற்பாட்டை செய்துள்ளார்கள். உண்மைதான்.. கேரளாவில் சூர்யாவுக்கென பலமான ரசிகர் மன்றங்கள் ...

ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் மடோனா..!

Posted:

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மலையாளத்தில் திலீப் நடித்த 'கிங் லையர்' என்கிற படம் வெளியாகி சூப்பர்ஹிட்டும் ஆனது. நடிகரும் இயக்குனருமான லால் இயக்கிய இந்தப்படத்திற்கு அவரது நண்பரான சித்திக் தான் திரைக்கதை எழுதியிருந்தார்.. அதில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். இப்போது சித்திக் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ...

படப்பிடிப்பில் அழுதுவிட்டு டப்பிங்கில் திணறிய நடிகை..!

Posted:

சமீபத்தில் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் நான்கு படங்கள் ரிலீசாகின. இந்த நான்கில் பிஜூமேனன்-ஆசிப் அலி இணைந்து நடித்த' 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்கிற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எந்த அளவுக்கு என்றால் சமீபத்தில் கேரளாவில் வெளியான 'கபாலி'க்காக மம்முட்டி நடித்த 'கசபா' உட்பட மற்ற மூன்று படங்களுக்கும் ...

அனுமனை மோசமாக சித்தரித்த மலையாள படத்துக்கு சான்றிதழ் மறுப்பு..!

Posted:

தங்களது மனதில் உருவாகும் படைப்புகளை திரைவடிவங்களாக உயிர்கொடுத்து, சென்சார் போர்டின் முன்பாக சான்றிதழ் பெற சென்றால் அதை வெட்டு, இதை தூக்கு என அவர்களது அதிகாரம் எல்லை மீறிப்போகிறது என ஒரு பக்கம் பல இயக்குனர்கள் கொந்தளிக்கும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.. ஆனால் படைப்பாளிகள் என்கிற பெயரில் இஷ்டத்திற்கு அவர்கள் ...

ஷாருக்கை பார்த்ததும் வசனத்தை மறந்த மகிரா கான்

Posted:

ராஸ் படம் தள்ளி போவதால், பட தயாரிப்பாளர்கள் மீது பாகிஸ்தான் நடிகையான மகிரா கான் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ள மகிரா, ஷாருக்கானுடன் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறினார். அப்போது அவர், எனது கனவு நினைவாகி உள்ளது. அவருடன் நடிப்பது உற்சாகமாகவும், அதே சமயம் படபடப்பாகவும் ...

'ஹேப்பி வெட்டிங்' மலையாள ரீமேக்கில் உதயநிதி..!

Posted:

தொடர்ந்து நம்ம இயக்குனர்கள் உருவாக்கிய கதைகளிலேயே நடித்துவந்த உதயநிதி, கடந்த முறை இந்திப்படமான 'ஜாலி எல் எல் பி' படத்தை தமிழில் 'மனிதன்' என்கிற பெயரில் ரீமேக் பண்ணி நடித்தார்.. ஓரளவு நல்ல பெயரும் அந்தப்படத்தால் கிடைத்தது.. சரி, ஆசைக்குத்தான் ரீமேக் படத்தில் நடிக்கிறார் என நினைத்தால், இப்போது மலையாளத்தில் சில மாதங்களுக்கு ...

அடர்ந்த காஷ்மீர் பனியில் உருவாகும் திகில் படம்

Posted:

'நஞ்சுபுரம்', 'அழகு குட்டி செல்லம்' படங்களை இயக்கிய சார்லஸ் தற்போது சாலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் 'எப்படி மனதிற்குள் வந்தாய்' படத்தில் நடித்த விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். 'அழகு குட்டி செல்லம்' படத்தில் நடித்த கிரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் உள்பட பலர் ...

இசை ஆல்பத்தில் நடிக்கிறார் எமி ஜாக்சன்

Posted:

டி சீரியஸ் பூஷன் குமார், தனது சிங்கிள் சாங் ஹல்கா ஹல்கா ஆல்பத்தில் நடிப்பதற்கு ஆயுள்மான் குரானா மற்றும் எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்பாடலை பிரபல பாடகர் ரஹத் பேதாக் அலி கான் பாடி உள்ளார். இப்பாடலை ரேஷ்மி விராக் எழுதி உள்ளார். அபிஜித் வகானி இசை அமைத்துள்ளார். பல்வேறு கால கட்டங்களில் நடக்கும் ரொமான்டிக் காதல் கதை போன்று ...

தயாரிப்பாளர் சங்கத்தில் புகுந்து இயக்குனர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Posted:

தமிழ் திரைப்படங்களுக்கு தலைப்பு வைப்பதிலிருந்தே வில்லங்கம் ஆரம்பித்து விடும். ஒரு படத்தின் தலைப்பை தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, சேம்பர் ஆகியவற்றில் பதிவு செய்யலாம். ஆனால் எந்த சங்கத்துக்கு சென்று எந்த தலைப்பை பதிவுக்கு கொடுத்தாலும் அது ஏற்கெனவே பதிவான தலைப்பா என்று பார்த்து சொல்வதற்கே மாத கணக்கில் ஆகும். ...

கன்னட படங்களுக்கு ஆதரவு தாருங்கள்: சரோஜாதேவி வேண்டுகோள்

Posted:

சென்னையில் கன்னட திரைப்பட விழா நேற்று தொடங்கியது வருகிற 31ந் தேதி வரை 4 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இதில் கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பரவலாக பாராட்டப்பட்ட 12 படங்கள் திரையிடப்படுகிறது.

ரஷியன் கலாச்சார மையத்தில் நேற்ற துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை சரோஜாதேவி பேசும்போது: கன்னட மக்களும், தமிழ ...

மலையாளம், கன்னடத்தில் கால் பதிக்கிறார் ப்ரியா ஆனந்த்

Posted:

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மாயவரத்து பொண்ணு ப்ரியா ஆனந்த். 'வாமணன்' படத்தில் அறிமுகமான ப்ரியா, அதன் பிறகு 'புகைப்படம்', 'குளிர் 180', 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை' படங்களில் நடித்தார். இடையில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' உள்பட சில இந்திப் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இவர் நடித்த 'அரிமா ...

சல்மான் நடிக்கும் ட்யூப்லைட் படத்தின் கதைகளம் வெளியானது

Posted:

சல்மான் கான் நடிக்கும் ட்யூப்லைட் படத்தின் சூட்டிங் லடாக்கில் நேற்று துவங்கியது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இந்நிலையில் இப்படத்தின் கதைகளம் தற்போது வெளியாகி உள்ளது. ட்யூப்லைட் படம், 1960 - 62 ம் ஆண்டுகளில் நடக்கும் எல்லை தாண்டி செல்லும் காதல் கதையாம். இந்தியாவில் இருந்து எல்லை தாண்டிச் செல்லும் ஒரு இளைஞனுக்கு, சீனாவில் உள்ள ...

தமிழில் வெளிவருகிறது தெலுங்கு 'பாபு பங்காரம்'

Posted:

வெங்கடேஷ், நயன்தாரா நடித்துள்ள தெலுங்கு படம் பாபு பங்காரம். ஜெயபிரகாஷ், சம்பத், சவுகார் ஜானகி என தமிழக்கு அறிமுமான நடிகர்கள் பலரும் நடித்துள்ளார்கள். ரிச்சர்ட் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குனரான மாருதி இயக்கி உள்ளார்.

'பாபு பங்காரம்' தமிழல் 'செல்வி' என்ற ...

'பாபு பங்காரம்' பாடல் வெளியீட்டு விழாவை புறக்கணித்த நயன்தாரா: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted:

நடிகை நயன்தாரா சீனியர் நடிகர் வெங்கடேசுடன் 'பாபு பங்காரம்' படத்தில் நடித்துள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக இந்த படம் இடையில் சில மாதங்கள் நின்று போனது. இதனால் நயன்தாரா கொடுத்திருந்த காஷ்சீட்டும் முடிந்து விட்டது. நயன்தாரா ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடித்து கொடுக்க வேண்டியது இருந்தது. "உங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டை ...

ஜக்கா ஜசோஸ் 2017 ல் ரிலீஸ் : ரன்பீர் கபூர்

Posted:

ஜக்கா ஜசோஸ் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜக்கா ஜசோஸ் படம் பற்றி ரன்பீர் கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜக்கா ஜசோஸ் படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அந்த படத்தின் ரிலீசிற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்காக 3 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™