Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாடகராக மாறிய நாகர்ஜூனா

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தோழா படத்தின் வாயிலாக கோலிவுட்டிற்கு விசிட் அடித்தார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகர்ஜூனா, கார்த்தியுடன் இணைந்து தெலுங்கில் ஊபிரி என்ற பெயரில் தயாரான திரைப்படம், தமிழில் தோழா என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது.

தற்சமயம் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி ...

ஜூலை 29ல் துவங்கும் மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸின் “வாஸ்கோடகாமா”

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை தனது புதிய படத்திற்கு நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்திற்கு தற்சமயம் வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்த முருகதாஸ் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க தயாராகி விட்டார்.

ரூ 100 கோடி ...

விஷாலின் போட்டோவை முன்னிறுத்தி விவசாயிகள் கூட்டம்

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எனும் பதவியிலும் இருக்கிறார். நடிகர், தயாரிப்பாளராக, சங்க நிர்வாகி... ஆகியவற்றோடு தன்னை பல தளங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார் விஷால். குறிப்பாக கல்வி உதவி, நலத்திட்ட உதவிகள் செய்கிறார். கூடவே சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ...

சொந்த மொழியில் நடிக்கிறார் எமி ஜாக்சன்

Posted:

எமி ஜாக்சன் ஒரு ஆச்சர்யமான நடிகை. அக்மார்க் ஆங்கில பொண்ணு இந்திய படங்களில் இந்திய பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாகவும்கூட நடித்து சாதனை படைத்து வருகிறார். கருங்கூந்தலும் இந்திய ஜாடை கொண்ட முகமும் அவருக்கு சாதகமாக இருக்கிறது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் '2.ஓ', படத்திலும் இந்தியில் சோஹெல்கான் ...

தாய், தந்தை, குடும்பத்தை முதலில் கவனியுங்கள் - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்

Posted:

சூர்யா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு சந்தித்து கலந்துரையாடினார். இவ்விழாவில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10,000க்கும் மேல் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது.... ‛‛என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு ...

கபாலிக்கு 306 : கதறும் மலையாள சினிமாக்கள்..!

Posted:

இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படம் கேரளாவில் மட்டும் 306 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.. இதுநாள் வரை விஜய், விக்ரம் படங்கள் கேரளாவில் ரிலீஸான தியேட்டர்களின் எண்ணிக்கை 220ஐ தாண்டியிராத நிலையில் 'கபாலிக்கான தியேட்டர் ரெக்கார்டு நிச்சயம் கேரள மண்ணில் புதிய சாதனை தான். இந்த சாதனை இந்தப்படத்தை ...

கோயம்பேடு ரோகிணியில் மனைவியுடன் 'கபாலி' பார்த்த வினீத் சீனிவாசன்..!

Posted:

கபாலி பீவர் மலையாள ரசிகர்களையும் நடிகர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாசுடன் ஆரவாரமாக நேற்று அதிகாலை 2 மணிக்கே காசி தியேட்டரில் படம் பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. நிவின்பாலியும் தான் கேரளாவில் 'கபாலி' படம் பார்ப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஆனால் மலையாள இளம் ...

தனுஷ் பாட்டுக்கு மாணவர்களுடன் ஆட்டம் போட்ட விக்ரம்

Posted:

சீயான் விக்ரம் படித்தது ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அந்த பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. இதில் அந்த பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் விக்ரமும் கலந்து கொண்டார். நேற்று நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியல் விக்ரமுடன் படித்த பாட்டாளி மக்கள் கட்சி ...

6 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடும் 'அது இது எது'

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'அது இது எது'. இரண்டு நடிகர்களை சினிமாவுக்கு தந்த நிகழ்ச்சி. ஒருவர் சிவகார்த்திகேயன் மற்றொருவர் மா.. பா. ஆனந்த். முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் அவர் சினிமா நடிகர் ஆனதும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவரும் ...

பகுதிநேர நடிகன் நான்! -கே.எஸ்.ரவிக்குமார்

Posted:

புரியாத புதிர் படத்தில் இயக்குனரானவர் கே.எஸ்.ரவிக்குமார். அதையடுத்து ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், முன்பெல்லாம் முழுநேர இயக்குனராக இருந்த அவர், தனுஷின் தங்கமகன் ...

சூர்யாவும் வடசென்னைக்கு செல்கிறார்

Posted:

மதுரை சார்ந்த கதை மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடத்துவது கோலிவுட்டின் செண்டிமென்டாகி விட்டது. அதனால் சில இயக்குனர்கள் ஒரு நாளாவது மதுரையில் படப்பிடிப்பு நடத்தி விட வேண்டும் என்றும் மல்லுக்கு நிற்கிறார்கள். ஆனால், டைரக்டர் ஹரி, தான் இயக்கும் ஒவ்வொரு படங்களையும் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடத்துவதை வழக்கமாகக் ...

இந்தி சீரியல் மோகத்தை விரட்டியடிக்க முடியும்! - காயத்ரி புவனேஷ்

Posted:

இமயம், கேப்டன், வசந்த், ராஜ் உள்ளிட்ட சேனல்களிலும் ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் காயத்ரி புவனேஷ். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு, லெட்ஸ் ...

அடுத்தடுத்து திரைக்கு வரும் ஜீவா படங்கள்!

Posted:

ஜீவா அதிகமாக எதிர்பார்த்த யான், போக்கிரி ராஜா படங்கள் அவரை பெரிதாக ஏமாற்றி விட்டன. இதில் போக்கிரிராஜா படம் அந்த படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ்க்கு சாதகமாகி விட்டது. அதனால் உடனடியாக தனக்கொரு ஹிட் கட்டாயம் தேவை என்பதால் திருநாள், கவலை வேண்டாம் படங்களில் முழுவீச்சில் இறங்கினார் ஜீவா. அதோடு, மார்க்கெட் இல்லாத நடிகைகள் தன்னுடன் ...

வேஷ்டியை வரிந்து கட்டுகிறார் தனுஷ்!

Posted:

சிறிய வயதிலேயே கதாநாயகன் ஆனவர் தனுஷ். அதோடு ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்று அங்கீகரிக்கப்பட்ட நடிகரானார். பின்னர் பாலிவுட் படத்திலும் நடித்து 100 கோடி வசூல் சாதனை நடிகர் பட்டியலில் இடம் பிடித்தார். இப்படி குறுகிய காலத்தில் பெரிய சாதனைகளை செய்திருக்கும் தனுஷ், சமீபகாலமாக தான் எந்த சினிமா விழாக்களில் கலந்து கொண்டாலும் ...

விஜய் பாடலுக்காக மெனக்கெடும் சந்தோஷ் நாராயணன்!

Posted:

ரஜினியின் கபாலி படத்துக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அடுத்தபடியாக விஜய்யின் 60-வது படத்துக்கும் இசையமைத்து வருகிறார். அதோடு தான் இசையமைக்கும் படங்களில் வித்தியாசமான குரல்களை தேடிப்பிடித்து பாட வைத்து வரும் சந்தோஷ்நாராயணன், படங்களில் ஹிட்டுக்காக டியூனுக்கு பொருந்தாத குரல்களை பாட வைப்பதில்லை. குறிப்பாக, ஹீரோக்களை தனது ...

'கடலை' தலைப்புகுக்கும் பஞ்சாயத்து

Posted:

ஏதாவது புதுசாக செய்து மக்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்று சினிமாவில் கன்னாபின்னாவென்று ஏதாவது செய்கிறார்கள். அதில் முக்கியமானது தலைப்பு வைப்பது. 'நீங்க நல்லா கடலை போடுவீங்களா' என்று தலைப்புடன் ஒரு படம் தயாராக இருக்கிறது. இதனை உதயம் எண்டர்மெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சகாய சுரேஷ் என்பவர் இயக்குகிறார். ராகவ் இசை ...

அதிக விலைக்கு டிக்கெட் விற்க தடை விதித்ததால் பெரம்பலூரில் 'கபாலி' வெளியாகவில்லை

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் எல்லா வகையிலும் பல சாதனைகளையும், பல புதுமைகளையும். பல ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தியேட்டரில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்தை செய்வதற்காக பெரம்பலூர் தியேட்டர்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாகவே ...

மனைவியிடம் பாடம் படிக்கும் விவேக் ஓபுராய்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்த விவேக் ஓபுராய், முன்பு அளவுக்கு அதிக படங்களில் நடிக்கவிட்டாலும் கூட அவ்வப்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இவர் அடுத்தப்படியாக பிரபல சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ள கன்னட படமான ‛ராய்' படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் விவேக் ஓபுராய், கன்னட டானாக ...

சிரஞ்சீவிக்கு நோ சொன்ன பாலிவுட் நடிகைகள்

Posted:

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அரசியல் பிரவேசம் காரணமாக சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் விஜய்யின் கத்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இது சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் பிரமாண்டமாய் உருவாகி ...

பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்த சூர்யா

Posted:

நடிகர் சிவக்குமாரின் மகன் எனும் அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. தனக்கென்ன ஒரு நடிப்பு, ஸ்டைல் என ரசிகர்களை ஈர்த்த சூர்யா, இன்று ரஜினி, கமல், விஜய், அஜித்திற்கு பிறகு இவர் தான் உள்ளார். சூர்யாவிற்கு இன்று 40வது பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி, தன் பெற்றோரிடம் ஆசி பெற்றார். பின்னர் மனைவி, குழந்தைகளுடன் வீட்டிலேயே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™