Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மோகன்லாலின் சாதனையை 4 நாளில் முறியடித்த மம்முட்டி ..!

Posted:

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படம் இதற்கு முன் வெளியான அஜித், விஜய் படங்களின் டீசர் ரெக்கார்டுகளை முறியடித்ததோடு, இந்திய அளவிலும் அந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டது. அதேபோல மலையாளத்தில் மெகாஸ்டார் மம்முட்டியின் நடிப்பில் உருவாகியுள்ள 'கசாபா' படத்தின் டீசரும் இதுவரையிலான துல்கர் சல்மான் மற்றும் மோகன்லாலின் 'புலி ...

“ஒப்பம்' அக்மார்க் ஒரிஜினல் கதை” - பிரியதர்ஷன்..!

Posted:

ஒருபக்கம் மிக பிரமாண்டமான 'புலி முருகன்' இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தயாராகியுள்ள 'ஒப்பம்' என மோகன் லாலின் இருவேறு பரிமாணங்களை காட்டும் இரண்டு படங்கள் மலையாளத்தில் தயாராகியுள்ளன. இதில் 'ஒப்பம்' படம் மோகன்லால்-பிரியதர்ஷன் என்கிற எவர்கிரீன் கூட்டணியில் உருவாகியுள்ள படம். வழக்கமாக பிரியதர்ஷன் படங்கள் காமெடி ...

பாகுபலி-2, 2.O மோத வாய்ப்பில்லை - ராணா

Posted:

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் எந்திரன். பின்னர் அதை பாகுபலி முறியடித்தது. தற்போது இந்த இரண்டு படங்களை முறியடிக்கும் வகையில் பாகுபலி-2 இன்னும் பிரம்மாண்டமாகவும், 2.O அதைவிட பிரம்மாண்டமாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு ...

ஆலியாவிற்கு தேசிய விருது கிடைக்கும் - கரீனா

Posted:

சமீபத்தில் சர்ச்சையுடன் வெளியான படம் ‛உட்தா பஞ்சாப்'. இப்படத்தில் ஷாகித் கபூர், ஆலியாபட், கரீனா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இவர்களில் ஆலியாபட்டின் ரோல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஆலியா, பீகார் பெண்ணாக நடித்திருந்தார். ஆலியாவின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஷாகித் கபூர், சில ...

ஜூலை-4ல் ‛டங்கல்' புதிய போஸ்டர் வெளியீடு

Posted:

‛பிகே' படத்திற்கு பிறகு அமீர்கான் நடித்து வரும் படம் ‛டங்கல்'. அமீர்கான், மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், ‛டங்கல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று ...

சல்மானின் சர்ச்சை கருத்து : ஷாரூக்கான் என்ன சொல்கிறார்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், தன்னுடைய சுல்தான் படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் தன்னை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். தேசிய மகளிர் ஆணையம், சல்மான், நேரில் ஆஜராக சொல்லி சம்மன் ...

‛வீரப்பன்' படத்திற்கு எதிர்ப்பு - வீரப்பன் பற்றி தானே படம் எடுக்க போகிறார் முத்துலட்சுமி

Posted:

தமிழகம், கர்நாடகா, கேரளம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். இவர் மறைந்த பின்னர் இவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், ‛வனயுத்தம்' என்ற பெயரில் வீரப்பன் பற்றிய படத்தை எடுத்தார். அதன்பின்னர் சர்ச்சை ...

'போகன்' படத்தில் அரவிந்த்சாமி யார்?

Posted:

சோஷியல் மீடியா வந்த பிறகு அக்கப்போர்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத ஆட்கள் இல்லாம் கையில் ஒரு மொபைலை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் அலைய ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்களால் திரையுலகில் அநியாயத்துக்கு குழப்பம்.

ஒரு ஸ்டில் வெளிவந்தால் போதும், அதில் உள்ள நடிகரின் கெட்அப்பைப் ...

சுந்தர்.சி படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

Posted:

இயக்குனர் சுந்தர்.சியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வெவ்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியது இல்லை. ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் படங்களை சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஆனாலும் ...

4 ஹீரோ, 3 ஹீரோயின்கள் கொண்டு கௌதம் மேனன் இயக்கும் புதிய படம்

Posted:

கௌதம் மேனன் இயக்கும் படங்கள் திட்டமிட்டபடி முடிவடைவதும் இல்லை... குறிப்பிட்ட தேதிகளில் ரிலீஸ் ஆவதும் இல்லை. ஆனாலும் புதிபுதிதாக படங்களை ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார். சிம்புவை வைத்து கௌதம் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீஸர், டிரைலர், பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. சிம்புவின் சொதப்பல் காரணமாக தற்போது ...

கலையரசனின் ஹீரோ கனவு சைனாவில்....

Posted:

மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான கலையரசன், அடுத்து 'டார்லிங்-2', 'ராஜா மந்திரி' ஆகிய படங்களில் நடித்தார். இவ்விரு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. குறிப்பாக கலையரசன் ஹீரோவாக பிரமோஷன் அடைந்த ராஜா மந்திரி படம் வசூல் ரீதியில் தோல்வியடைந்தது. எனவே அப்செட்டில் உள்ள கலையரசனுக்கு தற்போதைய ஆறுதல் ரஜினியின் ...

வசனகர்த்தா அவதாரம் எடுக்கும் யுகபாரதி

Posted:

திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா..., சந்திரமுகியின் கொஞ்ச நேரம்... உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதியவர் யுகபாரதி. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற பாடலாசிரியராக, கடந்த 14 வருடங்களாக பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் யுகபாரதி. பாடலாசிரியர் யுகபாரதி விரைவில் வசனகர்த்தா யுகபாரதியாக அவதாரம் ...

தமிழில் பிசியாகும் ஜாக்கி ஷெராஃப்

Posted:

ரஜினி, கமல் உட்பட தமிழ்ப்பட ஹீரோக்கள் பலருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கி சில பல ஹிந்திப்படங்களிலும் நடித்தனர். இப்போது காலம் மாறிவிட்டது. பாலிவுட் நடிகர்களுக்கு தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

எந்திரன் படத்தின் இரண்டாம் ...

சைமா விருதுகள் : தலா 6 விருதுகளை அள்ளிய பாகுபலி, ஸ்ரீமந்துடு

Posted:

தென்னிந்திய திரை உலகிற்கு வழங்கப்படும் சைமா(SIIMA) 2016 விருது வழங்கும் நிகழ்ச்சி 6வது முறையாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று(ஜூன் 30) தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாகுபலி மற்றும் ஸ்ரீமந்துடு படங்கள் தலா 6 விருதுகளை ...

சிரஞ்சீவியின் 151வது திரைப்படம் என்ன?

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கத்திலான்டோடு சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் 151வது படத்தை ...

விருதுகள் பெறாத பாகுபலி நாயகன்

Posted:

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் உலக புகழ்பெற்ற அப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு விருதுகள் எதுவும் கிடைக்காதது அவரது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லன், இயக்குனர், ஒளிப்பதிவாளர், துணை நடிகை போன்ற பிரிவுகளில் ...

செப்டம்பரில் அல்லு அர்ஜூனின் அடுத்த படம்

Posted:

சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள அல்லு அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்தின் படபிடிப்புகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அல்லு அர்ஜூனின் அடுத்த படம் செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது. அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஹரீஷ் சங்கர் ...

ராம் சரணிடம் இயக்குனருக்கு சிபாரிசு செய்யும் சிரஞ்சீவி

Posted:

அகில் : தி பவர் ஆஃப் ஜூவா படத்தில் தோல்வியைச் சந்தித்த போதிலும் அப்படத்தின் இயக்குனர் விவி விநாயக்கிற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அனைவரும் அறிந்ததே. கத்திலான்டோடு என்ற பெயரில் விவி விநாயக் இயக்கி வரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ...

உள்குத்தை வாங்கியது 'அபி அண்ட் அபி பிக்சர்ஸ்'

Posted:

தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' படத்தை தயாரித்த கெனன்யா மூவீஸ், தற்போது தினேஷ், நந்திதா, பால சரவணன், ஜான் விஜய் நடிப்பில் 'உள்குத்து' படத்தை தயாரித்துள்ளது. 'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கி உள்ளார். கே.எல்.பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இது கன்னியாகுமரி மாவட்ட ...

இருமுகன், சைத்தான், தேவி, பண்டிகை படங்களை வாங்கியது ஆரா சினிமாஸ்

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி விநியோக நிறுவனமாக விளங்குகிறது ஆரா சினிமாஸ். இந்த நிறுவனம் தற்போது விக்ரம் நயன்தாரா நடிக்கும் 'இருமுகன்', விஜய் ஆண்டனி நடித்து வரும் 'சைத்தான்', பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகும் 'தேவி', நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் கிருஷ்ணா நடிக்கும் 'பண்டிகை' படங்களை வாங்கி உள்ளது. ஒரே நேரத்தில் 4 படங்களை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™