Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தாயார் கைது

Posted: 18 Jun 2016 10:10 PM PDT

po

poகுப்பை தொட்டியில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தாயாரை ஒன்ராறியோ லண்டன் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்

கடந்த வியாழக்கிழமை காலை 11.35 மணியளவில் Richmond மற்றும் Mill வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள கட்டம் ஒன்றின் பின்புறத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

எனினும் குழந்தை என்ன காரணத்தினால் இறந்துள்ளது என தெரியாத நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னரே அது குறித்து தெரிவிக்கப்படும் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இது குறித்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குறித்த குழந்தையின் சடலம் அந்த குப்பைத் தொட்டியினுள் வியாழக்கிழமையே போடப்பட்டதென நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 200 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஒன்ராறியோ Amherstberg பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை காலையில் குழந்தையின் தாயாரை கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

23 வயதான அந்த தாயார் காவல்த்துறையினரால் லண்டனிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன், அவர் மீது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

The post குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தாயார் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Mt. Dennis குடியிருப்புப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 18 Jun 2016 08:36 AM PDT

io

ioரொரன்ரோவின் Mt. Dennis குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அவருடன் மற்றும் ஒரு நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், எனினும் அவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.io

மேற்கு Eglinton Avenueஇற்கு அருகில் Weston வீதி மற்றும் Ray Avenue பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்வம் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், தற்போதைக்கு சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் எவையும் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

The post Mt. Dennis குடியிருப்புப் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

C-14 சட்டமூலத்திற்கு செனற்சபையும் அங்கீகாரம்

Posted: 18 Jun 2016 07:56 AM PDT

iuo

iuoதீராத நோயுடன் அவதியுறும் நோயாளிகள் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்துகொள்வதை அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு செனற்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விடயத்தை உள்ளடக்கிய C-14 என்ற சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அது கனேடிய மேற்சபையான செனற் சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்திருந்த கனேடிய மேற்சபை இதனை அங்கீகரிப்பது தொடர்பில் நேற்று வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தியிருந்தது.

அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 44 செனிற்றர்களில் 28 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளதை அடுத்து குறித்த சட்டமூலத்திற்கு செனற்சபையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.iuo

இதேவேளை இந்த சட்டமூலம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இந்த சட்டத்தில் இன்னமும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் காணப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இது முதற்படி என்றும், எதிர்காலத்தில் படிப்படியாக இது விரிவுபடுத்தப்படும் எனவும் அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

The post C-14 சட்டமூலத்திற்கு செனற்சபையும் அங்கீகாரம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

திடீர் தேடுதல் நடவடிக்கையில் துப்பாக்கிகள் மீட்பு

Posted: 18 Jun 2016 07:40 AM PDT

uio

uioமிசிசாகா மற்றும் பிரம்டன் பகுதிகளில் மேற்கொண்ட வெவ்வேறு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத துப்பாக்கிகளை பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தெருச் சண்டியர்களைக் கட்டுப்படுத்தும் காவல்த்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி Giraffe Avenueவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அவர்கள் நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, "ஷொட் கண்" ரக துப்பாக்கி ஒன்றையும், அதற்கான ரவைகளையும் மீட்டிருந்ததுடன், இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.uio

அவ்வாறே மிசிசாகாவின் Village Walk பகுதியில் மேற்கொண்டிருந்த திடீர் சுற்றிவளைப்பில், 9mm கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்கான ரவைகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இத்தகைய சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்தோர் 905-453-2121, ext. 7704 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 1-800-222-8477 என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் (TIPS) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளனர்.

The post திடீர் தேடுதல் நடவடிக்கையில் துப்பாக்கிகள் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இடுப்பு வலிக்கு நிவாரணம் தரும் உளுத்தம் புட்டு

Posted: 18 Jun 2016 07:36 AM PDT

images

imagesஉளுந்தும் அதிக அளவிலான சத்துக்கள் அடங்கியுள்ளன, இதில் உணவுகளை செய்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம்.

தேவையானவை

தோல் உள்ள உளுந்து - 200 கிராம், புழுங்கல் அரிசி - 100 கிராம், தேங்காய் - ஒரு மூடி, நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு.

செய்முறை

உளுந்தையும் அரிசியையும் தனித்தனியே நன்றாக ஊறவைத்து, கழுவிச் சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக, சற்றே கரகரப்பான பதத்தில் எடுக்கவும்.

பிறகு, ஆவியில் புட்டு மாதிரி உதிராக வேகவைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும்.

புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

சூடாகச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமல், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.

பலன்கள்

உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச்சத்தும் கிடைக்கும்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண் களுக்கு, கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும். ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

The post இடுப்பு வலிக்கு நிவாரணம் தரும் உளுத்தம் புட்டு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™