Tamil Star |
- குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு
- பிரம்டன் பகுதியில் 4 வாகனங்கள் மோதி விபத்து
- வீடுடைப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் எச்சரிக்கை
- கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளும் ரொபேர்ட் ஹாலின் குடும்பத்தார்
| குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு Posted: 16 Jun 2016 08:57 PM PDT
ஒன்ராறியோவின் லண்டன் பிராந்தியத்தில், Richmond மற்றும் Mill வீதிகள் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை 11.35 மணியளவில் குப்பைத் தொட்டி ஒன்றினுள் குறித்த அந்த குழந்தையின் சடலம் கண்டுபிடிக்க்பபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களில் ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் அந்த குழந்தையின் பால் மற்றும் வயது தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இன்னமும் வெளியிடப்படாத நிலையில், மீட்கப்பட்ட சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைக்கு பின்னரே தகவல்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரிய குற்றங்களை விசாரிக்கும் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என இலண்டன் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட அந்த பகுதி அதிகமான பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் என்பவற்றின் நெரிசல்கள் நிறைந்த இடம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். The post குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டன் பகுதியில் 4 வாகனங்கள் மோதி விபத்து Posted: 16 Jun 2016 09:05 AM PDT
காயமடைந்த இருவரில் ஆபத்தான கட்டத்தில் இருந்த ஆண் நபர் உலங்கு வானூர்தி மூலமாகவும், காயமடைந்த பெண் நபர் தரைமார்க்கம் ஊடாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் Steeles Avenue மற்றும் Winston Churchill Boulevard பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், இதில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரிய விபத்துகள் தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்பு பிரிவினர் விசாரணைகளுக்காக சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். காவல்த்துறையினரின் விசாரணை நடவடிக்கைகளுக்காக Winston Churchill Boulevardஇல் இருந்து Heritage வீதி வரையான Steeles Avenueவின் ஊடான போக்குவரத்துக்ள தடை செய்யப்பட்டுள்ளன. The post பிரம்டன் பகுதியில் 4 வாகனங்கள் மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீடுடைப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் எச்சரிக்கை Posted: 16 Jun 2016 08:53 AM PDT
கடந்த சில வாரங்களாகவே midtown பகுதியில் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள அவர்கள், இது தொடர்பில் மக்களை விளிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். ரொரன்ரோ midtown குடியிருப்பு பகுதிகளில் பல வீடு உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். பூட்டப்படாதிருந்த பின் கதவு வழியாக சந்தேக நபர்கள் வீட்டினுள் நுளைந்துள்ள சம்பவங்கள் Thorncliffe Park, Rosedale, Leaside, Moore Park, Yonge and Eglinton, Forest Hill, Annex ஆகிய பகுதிகளில் இடம்பெற்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இரவு வேளைகளில் வீடுகளைப் பூட்டி வைப்பதுடன், வெளியே நிறுத்தும் வாகனங்கள், மிதிவண்டிகள் என்பனவற்றையும் பூட்டிவைக்குமாறும் காவல்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்களை அவதானித்தால் உடனடியாகவே தமக்கு தகவல் வழங்குமாறும் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். The post வீடுடைப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளும் ரொபேர்ட் ஹாலின் குடும்பத்தார் Posted: 16 Jun 2016 08:46 AM PDT
பிலிப்பீன்சில் அபு சயாப் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டு, விடுவிப்பதற்கு கப்பப்பணம் கோரப்பட்டுவந்த கனேடியரான ரொபேர்ட் ஹால் கொல்லப்பட்டுள்ளமையை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கொலையுண்டவரின் குடும்பத்தார் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர். ஒட்டாவாவில் உள்ள ஊடக மையத்தில் வைத்து இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொபேர்ட் ஹாலின் குடும்பத்தினர், மனித விழுமியங்களையும் அடிப்படை மதிப்புக்களையும் துச்சமென மதித்து கப்பம் கோரும் இவ்வாறான கோரிக்கைகளுக்கு அடிபணிவதிலலை என்ற பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் நிலைப்பாட்டினை, துயரம் மிகுந்த இந்த தருணத்திலும் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ரொபேர்ட் ஹாலை மீட்பதற்காக பரந்த அளவிலும், முழு வீச்சிலும் தாம் முயற்சிகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இறுதியில் துயரமான முடிவையே சந்திக்க நேர்ந்துள்ளது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். The post கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளும் ரொபேர்ட் ஹாலின் குடும்பத்தார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பிரம்டன் பகுதியில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீடுடைப்புச் சம்பவங்கள் தொடர்பில் ரொரன்ரோ காவல்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிணையாளிகளை விடுவிக்க கப்பப்பணம் செலுத்துவதில்லை என்ற கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்வதாக பிலிப்பீன்சில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கனேடியரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.