Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகா வெடிப்புச் சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் வீடுகளுக்கு திரும்புவதில் தாமதம்

Posted: 29 Jun 2016 07:34 PM PDT

oi

oiமிசிசாகா வெடிப்புச் சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் நாளைவரையில் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை மிசிசாகாவின் Hickory Drive பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தினால் சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 6 வீடுகள் மோசமான சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றிற்கு மேலதிகமாக அந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையாக அமைந்துள்ள சுமார் 33 வீடுகளுக்கான விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தொடர்ந்து நாளை காலை ஒரு தொகுதி குடியிருப்பாளர்கள் தங்களின் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தீயணைப்பு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.oi

மக்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், கட்டுமானங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதன் பின்னரே அந்த வீடுகளுக்கான எரிவாயு, நீர் வினியோங்கள் மீளிணைக்கப்படும் எனவும் அவர் விபரித்துள்ளார்.

எனினும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போதைக்கு தமது வீடுகளுக்கு திரும்ப முடியாது எனவும், பீல் பிராந்திய காவல்த்துறையினர், கட்டிடத் திணைக்கள அதிகாரிகள், தீ பாதுகாப்பு பிரிவினர் இது தொடர்பிலான விபரங்கள் மக்களை சென்றடைவதனை உறுதிப்படுத்துவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மிசிசாகா வெடிப்புச் சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் வீடுகளுக்கு திரும்புவதில் தாமதம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இஸ்தான்புல் குண்டுவெடிப்பு: எயர் கனடாவின் விமானச் சேவைகள் இரத்து

Posted: 29 Jun 2016 08:29 AM PDT

o

oதுருக்கியின் இஸ்தான்புல Ataturk விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்த இஸ்தான்புல்லுக்கிடையிலான அனைத்து விமானச் சேவைகளையும் இரத்து செய்வதாக ஏயார் கனடா அறிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை ரொரன்ரோவின் பியர்சன் அனைத்துல விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல்லின் Ataturk விமான நிலையத்திற்கு செல்லும் எயர் கனடா விமானப் பயணமும், மீண்டும் புதன்கிழமை அங்கிருந்து ரொரன்ரோவிற்கு திரும்பபும் அதே விமானத்தின் பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை முன்னதாக இஸ்தான்புல்லில் இருந்து பயணத்தை மேற்கொண்டிருந்த விமானம் ஒன்று பத்திரமாக ரொரன்ரோவில் செவ்வாய்கிழமை தரையிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.o

அத்துடன் இஸ்தான்புல்லில் உள்ள எயர் கனடாவின் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் Peter Fitzpatrick மின் அஞ்சல் ஒன்றின் மூலம் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் Ataturk அனைத்துல விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் என்பவற்றில் குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post இஸ்தான்புல் குண்டுவெடிப்பு: எயர் கனடாவின் விமானச் சேவைகள் இரத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் வடமேற்குப் பிராந்தியத்தில் அவசரகால நிலை பிரகடனம்

Posted: 29 Jun 2016 08:23 AM PDT

mn

mnஒன்ராறியோவின் வடமேற்குப் பிராந்தியத்தில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அங்கு தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Kenora பகுதியில் இரண்டு நாட்களில் சுமார் 109மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ஏற்பட்டு சுமார் 20இற்கும் அதிகமான வீதிகள் சேதமடைந்துள்ளதை அடுத்தே நகரபிதா Dave Canfield இந்த அவசர கால நிலைமையை கடந்த திங்கட்கிழமை பிரகடனப் படுத்தியுள்ளார்.

Kenoraவிற்கான பிரதான முகப்பு வீதியான Veterans Drive வெள்ளத்தினால் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த வீதிகளின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.mn

அத்துடன் அந்த திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யும் வரையிலான காலப்பகுதியில் அந்த வீதிக்கான தற்காலிக மாற்றுப் பாதை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான முகப்பு வீதியான Veterans Drive இந்த வாரத்தின் இறுதிப் பகுதிவரையில் மூடப்பட்டு இருக்கும் என்றும், எனினும் வார இறுதியில் வரும் கனடா நாளிற்கு வீதி மீண்டும் திறக்கப்பட்டு விடும் என நம்புவதாகவும் நகர அதிகாரியான Heather Kasprick தெரிவித்துள்ளனர்.

இந்த வெள்ளத்தினால் 20 கிராம வீதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள நீர் வடிந்தோடிய பின்னர் அவை போக்குவரத்திற்கு திறந்து விடப்படும் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை இந்த வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகள் குறித்த எண்ணிக்கை, வெள்ளத்தினால் யாரேனும் இடம்பெயர்ந்ததான விபரங்கள் என்பன தற்போது தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

The post ஒன்ராறியோவின் வடமேற்குப் பிராந்தியத்தில் அவசரகால நிலை பிரகடனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொடையில் உள்ள சதையை குறைக்க வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியவை

Posted: 29 Jun 2016 08:18 AM PDT

lk

lkசிலருக்கு என்னதான் உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், வயிற்றுக்கு அடுத்தபடியாக தொடையில் அதிக சதை போடும்.

தொடை பெரிதாக இருந்தால், ஜீன்ஸ் போட்டால் அழகாக இருக்காது, போடுவதற்கும் சற்று சிரமமாக இருக்கும்.

எனவே தொடையில் உள்ள சதையினை குறைப்பதற்கு, சில உடற்பயிற்சிகளையும், உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் செய்யவேண்டியவை

தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது, தினமும் 2-3 வகையான புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உடலுக்கு வேண்டிய போதுமான அளவு ஆற்றல் கிடைக்கும்.

அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்து, அடிக்கடி சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

அன்றாட உணவுகளில் மிளகாயை சேர்த்து உட்கொண்டு வருவதன் மூலம், தொடை மற்றும் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். இதற்கு மிளகாயில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம்.

நீச்சல் அடிப்பதன் மூலம், தொடையில் மட்டுமின்றி, உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள கொழுப்புக்களை கரைக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நீச்சல் மிகவும் சிறந்த உடற்பயிற்சி.

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் மேம்படுத்தப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.

சிட்ரஸ் பழங்களை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சிட்ரஸ் அமிலம், கொழுப்புக்கள் வேகமாக கரைய உதவும். மேலும் ஸ்நாக்ஸ் நேரங்களிலும் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தொடை சிக்கென்று இருக்கும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் போதுமான ஆற்றலை வழங்கி, ஒருவரை சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

The post தொடையில் உள்ள சதையை குறைக்க வேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியவை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™