Tamil Star |
- படகு முனையத்தில் நீரில் வீழ்ந்த நபர் உயிரிழப்பு
- சோற்று கற்றாழையுடன், மோர் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்
- 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரியுள்ள டிரான்ஸ் கனடா
- ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாகிறார் ஒன்ராறியோ பெண்
- தொடர்ந்து பரவும் மனிட்டோபா காட்டுத் தீ
| படகு முனையத்தில் நீரில் வீழ்ந்த நபர் உயிரிழப்பு Posted: 26 Jun 2016 09:34 PM PDT
நீரில் விழுந்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே அவர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவர் தமது நண்பர்களுடன் அங்கு உணவருந்திக்கொண்டிருந்த போதே தவறி நீரில் வீழ்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நீரில் வீழ்ந்த அவரை நண்பர்களால் அணுக முடியாமல் போகவே அவர்கள் 911இற்கு அழைப்பை ஏற்படுத்தி இருந்தனர் என்றும், சுமார் 20 நிமிடங்களில் அங்கு வந்திருந்த அவசர மீட்புப் படையினர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. எனினும் அந்த 20 வயது இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Queens Quay மற்றும் Yonge வீதிப் பகுதியில் அமைந்துள்ள Jack Layton படகு முனையத்திலேயே இன்று அதிகாலை 4.55 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. The post படகு முனையத்தில் நீரில் வீழ்ந்த நபர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோற்று கற்றாழையுடன், மோர் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் Posted: 26 Jun 2016 08:32 AM PDT
மோரில் விட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம். சோற்று கற்றாழை, மோர் ஆகியவற்றை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். சோற்று கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கசப்பு சுவை போகும். கற்றாழையின் சதையை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை காலையில் சாப்பிட்டுவர உடல் புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் குளிர்ச்சி அடையும். சோற்று கற்றாழையில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது, தீக்காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலட்டுத் தன்மையை போக்கும். மூட்டு வலி உள்ளவர்கள் குளுமையான உணவை உட்கொள்ளுவதால் வலி அதிகமாகும் என அஞ்சுவார்கள். இவர்கள் கூட மோர் சாப்பிடலாம். மோருடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். புளிப்பில்லாத மோரில் சிறிது உப்பு, சுக்குப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வாதம், கபத்தை சமன்படுத்தும். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சி ஏற்படும். The post சோற்று கற்றாழையுடன், மோர் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரியுள்ள டிரான்ஸ் கனடா Posted: 26 Jun 2016 08:28 AM PDT
கீஸ்டோன் (Keystone) குழாய்த் திட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிராகரித்ததால் ஏற்பட்ட நட்டத்திற்காகவே அந்த இழப்பீட்டுத் தொகையைக் கோருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது கச்சா எண்ணெய்யை படிப்படியாக மெக்சிகோ வளைகுடாவிற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு, கனடா மற்றும் அமெரிக்காவில் தற்போது இருக்கும் எண்ணெய் குழாய் வலையமைப்புகளை இணைப்பதற்கான வடிவமைப்பை கீஸ்டோன் எண்ணெய் குழாய் பணித்திட்டம் கொண்டிருந்தது. ஆனால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு இந்த பணித்திட்டம் பொருந்தாது என்று கடந்த நவம்பர் மாதம் அதிபர் ஒபாமா நிராகரித்துள்ளார். The post 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரியுள்ள டிரான்ஸ் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாகிறார் ஒன்ராறியோ பெண் Posted: 26 Jun 2016 08:06 AM PDT
ஐஸ்லாந்தில் புதிய சனாதிபதியைத் தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு வரலாற்றுப் பேராசிரியரான Gudni Johannesson வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவியான Eliza Reid ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் ஒன்ராறியோவில் வாழ்ந்து வந்தவரான Eliza Reid, இங்கிலாந்தில் படிக்கச் சென்றிருந்த போது Gudni Johannessonஐச் சந்தித்திருந்ததுடன், அவர்கள் திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் 2003ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் குடியேறியிருந்தனர். அவர்களுக்கு தற்போது நான்கு பிள்ளைகள் உள்ளனர். The post ஐஸ்லாந்தின் முதல் பெண்மணியாகிறார் ஒன்ராறியோ பெண் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடர்ந்து பரவும் மனிட்டோபா காட்டுத் தீ Posted: 26 Jun 2016 08:01 AM PDT
நீர்த்தாங்கி விமானங்கள், உலங்குவானூர்திகள் உட்பட பெருமளவு தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மனிட்டோபா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வீசிவரும் காற்று, காட்டுத்தீ பரவலை வேகப்படுத்தியுள்ளதாகவும், மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஈஸ்ரர்வெய்ல் (Easterville) மற்றும் செம்மவாவின் (Chemawawin) ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகள் வரையில் தீ பரவியுள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். சுமார் 3.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கே காட்டுத்தீ பரவும் என வெள்ளிக்கிழமை முன்னுரைக்கப்பட்ட போதிலும், நேற்று 6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு தீ பரவியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மழை பொழியக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு ஓரளவு நம்பிகையை ஏற்படுத்தியுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈஸ்ரர்வெய்ல் மற்றும் செம்மவாவின் ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகளில் இருப்போரையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சுமார் 2,000 பேர் வரையில் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post தொடர்ந்து பரவும் மனிட்டோபா காட்டுத் தீ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Jack Layton படகு முனையத்தில் நீரில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து 15 பில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகை "டிரான்ஸ் கனடா" என்ற எரிபொருள் நிறுவனம் கோரியுள்ளது.
ஐஸ்லாந்து மக்கள் தங்களின் புதிய சனாதிபதியைத் தேர்தெடுத்துள்ள நிலையில் கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் ஐஸ்லாந்தின் புதிய முதல் பெண்மணியாகின்றார்.
மனிட்டோபாவில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.