Tamil Star |
- ஐரோபிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியாவின் முடிவு கனடாவை பாதிக்காது
- மனிட்டோபாவில் காட்டுத் தீ – மக்கள் வெளியேற்றம்
- ஃபோர்ட் மக்முரேக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசரின் பாரியார்
| ஐரோபிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியாவின் முடிவு கனடாவை பாதிக்காது Posted: 24 Jun 2016 02:00 PM PDT
அத்துடன் பிரித்தானியாவுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் கனடா தனது உறவை தொடர்ந்தும் கட்டிக் காக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கனடாவின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் முன்னாள் பழமைவாத பிரதமர் Brian Mulroney ஆகியோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அது தொடர்பில் பிரித்தானியாவில் நேற்று நடாத்தப்பட்ட மக்கள் கருத்து வாக்கெடுப்பு முடிவுகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு அதிக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது முடிவாகியுள்ள நிலையில், பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 30 ஆண்டு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். The post ஐரோபிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியாவின் முடிவு கனடாவை பாதிக்காது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிட்டோபாவில் காட்டுத் தீ – மக்கள் வெளியேற்றம் Posted: 24 Jun 2016 12:59 PM PDT
காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 இற்கும் மேற்பட்டோரை வெளியேறுமாறு அரசாங்கமும் அறிவித்துள்ளது. தீ குடியிருப்பை அண்மித்துள்ளதுடன், அந்த தீயினால் ஏற்பட்டுள்ள புகையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மனிட்டோபா அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் சுமார் மூன்று இடங்களில் காட்டுத்தீ பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையான தீ அழைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், நீர்த்தாங்கி விமானங்கள் இரண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. The post மனிட்டோபாவில் காட்டுத் தீ – மக்கள் வெளியேற்றம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஃபோர்ட் மக்முரேக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசரின் பாரியார் Posted: 24 Jun 2016 12:50 PM PDT
இளவரசர் எட்வேர்ட்டும் அவரது பாரியாரும் கடந்த செவ்வாய்கிழமை ரொரன்ரோவை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அவர் நேற்று ஃபோர்ட் மக்முரே பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அவருடைய இந்த பயணத்தில் கனேடிய ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டனும் இணைந்துகொண்டுள்ளார். அண்மையில் மோசமான காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட ஃபோர்ட் மக்முரே பகுதி தற்போது வழமை நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட்டின் பாரியார் (மனைவி) ஸொஃபி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஃபொர்ட் மக்முரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயிணை அணைப்பதிலும், தீயணைப்பு மற்றும் மீட்பு நிவாரண நடவடிக்கைகளில் பணியாளர்களின் அபரிமிதமான செயல்திறன் குறித்தும ஆளுநர் நாயகம் பெருமிதம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக திருமணமான இளவரசர் வில்லியம்சும் அவரது துணைவியாரும் அல்பேட்டாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது எட்வேர்ட்டின் பாரியாரின் பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post ஃபோர்ட் மக்முரேக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசரின் பாரியார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


மனிட்டோபாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அந்த பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட்டின் பாரியார் (மனைவி) ஸொஃபி வடக்கு அல்பேட்டாவின் ஃபோர்ட் மக்முரே பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.