Tamil Star |
- சிறுவர்களை இனம்தெரியாத நபர்கள் அணுகுவது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள பெற்றோர்
- ரக் ரக வாகனம் மோதி பாதசாரி உயிரிழப்பு
- வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நீங்கள் சாப்பிட வேண்டியவை!
- ரொரன்ரோவில் மேலும் புதிய Go தொடருந்து நிலையங்கள்
- நேபாள நாட்டவர் 12 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் கனடா மீது அதிருப்தி
| Posted: 22 Jun 2016 07:31 PM PDT
Cliffcrest பகுதியில் சிறுவர்களை அணுகும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே பெற்றோர்கள் இந்த வழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். ஆக அண்மையாக நேற்று செவ்வாய்க்கிழமை Kingston வீதியில் அமைந்துள்ள Cliffcrest Plaza பகுதியில் இனம் தெரியாத நபர்கள் சிறுவரை அணுகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரில் இருந்த ஒருவரை அணுகியிருந்த நான்கு பெண்கள், மிட்டாய் ஒன்றை கொடுக்க முற்பட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், மேலதிக விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த மாதத்தில் அந்த பகுதியில் இடம்பெற்ற சிறுவர்களை அணுகும் 3 சம்பவங்களுக்கும் நேற்றைய இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் இனந்தெரியாத நபர்களால் சிறுவர்கள் அணுகப்பட்ட மூன்று சம்பவங்கள் Cliffcrest குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து காவல்த்துறையினர் எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Neilson Avenue மற்றும் Sloley வீதிப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுவர்கள் அணுகப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டிருந்தனர். பாடசாலை வளாகங்களினுள் இருந்த சிறுவர்களிடம் காரில் செல்ல விரும்புகிறீர்களா என கேட்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிறுவர்களை அழைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்தும், மிதிவண்டியில் சென்ற சிறுவன் ஒருவரை அணுகிய ஆண்கள் இருவர், தமது சிற்றூர்தியினுள் வந்து "வீடியோ கேம்" விளையாடுமாறு அழைத்தமை தொடர்பிலும், இதன் பின்னரும் மேலும் ஒரு இவ்வாறான சம்பவம் குறித்தும் கவல்த்துறையினர் விபரம் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே ஸ்காபரோ பகுதிப் பெற்றோர்கள் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post சிறுவர்களை இனம்தெரியாத நபர்கள் அணுகுவது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள பெற்றோர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரக் ரக வாகனம் மோதி பாதசாரி உயிரிழப்பு Posted: 22 Jun 2016 01:19 PM PDT
Eglinton Avenue மற்றும் Dufferin வீதிப் பகுதியில் Dynevor வீதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாதசாரி வீதியைக் கடக்க முற்பட்ட போது வாகனம் அவரை மோதித்தள்ளியதாகவும், விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பதை சரியாக அறிவதற்காக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தை செலுத்திச் சென்ற 29 வயதான ஆண் நபர் விபத்தை அடுத்து உடனடியாகவே 911 இற்கு அழைப்பை ஏற்படுத்தி காவல்த்துறையினரை அழைத்திருந்ததாகவும், விபத்து இடம்பெற்ற இடத்திலேயே அவர் தரித்திருந்ததாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். வாகனத்தால் மோதப்பட்ட அந்த 66 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவசர மருத்துவப் பிரிவிர் கூறியுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினா வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post ரக் ரக வாகனம் மோதி பாதசாரி உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நீங்கள் சாப்பிட வேண்டியவை! Posted: 22 Jun 2016 07:57 AM PDT
பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும். தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது. The post வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நீங்கள் சாப்பிட வேண்டியவை! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவில் மேலும் புதிய Go தொடருந்து நிலையங்கள் Posted: 22 Jun 2016 07:53 AM PDT
அவர்கள் இருவரும் East Harbour பகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு உரையாற்ற உள்ள நிலையிலேயே இதற்கான அறிவிப்பும் வெளியிடப்படலாம் என்ற எதிர் பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ரொரன்ரோ நகரின் மேற்குப் பகுதியில் 4 தொடருந்து நிலையங்களை அமைப்பது தொடர்பான அறிவித்தலை அவர்கள் இருவரும் நேற்று வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் Kitchener lineஇல், Liberty Villageஇலும், St. Clair Avenue மற்றும் Keele Street பகுதியிலும் என இரண்டு நிலையங்களும், Barrie lineஇல், Bloor Street மற்றும் Lansdowne Avenueவில் ஒரு நிலையமும் Spadina Avenue மற்றும் Front Street இல் ஒரு நிலையமும் அமைக்கப்படவுள்ளன. The post ரொரன்ரோவில் மேலும் புதிய Go தொடருந்து நிலையங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நேபாள நாட்டவர் 12 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் கனடா மீது அதிருப்தி Posted: 22 Jun 2016 07:06 AM PDT
கடந்த இருபதாம் திகதி காபூலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 12 நேபாள காவல் பணியாளர்களும், இரண்டு இந்தியர்களும் கொல்லப்பட்டடிருந்தனர். உயிரிழந்த நேபாள நாட்டுக் காவல் பணியாளர்கள் 12 பேரும் கனேடிய தூதரகத்தில் பணியாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த நேபாள காவலர்கள் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இது கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கவனயீனமான செயற்பாடு என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆப்கானின் தலைநகர் காபூலில் சிற்றூர்தி ஒன்றைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், 14 பேர் பலியானதுடன், மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. The post நேபாள நாட்டவர் 12 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் கனடா மீது அதிருப்தி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இனந்தெரியாத நபர்கள் சிறுவர்களை அணுகும் சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சார நடவடிக்கைகள் ஸ்காபரோப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரக் ரக வாகனம் ஒன்று மோதியதில் 66 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும்.
ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் புதிதாக மேலும் நான்கு Go தொடருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை நகர பிதா யோன் ரொறி, ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சர் Steven Del Duca ஆகியோர் இன்று வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனேடிய தூதரகத்தில் காவலாளிகளாக பணியாற்றிய 12 நேபாள நாட்டவர் கொல்லப்பட்டமை தொடர்பில் நேபாள மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.