Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தொடருந்து மோதி பதின்மவயது பெண்கள் இருவர் உயிரிழப்பு

Posted: 10 Jun 2016 09:22 PM PDT

yhju

yhjuதொடருந்து ஒன்று மோதி பதின்மவயது பெண்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நோவா ஸ்கொஸ்ஷியாவில்(Nova Scotia) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மத்திய காவல்த்துறை அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில், நோவா ஸ்கொஸ்ஷியாவின் Lantz என்ற இடத்தைச் சேர்ந்த 17 வயது உயர் பாடசாலை மாணவி ஒருவரும், யேர்மனியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தாம் சென்றபோது குறித்த இரண்டு பெண்களும் விபத்தினால் ஏற்பட்ட காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடக்க காணப்பட்டனர் என்று மத்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்..

எனினும் இந்த விபத்து தொடருந்து கடவையில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும், Mader வீதி மற்றும் நெடுஞ்சாலை 2இற்கு அருகில் அவர்கள் மோதப்பட்டுள்ளனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற குறித்த கிராமப் பகுதி ஹலிபக்சின் வடக்கில் இருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பதின்மவயது பெண்கள் இருவரும் உயிரிழந்த இந்த விபத்துத் தொடர்பில் மத்திய காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தொடருந்து மோதி பதின்மவயது பெண்கள் இருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா?

Posted: 10 Jun 2016 08:39 AM PDT

ju

juதேங்காய் பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துகள்

விட்டமின்சி, விட்டமின் இ, பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய் பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.

பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சரும எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற தேங்காய் பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

தேங்காய் பால் ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து குளித்தால் கூந்தலுக்கு நல்லது.

வறண்ட போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத்தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.

The post தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளாரி கிளிங்டனுக்கு ஆதரவு வெளியிட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர்

Posted: 10 Jun 2016 08:29 AM PDT

kj

kjஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், அமெரிக்க அதிபர் தேர்தலில் கிளாரி கிளிங்டன் தெரிவாக வேண்டும் என்ற தமது விருப்பத்தினை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு தேர்தலில் கிளாரி கிளிங்டன் தெரிவானால் அமெரிக்காவின் சிறந்த ஒரு சனாதிபதியாக அவர் விளங்குவார் எனவும் கத்தலின் வின் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

கிளாரியைச் தாம் சந்தித்துள்ளதை நினைவுபடுத்திய கத்தலின் வின், கிளாரி கிளிங்டன் மிகவும் தகுதி வாய்ந்த திறமையுள்ள ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.kj

கிளிண்ட்டன் தமது கட்சியைச் சேர்ந்த பெர்னி சண்டர்சிடம் (Bernie Sanders) கடுமையான போட்டியை எதிர்நோக்கி வந்துள்ள போதிலும், பேராளர்கள் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று அவர் அதிபர் வேட்பாளராவது சில நாட்களுக்கு முன் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே கிளாரி கிளிங்டனுக்கு தனது ஆதரவினை ஒன்ராறியோவின் முதல் பெண் முதல்வரான கத்தலின் வின் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை அமெரிக்க அதிபர் வேட்பாளராக தேர்வாகியுள்ள குடியரசு கட்சியின் சனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ரம்ப் போன்றவர்கள் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவது தொடர்பிலும் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கிளாரி கிளிங்டனுக்கு ஆதரவு வெளியிட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் வீடுகளின் விலை அதிகரிகப்படலாம்

Posted: 10 Jun 2016 08:03 AM PDT

uiop

uiopகனடாவில் எதிர்வரும் சில ஆண்டுகளில் வீடுகளின் விலை அதிகரிகப்படலாம் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகளவிலான வெளிநாட்டினர் கனடாவில் வீடு வாங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே வீடுகளின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படலாம் என எதிர்பாப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில் கனடாவில் வீட்டு விலைகளும், வெளிநாட்டு முதலீடுகளும் சிறந்த நிலையிலேயே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் கனடாவில் வீடுகளின் விலை இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவி்ல் வீடுகளின் விலை அதிகரிக்கும் இந்த போக்கானது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து செல்லும் என ஆய்வு முடிவொன்று தெரிவித்துள்ளது.uiop

இதேவேளை இந்த ஆண்டில் வீட்டு விலைகள் 5.5 சதவீத்தினால் அதிகரிக்க கூடும் என தற்போது முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வீட்டு விலைகள் 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று இரண்டு ஆண்டுகளின் முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறு எதிர்வுகூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

வீட்டு விலை அதிகரிப்பு பெருமளவில், ரொரன்ரோ, வன்கூவர் போன்ற பகுதிகளிலேயே காணப்படும் எனவும், இந்த நிலை எதிர்வரும் ஆண்டுகளிலும் நீடித்துச் செல்லும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post கனடாவில் வீடுகளின் விலை அதிகரிகப்படலாம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மழையால் பாதிக்கப்பட்டும் ஃபோர்ட் மக்முரே

Posted: 10 Jun 2016 07:56 AM PDT

iou

iouமோசமான காட்டுத்தீயாலும், அதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தினாலும் பாதிப்புக்களை எதிர்கொண்ட அல்பேர்டாவின் ஃபோர்ட் மக்முரே பகுதியில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு அந்த பகுதியில் மழை பொழிவது சாதகமானது என்ற போதிலும், அளவுக்கு மீளிய மழையால் அங்கு வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், கடுமையான மழை வீழ்ச்சியினால் ஆற்றோரங்கள், வாய்க்கால்கள், மதகுகளுக்க அருகே உள்ள பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடை தற்போது பெய்யும் இந்த மழை காரணமாக அந்த பகுதி சுற்றுச்சூழல் மேலும் பாதிக்கப்படக் கூடும் என கவலை வெளியிட்டுள்ள அல்பேர்ட்டா மாநில அரசாங்கம், காட்டுத்தீயினால் எரிந்துபோயுள்ள மரங்களின் அடியில் உள்ள மண் வெள்ள நீரினால் இலகுவாக அரித்துச் செல்லப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் பலவீனப்பட்டுள்ள மரங்கள் சரிந்து விழுதல் உள்ளிட்ட சில பாதக நிலைமை குறித்தும் அது விளக்கமளித்துள்ளது.

The post மழையால் பாதிக்கப்பட்டும் ஃபோர்ட் மக்முரே appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™