Tamil News | Online Tamil News |
- ஒத்திவைப்பு! ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு... அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய உத்தரவு தமிழக கட்சிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு துவக்கம்
- தமிழகத்தில் உளுந்து, துவரம் பருப்புகளின் விலை. குறையுமா?.. கூடுதல் ஒதுக்கீடு அளிக்கிறது மத்திய அரசு
- தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் வருமா?: பார்லி., குழு சென்னையில் ஆலோசனை
- 'கேரள லுங்கி கேர்ள்ஸ்' பாடாய்படுத்தும் சமூகதளம்
- கிரானைட் முறைகேட்டை யார் விசாரிப்பது? அரசு அறிக்கைக்கு பின் ஐகோர்ட் முடிவு
- தமிழை செம்மொழி எனக்கூறுவதால் என்ன பயன்: சென்னை ஐகோர்ட் வேதனை
- மீனவர்களை விடுவிக்க மோடிக்கு ஜெ., கடிதம்
- பணியை முடிக்காத ஒப்பந்த நிறுவனம்: தடுமாறும் தமிழ்நாடு மின் வாரியம்
- சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் 500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்
- ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு மம்தா திடீர் ஆதரவு
- தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்கள் : அமெரிக்க பல்கலை.யில் இருந்து வெளியேற உத்தரவு
| Posted: 07 Jun 2016 09:38 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில், வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது, சுப்ரீம் கோர்ட்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர்களுக்கு, தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 2014 செப்., 27ம் தேதி, தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, சிறப்பு கோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுடன், நால்வரையும் ... |
| தமிழகத்தில் உளுந்து, துவரம் பருப்புகளின் விலை. குறையுமா?.. கூடுதல் ஒதுக்கீடு அளிக்கிறது மத்திய அரசு Posted: 07 Jun 2016 09:43 AM PDT பருப்புகளின் விலையை, கிலோவுக்கு, 120 ரூபாய்க்கு அதிகமாக விற்பதை தடுக்கும் வகையில், தமிழகத்துக்கு, 2,023 டன் உளுந்து மற்றும், 1,000 டன் துவரம் பருப்பை அளிக்கிறது மத்திய அரசு.அதிக அளவில் பருப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பயன்படுத்தும் நாடாக, இந்தியா உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், பருப்புகளின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.இதனால், உள்நாட்டு சந்தைகளில், பருப்புகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. தமிழகத்தில், தினசரி உணவில் பயன்படுத்தப்படும், உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை, கிலோ, 200 ரூபாய் வரை ... |
| தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம் வருமா?: பார்லி., குழு சென்னையில் ஆலோசனை Posted: 07 Jun 2016 09:46 AM PDT தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து, தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, வரும், 21ல், சென்னை வரவுள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பனை, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, டில்லியில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், அன்புமணி கூறியதாவது:ஜனநாயக நாட்டில், சுதந்திரமாகவும் நேர்மையாகவும், தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். ஆனால், தமிழகத்தில் நடத்தப்படும் ... |
| 'கேரள லுங்கி கேர்ள்ஸ்' பாடாய்படுத்தும் சமூகதளம் Posted: 07 Jun 2016 09:50 AM PDT புதுடில்லி: சமூக வலைதளங்களில் வெளியாகும் ஒரு செய்தி ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு தீவிரமானது?லுங்கி கட்டிய பெண்கள் வரிசையாக நிற்கும் படம் ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. 'கேரளாவில் உள்ள ஒரு கல்லுாரியில், மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, மாணவியர் லுங்கியுடன் வந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்' என, அந்த படத்துக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை ... |
| கிரானைட் முறைகேட்டை யார் விசாரிப்பது? அரசு அறிக்கைக்கு பின் ஐகோர்ட் முடிவு Posted: 07 Jun 2016 09:52 AM PDT சென்னை :'தமிழக அரசின் முழுமையான அறிக்கை கிடைத்த பின், கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை யாரிடம் ஒப்படைப்பது என்பதை முடிவு செய்வோம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, ஆணையராக நியமித்தது.பல மாதங்கள் நடந்த விசாரணைக்கு பின், அதிகாரி சகாயம், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். சகாயம் ... |
| தமிழை செம்மொழி எனக்கூறுவதால் என்ன பயன்: சென்னை ஐகோர்ட் வேதனை Posted: 07 Jun 2016 09:56 AM PDT சென்னை: 'மொழிக்கு எந்த பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பிரயோஜனம்; தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்?' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 50 ரூபாய், 200 ரூபாய் கட்டணத்தில், பிற மொழியினருக்கு, இந்தி சான்றிதழ் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்துகிறது.அதுபோல, தமிழர் அல்லாதவர்களுக்கும், தமிழ் தெரியாத வெளிநாட்டு தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்றுக் கொடுக்க, குறைந்த கட்டணத்தில் அஞ்சல் வழிக் கல்வியை ... |
| மீனவர்களை விடுவிக்க மோடிக்கு ஜெ., கடிதம் Posted: 07 Jun 2016 10:09 AM PDT சென்னை: 'இலங்கை சிறையில் உள்ள, 15 மீனவர்களையும், 91 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து, இம்மாதம், 4ம் தேதி மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை, இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. ஒரே வாரத்தில்மூன்றாவது முறையாக, மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள், இலங்கைகடற்படையினரால் கடத்தப்பட்டு கைது செய்யப்படுவது மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. ... |
| பணியை முடிக்காத ஒப்பந்த நிறுவனம்: தடுமாறும் தமிழ்நாடு மின் வாரியம் Posted: 07 Jun 2016 10:24 AM PDT டிரான்ஸ்பார்மரில் செல்லும் மின்சாரத்தின் அளவு, 'ஓவர்லோடு' உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்கும் பணியை முடிக்காமல், ஒப்பந்த நிறுவனம் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட, முக்கிய நகரங்களில், டிரான்ஸ்பார்மரில் செல்லும் மின்சாரத்தின் அளவு; 'ஓவர்லோடு' ஏற்படுவதை கண்டறிதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணியை, தமிழ்நாடு மின் வாரியம், தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், 2010ம் ஆண்டு இறுதியில் ஒப்படைத்தது. * ஒப்பந்த நிறுவனம், முக்கிய நகரங்களில் உள்ள, மின் வினியோக டிரான்ஸ்பார்மர், பில்லர் பாக்ஸ் ... |
| சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் 500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம் Posted: 07 Jun 2016 10:41 AM PDT மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில், 2011 முதல் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின் தரம் குறித்து கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவிலான மற்ற பாடத்திட்டங்களை விட மிகவும் குறைந்த தரத்தில் உள்ளதால் தமிழக பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் ... |
| ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு மம்தா திடீர் ஆதரவு Posted: 07 Jun 2016 12:26 PM PDT
கோல்கட்டா: நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில், முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசால், ஜி.எஸ்.டி., சட்டதிருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு போதிய பலமில்லாததால், ராஜ்யசபாவில் நிறைவேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில், தொழிலதிபர்களின் கூட்டத்தில் பங்கேற்றார். அதில், அவர் பேசியதாவது: மத்தியில் ... |
| தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்கள் : அமெரிக்க பல்கலை.யில் இருந்து வெளியேற உத்தரவு Posted: 07 Jun 2016 02:16 PM PDT நியூயார்க்:அமெரிக்காவில் பருவ தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்கள் பல்கலை.யில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது பல்கலை. நிர்வாகம்.அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பவுலிங் கிரீன் என்ற பகுதியில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் 60 பேர் கடந்த ஜனவரி மாதம் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தனர்.முதல் பருவ தேர்வுகள் முடிந்தன..இதில் 60 பேரில் 25 மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தரத்தை எட்டிப்பிடிக்கவில்லை இதையடுத்து அந்த 25 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 08,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |