Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


போலீஸ் அதிரடியால் வெளிமாநிலங்களுக்கு ரவுடிகள் ஓட்டம்! ஒரே நாளில் நடத்திய வேட்டையில் 1,150 பேர் சிக்கினர்

Posted: 26 Jun 2016 10:52 AM PDT

தமிழக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ஒரே நாளில், 1,150 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பயந்து பல ரவுடிகள், வெளிமாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங் களும், பெண்கள், குழந்தைகள், முதியவர் களுக்கு எதிரான குற்றங்களும், சமீப நாட்களாக அதிகரித்து வந்தன. கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வந்ததால், தமிழக டி.ஜி.பி., அசோக்குமார், நேற்று முன் தினம் போலீசாருக்கு சில அதிரடி உத்தரவு களை ...

கறுப்புப் பணம் பதுக்குவோருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை! கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

Posted: 26 Jun 2016 11:08 AM PDT

புதுடில்லி:''கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்கள், செப்டம்பர், 30க்குள், அது குறித்து தாமாக முன்வந்து தெரிவித்தால், விசாரணை எதுவும் இருக்காது; இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், கம்பி எண்ணுவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கறுப்புப் பண புழக்கத்தை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்துக்கள், முதலீடுகள் குறித்து, முறையாக கணக்கு காட்டி, அதை சட்டப்பூர்வமாக்கி கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.அதைத் ...

மீண்டும் கூடுகிறது என்.எஸ்.ஜி., இந்த முறை வாய்ப்பு கிடைக்குமா?

Posted: 26 Jun 2016 11:11 AM PDT

புதுடில்லி:அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத, இந்தியா போன்ற நாடுகளை சேர்த்துக் கொள்வதற்கான நடைமுறைகளை விவாதிக்க, என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோக நாடுகள் குழு, இந்தாண்டு பிற்பகுதியில் மீண்டும் கூட திட்டமிட்டுள்ளது.

என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. தென் கொரியா தலைநகர் சியோலில், என்.எஸ்.ஜி., கூட்டம், சமீபத்தில் நடந்தபோது, சீனாவின் கடும் எதிர்ப்பால், இந்தியாவை சேர்ப்பது தொடர்பான பரிசீலனை நடக்காமல், கூட்டம் முடிவடைந்தது. என்.எஸ்.ஜி.,யில் சேர முடி யாதது, மத்திய அரசுக்கு ஏமாற்றமளிக்கும்

ஊழல் அதிகரிக்க காரணம் காங்., அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

Posted: 26 Jun 2016 11:14 AM PDT

புதுடில்லி:''பொருளாதார சீர்திருத்தங்களை, 20 ஆண்டுகளாக அமல்படுத்தாமல், காங்., தாமதம் செய்ததும்; பரம்பரை ஆட்சியை ஏற்படுத்தியதும், எங்கும் ஊழல் பரவச் செய்ததும், காங்கிரஸ்தான்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சமூக வலைத்தளமான, 'பேஸ்புக்கில்' கூறியுள்ளதாவது:
நாடு சுதந்திரம் பெற்ற பின், காங்., கட்சியின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால், எண்ணற்ற கறைகளை காண முடியும். பொருளாதார சீர்திருத்தங்களை, 20 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் காங்., தாமதப்படுத்தியது; அக்கட்சி, 1975ல், அவசர நிலையை ...

'செயல் அலுவலரை தாக்கியது தான் அமைதி பூங்காவின் அடையாளமா?'

Posted: 26 Jun 2016 11:20 AM PDT

சென்னை:'கோவில் திருவிழா பத்திரிகையில், அமைச்சர் பெயர் இடம்பெறவில்லை என்பதற்காக, செயல் அலுவலரை, அ.தி.மு.க.,வினர் தாக்கியது தான், அமைதிப் பூங்காவின் அடையாளமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:'தமிழகம், அமைதிப் பூங்காவாக திகழ்கிறது' என சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.சென்னைகல்லுாரி மாணவர் உட்பட, இருவர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில், நான்கு பேரை கட்டிப் போட்டு, 25 சவரன் நகை கொள்ளை; சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில், பெண் இன்ஜினியர் சுவாதி கொலை; விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் ...

கட்சிக்காக வசூலித்த ரூ.500 கோடி எங்கே? விஜயகாந்துக்கு மா.செ.,க்கள் 'கிடுக்கிப்பிடி'

Posted: 26 Jun 2016 11:29 AM PDT

'கட்சி துவங்கியது முதல் தற்போது வரை வசூலித்த, 500 கோடி ரூபாய் எங்கே' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, மாவட்ட செயலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சட்டசபை படுதோல்விக்கு பின், தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் முயற்சியில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக, ஆலோசனை கூட்டங் களை நடத்தியுள்ளார். வேட்பாளர்களாக போட்டியிட்ட கட்சியினர் மற்றும் மாவட்ட செயலர் களை, தனித்தனியாக அழைத்தும் பேசியுள்ளார்.இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பாக பல்வேறு மாவட்ட செயலர்கள், தி.மு.க.,வில் இணைந்த னர். அவர்களுக்கு பதிலாக, மாவட்ட பொறுப் பாளர்களை ...

லோக்பால் சட்டத்தின் கீழ் என்.ஜி.ஓ.,க்கள்

Posted: 26 Jun 2016 11:31 AM PDT

புதுடில்லி:நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் இயங்கி வருகின்றன; இவை வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் நன்கொடை வசூலிக்கின்றன. இதைத் தவிர, சில அமைப்புகளுக்கு மத்திய அரசும் மானியம் அளித்து வருகிறது.

இதுபோன்ற அமைப்புகளுக்கு வருமான வரி விலக்கு உட்பட, பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் நிதியை, சில அமைப்புகள் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், இரண்டு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு கோடி ...

நீதிமன்றங்களில் 3,600 காலியிடங்கள் ஐகோர்ட் ஆண்டு அறிக்கையில் தகவல்

Posted: 26 Jun 2016 11:39 AM PDT

தமிழக நீதித்துறையில், ஒட்டு மொத்தமாக, 3,600 காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றம் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்களிலும் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. தற்போது, 38 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்; 37 இடங்கள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, மாவட்ட நீதிபதி, மாஜிஸ் திரேட், சிவில் நீதிபதிகள் என, 1,015 பணி யிடங்களில், 969 பேர் தான் பணியில் உள்ளனர்; 46 பணியிடங்கள் காலி: மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் தனி உதவி யாளர்கள், நீதிமன்ற அதிகாரிகள், துறை ...

போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு; அரசுக்கு ரூ.10,000 கோடி மிச்சம்

Posted: 26 Jun 2016 11:41 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால், 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும், மத்திய நிதித் துறை செயலர் அசோக் லவாஸா கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, அசோக் லவாஸா, நிருபர் களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், 1.6 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய அரசின் மானியத் தொகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும், சமையல் காஸ்மானியத்தை, நேரடியாக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத் துவதால், 14 ஆயிரத்து, 872 கோடி ரூபாயை, அரசு மிச்சப்படுத்தி உள்ளது. ...

அவசரநிலை சாபம் காங்கிரசை விடாது; பா.ஜ., தலைவர் ஜோஷி பாய்ச்சல்

Posted: 26 Jun 2016 12:46 PM PDT

பெங்களூரு: ''நாட்டில் அவசர சூழ்நிலையை திணித்த காங்கிரஸ், இப்போதும் அதன் பின் விளைவுகளை சந்தித்து வருகிறது. அவசர சூழ்நிலையின் இருள், காங்கிரசை விடாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் கேசவ ஷில்பாவில் நடந்த, 'அவசர கால சூழ்நிலை இருள் நினைவு' நிகழ்ச்சியில், முரளி மனோகர் ஜோஷி பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: நாட்டின் ஜனநாயகத்தை ஒழிக்கும் வகையில், காங்கிரஸ், 1975ம் ஆண்டு, அவசர சூழ்நிலையை கொண்டு வந்தது. அதன் பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்தது. அவசர ...

தமிழர் மறுவாழ்வுக்காக பாடுபட்டாராம் ராஜபக் ஷே

Posted: 26 Jun 2016 02:12 PM PDT

கொழும்பு : ''விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்தது, தமிழர்களின் மறுவாழ்வுக்காகவே,'' என, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தெரிவித்தார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும், அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றே, என் தலைமையிலான அரசு பாடுபட்டது. அதற்காகத்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வந்தேன். ஆனால், என்னுடைய அரசின் சாதனைகளை மறைக்கும் வகையில், தற்போதைய அதிபர் சிறிசேன தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™