Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'கறுப்பை' வெள்ளையாக்கும்திட்டம் துவங்கியது

Posted: 02 Jun 2016 09:22 AM PDT

புதுடில்லி, :கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் மற்றும் செய்துள்ள முதலீடுகள் குறித்து, தாமாகவே தெரிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தொடர்ந்து, உள்நாட்டில் இவ்வாறு பதுக்கியுள்ள கறுப்புப் பணம் மற்றும் அறிவிக்காத முதலீடுகள், சொத்துகள் குறித்த விவரங்களை தெரிவித்து, அதற்கானவரியை செலுத்தி, சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.இதுகுறித்து, வருமானவரித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:ஜூன் 1ம் ...

'மெகா உணவு பூங்கா' திட்டத்திற்கு தமிழகம் காத்திருக்கணும்; 2 வாய்ப்புகளை தவற விட்டதால் பாதிப்பு

Posted: 02 Jun 2016 09:31 AM PDT

விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட, 'மெகா உணவுப் பூங்கா' அமைக்கும் வாய்ப்பு, இருமுறை கிடைத்தும், தமிழக அரசு அதை பயன்படுத்த தவறி விட்டது. அதனால், அடுத்த வாய்ப்புக்காக, சிறிது காலம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு, தமிழக அரசு தள்ளப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக, 13,300 கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் வீணாகின்றன; 30,700 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகின்றன.இவ்வாறு உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையிலும், 2008ல் கொண்டு ...

புகழ் பாடியது போதும்: மாறுவரா தமிழக அமைச்சர்கள்?

Posted: 02 Jun 2016 09:34 AM PDT

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் தேசிய கருத்தரங்குகளை, பெருமை பேசும் மன்றமாக மாற்றாமல், மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் குறித்து, ஆணித்தரமாக வலியுறுத்தும் களமாக பயன்படுத்த, தமிழக அமைச்சர்கள் முன்வருவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அமைச்சகங்களின் சார்பில், பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காக, டில்லியில், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள், அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். அதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்க வரும்படி, மாநில அமைச்சர்கள் அழைக்கப்படுவர். இத்தகைய முக்கியத்துவம் ...

'கசாப்பு கடைக்காரனை தான் ஆடு நம்புகிறது' தோல்வி குறித்து கருணாநிதி வருத்தம்

Posted: 02 Jun 2016 09:56 AM PDT

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:சட்டசபை தேர்தலில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபாடான பல செயல்பாடுகளைக் காண முடிந்தது. தேர்தல் கமிஷன் திட்டமிட்டு, நமக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.

மத்திய அரசும், அதன் அமைச்சர்களும் அ.தி.மு.க., அரசை கடுமையாகக் குறை கூறியபடியே, தேர்தல் நேரத்தில், அக்கட்சியின் தில்லுமுல்லுகளுக்கு எல்லாம் வெளிப்படையாகவே துணைபோன காட்சிகளையே காண முடிந்தது.அ.தி.மு.க. ஆட்சியில், வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை; தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட வட சென்னை, மேட்டூர், வல்லுார் அனல் மின் ...

அணைகள் விவகாரத்தில் திடீர் மாற்றம் கலெக்டர்களுக்கு புது அதிகாரம்

Posted: 02 Jun 2016 09:57 AM PDT

அணையை திறக்க முதல்வர் உத்தரவு' என்ற நடைமுறையில், திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை முதல்வர் உத்தரவு இல்லாமல், கலெக்டர் மூலம் பாசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது.

தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும், நீர்வளத் துறை பராமரிப்பில், 100க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இவற்றின் மூலம், பல மாவட்டங்களின் பாசனத்தேவை பூர்த்தியாகிறது. ஒவ்வொரு அணையையும், எந்தெந்த மாதங்களில் பாசனத்திற்கு திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, சாகுபடி காலங்களில் அணைகளை திறப்பது வாடிக்கை.அ.தி.மு.க., அரசு, 2011ல் பொறுப்பேற்ற பின், ...

எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் கமிஷன் யோசனை

Posted: 02 Jun 2016 10:47 AM PDT

'உள்ளாட்சி தேர்தலை எத்தனை கட்டமாக நடத்தலாம்' என, தமிழக தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து வருகிறது.

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உட்பட, 12 மாநகராட்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என இரு பிரிவாக, இந்த உள்ளாட்சி பதவிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.கடந்த 2011ல், ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம், அக்., மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 458 பதவிகளுக்கு நேரடியாகவும், 14,020 பதவிகளுக்கு, மறைமுக ...

பருவ மழை இந்த ஆண்டு போதுமான அளவு இருக்கும் திருப்தியளிக்கும்1:அறிக்கை வெளியிட்டது மத்திய வானிலை ஆய்வு மையம்

Posted: 02 Jun 2016 10:55 AM PDT

புதுடில்லி,:'பருவ மழை, இந்த ஆண்டு, திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பற்றாக்குறை பருவ மழைக்கான வாய்ப்பே இல்லை' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த, இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா உட்பட, 10 மாநிலங்களில் வறட்சி நிலை அறிவிக்கப்பட்டது.'இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை, இயல்பானது முதல் அதிகமான அளவு வரை இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 'ஜூன், 7ல், பருவ மழை துவங்கும்' என்றும் ...

ரேஷனில் மீண்டும் பருப்பு தட்டுப்பாடு முதல்வருக்கு அதிகாரிகள் கோரிக்கை

Posted: 02 Jun 2016 11:00 AM PDT

ரேஷன் கடைகளில் பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக ரேஷன் கடைகளில், ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. குறித்த காலத்தில் பருப்பு கொள்முதல் செய்யாததால், தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.வாணிப கழக கிடங்குகளில், ஜூன், 15ம் தேதி வரை வினியோகிக்கும் அளவிற்கு தான் பருப்பு இருப்பு உள்ளது. இதனால், ரேஷன் கடைகளுக்கு முழு அளவிற்கு பருப்பு நகர்வு ...

நடவடிக்கையில் இறங்கியது தி.மு.க., தலைமை முதல் பலி அமைச்சரின் சகோதரர்

Posted: 02 Jun 2016 11:04 AM PDT

சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்து, கட்சித் தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தலைமைக்கு குவியும் புகார்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது தி.மு.க., அதில் முதல் பலி - அ.தி.மு.க., அமைச்சரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, கடந்த இரண் டாண்டு களாக கடும் பணியாற்றி வந்தார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும், தேர்தல் பணியில் ஈடுபட துாண்டினார். அந்தப் பணியில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட மொத்த ...

திருமண தகவல் மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

Posted: 02 Jun 2016 12:53 PM PDT

புதுடில்லி : திருமண தகவல் சேவை அளிக்கும் இணையதளங்களை, தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், 'ஆன்லைன்' திருமண தகவல் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு கொண்டு வருகிறது.
இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இதற்காக பல்வேறு விதிகள் அடங்கிய குறிப்பாணைக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விதிகள் விரைவில் அறிமுகமாகின்றன.
'ஆன்லைன்' திருமண தகவல் மையங்களுக்கு கொண்டு வரப்படும் புதிய ...

கலிபோர்னியா துப்பாக்கிச்சூட்டை நடத்தியது இந்திய வம்சாவளி அமெரிக்கர்

Posted: 02 Jun 2016 02:05 PM PDT

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரி்க்காவின் கலிபோர்னியா பல்கலை.யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாயினர். அமெரிக்க போலீசார் நடத்திய விசாரணையில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும், பல்கலை. பேராசிரியரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரி்ல் உள்ள கலிபோர்னியா பல்கலை.வளாகத்தி்ல் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதும், துப்பாக்கிச்சூடுநடத்திய நபர் தற்கொலைசெய்து கொண்டதாகவும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™