Tamil News | Online Tamil News |
- கறுப்புப்பண முதலைகள் தப்ப முடியாது:எஸ்.ஐ.டி., தலைவர் ஷா திட்டவட்டம்
- 'என்.எஸ்.ஜி.,யில் சேர சீனா எதிர்க்கவில்லை'
- 500 'டாஸ்மாக்' கடைகளை மூடியதில் அதிகாரிகள் நாடகம்!: தொடர்ந்து 'கப்பம்' பெற முதல்வரை ஏமாற்றியதாக புகார்
- சர்வதேச யோகா தினத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு
- ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர்... யார்?: மத்திய அரசின் பரிசீலனையில் 7 பேர்
- நீங்க கிளம்புங்க... நான் பார்த்துக்கிறேன்' *கட்சியினரிடம் விஜயகாந்த் கோபம்
- கருணாநிதி நடத்திய விழா ஸ்டாலின் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
- முல்லை பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் * மத்திய அரசிடம் முறையிட முடிவு
- வெள்ளி தட்டில் விருந்து:ம.பி.,யில் சர்ச்சை
- கல்வி கட்டணம் : ஸ்மிருதி எச்சரிக்கை
| கறுப்புப்பண முதலைகள் தப்ப முடியாது:எஸ்.ஐ.டி., தலைவர் ஷா திட்டவட்டம் Posted: 19 Jun 2016 09:06 AM PDT புதுடில்லி:வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் மற்றும் சொத்துக்கள் பற்றிய விவரங்களை வருமான வரித்துறையிடம் தெரிவித்து, தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையில், சிறப்பு சாளர முறையை, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அந்த திட்டம் பெரியளவில் வெற்றி பெற வில்லை. இந்நிலையில், சில மாற்றங்களுடன் மீண்டும் சிறப்புச் சாளரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, டில்லியில், நிருபர்களிடம், எஸ்.ஐ.டி., தலைவரான, ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா கூறியதாவது:தற்போது அமலில் உள்ள சிறப்பு சாளரத் திட்டத்தில், விதிமுறை கள் மேலும் ... |
| 'என்.எஸ்.ஜி.,யில் சேர சீனா எதிர்க்கவில்லை' Posted: 19 Jun 2016 09:38 AM PDT புதுடில்லி:''என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில், இந்தியா உறுப்பினராக, சீனா எதிர்க்கவில்லை; குழுவின் நடைமுறைகள் குறித்தே கூறுகிறது,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த மாதம், 26ல், இரண்டாண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதில், வெளியுறவு அமைச்சகத் தின் இரண்டாண்டு செயல்பாடுகள் குறித்து, சுஷ்மா சுவராஜ் நேற்று விளக்கினார்; அப்போது அவர் கூறியதாவது:என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக, சீனா எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் அந்த அமைப் பின் நடைமுறைகள் குறித்தே கூறி வருகிறது. இந்த ... |
| Posted: 19 Jun 2016 11:03 AM PDT தமிழகம் முழுவதும், 500 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதில், மக்கள் போராட்டம் நடத்திய பகுதிகளில், 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. 'கப்பம்' கிடைக்காமல் போய்விடும் என்பதால், விற்பனை குறைந்த கடைகளை மூடும் நாடகத்தை நடத்தி, டாஸ்மாக் அதிகாரிகள், முதல்வரை ஏமாற்றி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம், காலை, 10:00 மணியில் இருந்து, 12:00 மணிக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம், கடை திறந்திருப்பது, 2 மணி நேரம் குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, '500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என, முதல்வர் ... |
| சர்வதேச யோகா தினத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு Posted: 19 Jun 2016 12:02 PM PDT புதுடில்லி:சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாளை, நாடு முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சண்டிகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், நாளை நடக்கும் கூட்டு யோகா பயிற்சி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதைத் தவிர, 57 மத்திய அமைச்சர்கள், நாடு முழு வதும் பல்வேறு இடங் களில் நடக்கும் நிகழ்ச்சி களில் பங்கேற்கின்றனர்.மூத்த ... |
| ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர்... யார்?: மத்திய அரசின் பரிசீலனையில் 7 பேர் Posted: 19 Jun 2016 12:24 PM PDT புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக் காலம், வரும் செப்டம்பருடன் முடிவடைவதால், புதிய கவர்னரை தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. புதிய கவர்னருக்கான போட்டியில், ஏழு பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக, 2013ல் பொறுப்பேற்றார் ரகுராம் ராஜன், 53. மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக கருதப்படும் இவர், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வ தேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்பதற்கு முன், அமெரிக்காவின் ... |
| நீங்க கிளம்புங்க... நான் பார்த்துக்கிறேன்' *கட்சியினரிடம் விஜயகாந்த் கோபம் Posted: 19 Jun 2016 12:37 PM PDT தே.மு.தி.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த், நிர்வாகி ஒருவரின் பேச்சால் எரிச்சல் அடைந்து பாதியில் வெளியேறியுள்ளார். சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது குறித்து விவாதிக்க, மாவட்ட வாரியாக, நகரம், பேரூர், ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சென்னை, கோயம் பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில், இக்கூட்டம் நடக்கிறது.மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், நேற்றைய கூட்டத்திற்கு ... |
| கருணாநிதி நடத்திய விழா ஸ்டாலின் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு Posted: 19 Jun 2016 12:42 PM PDT கலைஞர், 'டிவி'யில் ஒளிபரப்பான, 'ரோமாபுரி பாண்டியன்' தொடரில் பணியாற்றியவர்களை பாராட்டி, நேற்று முன்தினம், சென்னையில் விழா நடந்தது. இதில், ஸ்டாலின் ஆதரவாளர் கள் பங்கேற்கவில்லை. இதனால், கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படு கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய வரலாற்று காவியம், 'ரோமாபுரி பாண்டியன்' கலைஞர், 'டிவி'யில், 543 நாட்கள் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் பணியாற்றியவர்களை பாராட்டி, சென்னை அறிவாலயத்தில், நேற்று முன்தினம் விழாநடந்தது.அவ்விழாவில், கருணாநிதி பங்கேற்று பேசினார். அவருடன், தி.மு.க., முதன்மை செயலர் துரை முருகன், ... |
| முல்லை பெரியாறு பிரச்னை விஸ்வரூபம் * மத்திய அரசிடம் முறையிட முடிவு Posted: 19 Jun 2016 01:13 PM PDT கேரள அரசு மற்றும் அம்மாநில அரசியல் கட்சிகளால், முல்லை பெரியாறு அணை பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணையால், தமிழகத்தின், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணை நீரை பயன்படுத்தி, மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அணையின் நீர்மட்டம், 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் ... |
| வெள்ளி தட்டில் விருந்து:ம.பி.,யில் சர்ச்சை Posted: 19 Jun 2016 01:39 PM PDT போபால்:மத்திய பிரதேசம் மாநிலத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்காக நடந்த, நான்கு நாள் நிகழ்ச்சியில், நீதிபதிகள் மற்றும் குடும்பத்தாருக்கு வெள்ளி பாத்திரத்தில் விருந்து அளிக்கவும், பரிசு அளிக்கவும், 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை யிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கான நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. நான்கு நாட்களுக்கான இந்த நிகழ்ச்சியை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார்.இந்தநிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவுகள் ... |
| கல்வி கட்டணம் : ஸ்மிருதி எச்சரிக்கை Posted: 19 Jun 2016 03:00 PM PDT அமிர்தசரஸ்:''தனியார் பள்ளிகள், கல்வியாண்டின் இடையே, திடீரென கட்டணங்களை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எச்சரித்துள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் நடந்த ஐ.ஐ.எம்., அடிக்கல் நாட்டு விழாவில், அவர் பேசியதாவது:பள்ளிகள் திடீரென கட்டணங்களை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது. கட்டணத்தை கல்வியாண்டின் துவக்கத்தில் தான் உயர்த்த வேண்டும். அதுவும், அதற்கான கமிட்டியின் பரிந்துரை மற்றும் மாநில அரசின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 20,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |