Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி:கருணாநிதி கண்டனம்

Posted: 10 Jun 2016 09:54 AM PDT

சென்னை:'சமஸ்கிருதத்தை திணிக்க, மத்திய அரசு மீண்டும் முயற்சிக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது நேற்றைய அறிக்கை:விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லுாரி விழா ஒன்றில் பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்காக, வேதங்களுக்கு என, 'வேதிக் போர்டு' என்ற தனிப் பிரிவு,
வரும், 16ல் துவக்கப்படும்.
'நம் கலாசாரம் என்பது, வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல், கலாசாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது. ஆகவே, மத்திய அரசுப் பள்ளிகளில், இந்த ஆண்டு ...

மோடியிடம் ரூ.1.50 லட்சம் கோடி கேட்க ஜெ., முடிவு

Posted: 10 Jun 2016 09:55 AM PDT

தமிழக முதல்வராக, ஆறாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, 14ம் தேதி டில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுவை, பிரதமரிடம் கொடுக்க உள்ளார்.

சென்னை, தலைமைசெயலகத்தில், நேற்று தலைமைச் செயலர் ராமமோகனராவ் தலைமை யில், அனைத்து துறை செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி எவ்வளவு, எந்த திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி கிடைக்காமல் உள்ளது என்ற விவரங்கள் கேட்டு பெறப்பட்டன.
பிரதமரிடம், முதல்வர் அளிக்க உள்ள மனுவில், ...

'கல்தா' பட்டியலில் மேலும் 20 மா.செ.,க்கள்:தி.மு.க.,வில் களையெடுப்பு பணி தீவிரம்

Posted: 10 Jun 2016 10:00 AM PDT

சட்டசபை தேர்தலில், தி.மு.க., பின்னடைவை சந்தித்தது. இதற்கு காரணமானவர்கள் என, அடையாளம் காணப்பட்டிருக்கும், கட்சியின் மாவட்ட செயலர்கள் மீது, தலைமை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக, மூன்று மாவட்டச் செயலர்களை மாற்றி, தலைமை, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடும் என, அக்கட்சியினர் நம்பிக்கை வைத்திருந்தனர். கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் இதற்காக தீவிரமாக பணியாற்றினர்.ஆனால், தேர்தல் முடிவுகள் கட்சிக்கு சாதகமாக இல்லை. தமிழகம் முழுவதும், 89 ...

5 நாடு சுற்றுப்பயணம் முடிந்தது:நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Posted: 10 Jun 2016 10:03 AM PDT

புதுடில்லி:அமெரிக்கா உள்ளிட்ட, ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.

ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணம் மேற்கொண்டார்.முதல் பயணமாக, 4ம் தேதி, ஆப்கன் சென்ற அவர், ஹிராட் மாகாணத்தில் இந்தியா கட்டிய, நட்புறவு அணையை திறந்து வைத்தார்.
பின், மேற்கு ஆசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான கத்தார் சென்றார். அந்நாட்டு, தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, சுவிட்சர்லாந்து சென்ற ...

இன்ஜி., கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட தயக்கம்! அரசு அனுமதி மறுப்பால் அண்ணா பல்கலை மவுனம்

Posted: 10 Jun 2016 10:49 AM PDT

தமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது.

தனியார் கல்லுாரிகளின் நெருக்கடி மற்றும் தமிழக உயர் கல்வித்துறை வற்புறுத்தலால், இந்த விஷயத்தில் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய அளவில், தமிழகத்தில் தான் அதிக அளவில், இன்ஜி., கல்லுாரிகள் இயங்குகின்றன. பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற தொழில் நுட்ப படிப்புகள் படிக்க, 550 கல்லுாரிகள் உள்ளன. தென் மாநிலங்களில், பெரிய மாநிலமான ஆந்திராவில் கூட, ...

விமான போக்குவரத்து ஆணையம் அமைக்கும் திட்டம் இல்லை

Posted: 10 Jun 2016 12:34 PM PDT

புதுடில்லி: விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விமான போக்குவரத்து ஆணையம் அமைக்கும் திட்டம் எதுவுமில்லை என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறினார்.
விமானங்களை பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் நடப்பதால், விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அதை கண்காணிப்பதற்காக விமான போக்குவரத்து ஆணையம் உருவாக்க, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ...

தென்மேற்கு பருவ மழை வடமாநிலங்களை நோக்கி...முன்னேற்றம்! * விரைவில் நாடு முழுவதும் பரவும் என கணிப்பு

Posted: 10 Jun 2016 12:43 PM PDT

புதுடில்லி:'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக' வந்துள்ளது தென்மேற்கு பருவ மழை. வழக்கத்தைவிட ஒரு வாரம் காலதாமதமாக தொடங்கினாலும், மிக வேகமாக வடமாநிலங்களை நோக்கி முன்னேறுகிறது.

இதனால் தொடக்கத்தில் ஏற்பட்ட காலதாமதம் அடுத்த சில நாட்களில் குறைந்துவிடும், என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான அணைகள் வறண்டு ...

மலிவு விலை காய்கறி கடைகள் 'அம்போ' முதல்வர் ஜெ., நடவடிக்கை எப்போது?

Posted: 10 Jun 2016 01:14 PM PDT

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, தமிழக அரசின் சார்பில் திறக்கப்பட்ட மலிவு விலை காய்கறி கடைகள், அதிகாரிகள் அலட்சியத்தால், மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், காய்கறி விலை உயர்ந்ததால், 2013ல், பண்ணை பசுமை நுகர்வோர் என்ற பெயரில், மலிவு விலை காய்கறி கடைகளை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இந்த கடைகள், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படுகின் றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில், 72 கடைகள் உள்ளன. தற்போது, மலிவு விலை காய்கறி கடைகளை, அதிகாரிகள் பெயரவுக்கு மட்டும் நடத்துவதால், மக்கள் வருவதில்லை. ...

ஐ.ஐ.டி., சுரங்கவியல் படிப்பில் மாணவியருக்கான தடை நீக்கம்

Posted: 10 Jun 2016 01:26 PM PDT

அண்ணா பல்கலையைத் தொடர்ந்து, இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி.,யிலும், சுரங்கவியல் படிப்புக்கு, இந்த ஆண்டு முதல், மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.

இன்ஜி., தொழில்நுட்ப படிப்பில், மாணவியரை பொறுத்தவரை, 'மெக்கானிக்கல், இண்டஸ்டி ரியல் இன்ஜி., மற்றும் இன்ஜினியரிங் இன்ஸ்ட்ரூமென்டேஷன்' போன்ற படிப்புகளில் குறைவாகவும்; 'கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெடிக்கல் இன்ஜி.,' போன்ற படிப்புகளில் அதிகமாகவும் சேருவர்.அதே நேரம், சுரங்கவியல் இன்ஜி., படிப்பில் மாணவியரை சேர்க்க, ஏற்கனவேதடை இருந்தது. இந்திய ...

சென்னை அருகே ரயில்வேயின் 'ஆட்டோ ஹப்' 10 ஆண்டில் ரூ.500 கோடி கூடுதல் வருவாய்

Posted: 10 Jun 2016 01:47 PM PDT

சென்னை அருகே கார் மற்றும் இதர வாகன சரக்கு போக்குவரத்தை கையாள்வதற்காக ரயில்வே துறையின், 'ஆட்டோ ஹப்' வேகமாக தயாராகி வருகிறது.

வாகன சரக்கு துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ள இத்திட்டம் மூலமாக, அடுத்த, 10 ஆண்டு களில், கூடுதலாக, 500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டும் தொலைநோக்கு திட்டத்தை தெற்கு ரயில்வே வகுத்துள்ளது. ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கும் அளவுக்கு, கார் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி மையமாக சென்னை திகழ்கிறது. சென்னை அருகில், 'ஹூண்டாய், ரெனோ - நிஸான், டெய்ம்லர், அசோக் லேலண்ட், போர்டு, பி.எம்.டபிள்யூ., யமஹா, ராயல் என்பீல்ட், மிட்சுபிஷி' என, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™