Tamil Star |
- வங்காளதேசத்திற்கு கனடாவும் உதவி வழங்கியுள்ளது
- நியூமார்க்கெட் வடக்கில் வாகன விபத்து
- ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்
| வங்காளதேசத்திற்கு கனடாவும் உதவி வழங்கியுள்ளது Posted: 30 May 2016 08:57 AM PDT
கடந்த 21 ஆம் திகதி வங்காளதேசத்தின் கரையோரப் பகுதிகளை தாக்கிய கடுமையான புயல் காரணமாக, அங்குள்ள 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாதிக்ப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை அந்த நாட்டு அரசாங்கம் மற்றும ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்கள் என்பவை வழங்கிவரும் நிலையிலேயே, கனடாவின் உதவித் திட்டங்களும் அங்கு சென்று சேர்ந்துள்ளது. சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட உதவி அமைப்புக்கள் மூலமாக கனடா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா வழங்கியுள்ள நிதியில் வாங்காளதேசத்தின் போலா மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு நீர், சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. The post வங்காளதேசத்திற்கு கனடாவும் உதவி வழங்கியுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூமார்க்கெட் வடக்கில் வாகன விபத்து Posted: 30 May 2016 08:53 AM PDT
Holland Landingஇல் அமைந்துள்ள Mount Albert வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஒரு வாகனமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற பெண்னே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவல்த்துறையினரின் தகவல்கள் கூறுகின்றன. எனினும் மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படா நிலையில், விபத்துக்கான காரணம், மற்றும் உயிரிழந்த பெண்ணின் விபரங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியவில்லை. அதேவேளை விபத்துக்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பின்னர் வழமைக்கு வந்துள்ளதாகவும், விசாரணைகளில் தொடர்ந்தும் காவல்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்க்பபடுகிறது. The post நியூமார்க்கெட் வடக்கில் வாகன விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள் Posted: 30 May 2016 08:24 AM PDT
ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும். செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்துவந்தால், சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம். இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும். எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான். அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். இந்த எலுமிச்சை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள், எலுமிச்சை ரசம் செய்முறை ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டுபிசைந்து கொள்ளவும். பூண்டு,மிளகு, சீரகம், தனியா, மிளகாய்வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா,மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்புசேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பைவைக்கவும். ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கிமூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்கவிடக்கூடாது. சுவையான எலுமிச்சை ரசம் ரெடி. ரசம் அதிகம் கொதித்துவிட்டால் கசந்துவிடும். The post ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

புயல் காரணமாக பாதிப்புக்களை எதிர்கொண்ட வங்காளதேசத்திற்கு கனடா உதவி வழங்கியுள்ளது.
நியூமார்க்கெட்டின் வடக்கே நேற்று இரவு வேளை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.