Tamil Star |
- கனடாவில் தீயணைப்பும் பணிகளில் பங்களிப்பு செய்யும் அமெரிக்க தீயணைப்புப் படையினர்
- மிசிசாகா விபத்தில் 12 வயது சிறுமி படுகாயம்
- St. Jacobs உழவர் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு
| கனடாவில் தீயணைப்பும் பணிகளில் பங்களிப்பு செய்யும் அமெரிக்க தீயணைப்புப் படையினர் Posted: 27 May 2016 09:08 AM PDT
200 தீயணைப்பு படை வீரர்கள் கனடாவுக்கு பயணித்துள்ளதாகவும், அவர்கள் அமெரிக்காவில் இருந்து புதன்கிழமை காலையில் புறப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தேசிய தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது. இவர்களுடன் அமெரிக்காவின் நில முகாமைத்துவ திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வன விலங்குள் மற்றும் மீன் வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடாவிற்கு வருகை தந்துள்ளமை இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவில் ஏற்படும் தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவின் தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. The post கனடாவில் தீயணைப்பும் பணிகளில் பங்களிப்பு செய்யும் அமெரிக்க தீயணைப்புப் படையினர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகா விபத்தில் 12 வயது சிறுமி படுகாயம் Posted: 27 May 2016 08:26 AM PDT
நேற்று இரவு 8.30 அளவில் Meadowvale Town Centre Circle மற்றும் Aquitaine Avenue பகுதியில் உள்ள வீதிச் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மிதி வண்டியில் சென்றுகொண்டிருந்த போதே சிறுமியை பேருந்து மோதியதாகவும், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் விபத்து சம்பவித்தமைக்கான காரணங்கள் எவையும் உடனடியாக வெளிவராத நிலையில், காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post மிசிசாகா விபத்தில் 12 வயது சிறுமி படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| St. Jacobs உழவர் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு Posted: 27 May 2016 08:16 AM PDT
நேற்று வியாழக்கிழமை குறித்த சந்தைக் கட்டங்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாகவே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீ சம்பவத்தினால் எழுந்த கரும்புகை காணமாக Peddlar's Village பகுதியில் இருந்து பிற்பகல் 1.30 மணியளவில் நுற்றுக் கணக்கான மக்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த புகையை கண்டதும் உடனடியகாவே தீயணைப்புப் படையினர் குறித்த இடத்திற்கு விரைந்திருந்தாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு புகை ஏற்பட்ட கட்டத்தின் கூரையின் ஒரு பகுதியை வெட்டி திறந்து குறிப்பாக புகை எழுந்த இடத்தை கண்டுபிடித்திருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. குறித்த தீ சந்தைப் பகுதியில் மக்கள் கூடியிருந்த இடத்தின் மத்தியில் ஏற்படவில்லை என்றும், கட்டத்தின் சீலிங்கிற்கும் கூரைக்கும் இடையில் ஏற்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அந்த புகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்காக காரணம் தொடர்பான தகவல்களோ, சேத விபரம் தொடர்பான தகவல்களோ வெளியிடப்படவில்லை. The post St. Jacobs உழவர் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஃபோர்ட் மக்முர்றி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக அமெரிக்க தீயணைப்பு படை வீரர்கள் கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.
மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற பேருந்து நிபத்தில் 12 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
மிகவும் சுறுறுப்பான சந்தை நாளான நேற்று St. Jacobs உழவர் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.