Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கப்பப் பணம் செலுத்துவதற்கு எதிரான நிலைப்பட்டினை விரிவு படுத்துமாறு பிரதமர் கோரிக்கை

Posted: 26 May 2016 09:52 AM PDT

7

7ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வற்காக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ யப்பான் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஏனைய ஆறு நாடுகளின் தலைவர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்காக கப்பப் பணம் செலுத்துவதற்கு எதிரான நிலைப்பட்டினை மேலும் விரிவு படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனேடியப் பிரதமர் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை தொடர்பில் அவரின் தனிப்பட்ட பிரதிநிதி யப்பானில் வைத்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக கப்பப்பணத்தினை செலுத்துவதன் மூலம், மேலும் பலரை கடத்துவதற்கான தூண்டுதலை தீவிரவாதிகள் மத்தியில் ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.7

அத்துடன் ஏனைய அனைத்து பிரசைகளையும் ஆபத்தில் தள்ளுவதாக அமைந்துவிடும் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 அமைப்பின் இந்த ஆண்டுக்கான மாநாடு யப்பானில் இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

The post கப்பப் பணம் செலுத்துவதற்கு எதிரான நிலைப்பட்டினை விரிவு படுத்துமாறு பிரதமர் கோரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Posted: 26 May 2016 09:45 AM PDT

நேற்று இரவு ரொரன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் ஆண் நபர் என்றும் அவர் உடனடியகாவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Jane Street மற்றும் Shoreham Drive பகுதியில் நேற்று இரவு 10.30 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று்ளளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் அந்த பகுதியில் பல்வேறு துப்பாக்கி வேட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை சம்பவம் இடம்பெற்ற […]

The post ரொரன்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகன விபத்தொன்றில் 5வயது சிறுவன் படுகாயம்

Posted: 26 May 2016 09:41 AM PDT

hu

huபார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Queen Street West மற்றும் Jameson Avenue பகுதியில் அமைந்துள்ள வீதிச் சந்திப்பில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30 அளவில் Jameson Avenue பகுதியில் தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமே குறித்த அந்த ஐந்து வயது சிறுவனை மோதியதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்து விசாரணைகளுக்கு ஒத்துளைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தின் காரணமாக குறித்த பகுதி வழியான போக்குவரத்துக்கள் சில மணிநேரங்களுக்கு தடை செய்யப்பட்டதுடன், இரவு 7.30 அளவில் இருந்து குறித்த வீதி ஊடான போக்கு வரத்துக்கள் அனுமதிக்கப்படிருந்தன.

The post வாகன விபத்தொன்றில் 5வயது சிறுவன் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™