Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


சிறுநீரக நோய்களை குணமாக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

Posted: 21 May 2016 08:44 AM PDT

j

jசதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படும் தண்ணீர் முட்டான் கிழங்கு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி.

பலவிதமான சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும், சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும் உதவுகிறது.

இது சிறுநீர் போக்கினை தூண்டி மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

இதற்கு இதிலுள்ள செயல் திறன் மிக்க வேதிபொருட்கள் ஆன ஸ்டிராய்டல், ஃபிளேவனாய்டுகள், குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள் போன்றவையே காரணம்.

சிறுநீரக நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் நரம்பு மண்டல நோய்களையும், மலட்டு தன்மையையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க உதவும் தைலங்களில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

பால்வினை நோயான கோனேரியாவுக்கு மருந்தாக பாலுடன் கலந்து தரப்படும் இத்தாவரம் பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதில் முக்கிய பங்காற்றி பெண்குறி கோளாறுகளைப் போக்கிடவும் உதவுகிறது.

The post சிறுநீரக நோய்களை குணமாக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உருளைக்கிழங்கில் அப்படி என்ன தான் உள்ளது?

Posted: 21 May 2016 08:41 AM PDT

download

downloadஉருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகிவிடுவார்கள் என்று கூறப்பட்டாலும், அதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.

உருளையில் அடங்கியுள்ள மாவுச்சத்தே குண்டாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

உருளைக்கிழங்கில் அதிக அளவில் ஸ்டார்ச் சத்து உள்ளது. 100 கிராம் உருளை 70 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராமிற்கு 0.1 கிராம் கொழுப்பு இதிலுள்ளது. விட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து உருளையில் மிகுந்து காணப்படுகிறது.

உருளையில் எளிதில் கரையத்தக்க மற்றும் கரையாத, நார்ச்சத்துக்கள் உள்ளன. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலைத் தடுக்கும். கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.

நார்ச்சத்தானது குடலில் இருந்து ஒற்றைச் சர்க்கரையை உறிஞ்சு கொள்கிறது. மேலும் ஸ்டார்ச்சை மெதுவாக ஜீரணம் செய்ய உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் உருளை பங்கெடுக்கிறது.

பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உருளைக் கிழங்கில் மிகுந்துள்ளது. பைரிடாக்சின் (விட்டமின் பி6), தயமின், நியாசின், பான்டோதெனிக் அமிலம் மற்றும் போலேட்டுகள் அடங்கிஉள்ளன.

புத்துணர்ச்சி மிக்க உருளையின் தோலில் நிறைய ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. குறிப்பாக விட்டமின் சி மிகுந்துள்ளது. 100 கிராம் கிழங்கில் 11.4 மில்லிகிராம் அளவில் விட்டமின் சி உள்ளது.

பல்வேறு காய் கறிகளில் இருந்தும் தொடர்ச்சியாக உடலுக்கு விட்டமின் சி, கிடைப்பது பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்துஉடலைக் காக்கும் வேலையைச் செய்கிறது. ப்ரீ ரேடிக்கல்களையும் கட்டுப்படுத்துகிறது.

அதிக அளவில் இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உருளையில்அடங்கி உள்ளது.

சிவப்பு மற்றும் பழுப்பு நிற உருளையில் தேவையான அளவில் விட்டமின் ஏ உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.

புற்று நோய் மற்றும் இதய பாதிப்புகளுக்கு எதிராக செயலாற்றும் திறன் உருளையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

The post உருளைக்கிழங்கில் அப்படி என்ன தான் உள்ளது? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

எகிப்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் IBM நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்

Posted: 21 May 2016 08:26 AM PDT

hj

hjஎகிப்திய விமான விபத்தில் உயிரிழந்த கனேடியர் இருவரில் ஒருவர் IBM நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர் மூன்று பிள்ளைகளின் தாய் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த எஜிப்ட் எயர் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மத்தியதரைக் கடல் பகுதியில் வீழந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது.

அதில் இரண்டு கனேடியர்கள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் மார்வா ஹாம்டி எனப்படும் பெண் என தற்பொது அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

IBM நிறுவனத்தில் திட்ட முகாமையாளராக பணியாற்றிவரும் அவருக்கு 16, 13, 11 வயதுகளில் மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், அவர் குடும்ப வாழ்க்கையிலும் தனது பணியிலும் சிறந்த முறையில் செயலாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாரீசில் உள்ள குடும்த்தினரைப் பார்க்கச் சென்றுவிட்டு, எகிப்திய தலைநகரான கெய்ரோவிற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரின் குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post எகிப்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் IBM நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

Posted: 21 May 2016 07:03 AM PDT

jk

jkஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்பில் நபர் ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆட்கத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், 34 வயதான அந்த நபர் மிசிசாகாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காவல்த்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 24 வயது பெண் ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அந்த பெண்ணை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவர் மூலம் கிடைத்த பணத்தினை அபகரித்துக் கொண்டதாகவும் பீல் பிராந்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் நடாத்தி வந்த நிலையிலேயே குறித்த நபரை, ஒன்ராறியோவின் மிட்லான்ட் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

The post ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை – காவல்த்துறை உத்தியோகத்தர்கள் சங்கம்

Posted: 21 May 2016 07:00 AM PDT

gh

ghகாட்டுத் தீயினால் பாதிக்க்பபட்ட அல்பேர்ட் டாவின் ஃபோர்ட் மக்முர்றி பகுதியில் பணியாற்றிவரும் அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என காவல்த்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நச்சுப் புகையிலிருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான உரிய முகமூடிகள் வழங்கப்படவில்லை என கனேடிய மத்திய காவல்த்துறை அதிகாரிகள் சங்கம் குறை கூறியுள்ளது.

ஐந்து நாட்களா புகைக்குள் பணியாற்ற நேர்ந்த, குறைந்தது ஒரு காவல்த்துறை அதிகாரி, புகையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முகமூடி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.gh

அத்துடன் சாதாரண தூசுக்காக பயன்படுத்தும் கடதாசி முகமூடி ஒன்றினையே அவர்கள் பயன்படுத்த நேர்ந்ததாகவும், அதனையும் தாமாகவே அவர்கள் தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும் முறைப்பாடு குறைகூறப்பட்டுள்ளது.

அவ்வாறான இடங்களில் பணியாற்றும் காவல்த்துறை அதிகாரிகள் அனைவருக்கும் இராணுவ தரத்தினால் ஆண முகமூடிகளே வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும்.

வழங்கப்பட்டிருந்த குறிப்பிட்ட எண்ணிக்கையான மூடிகள் கூட குறைந்த தரத்திலானவை என்றும் அந்த முகமூடிகள் கூட குறைவான எண்ணிக்கையிலேயே வழங்கப்பட்டிருந்ததாகவும் காவல்த்துறை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அங்கு பணிக்கு அனுப்பப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு செய்யப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

The post போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை – காவல்த்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™