Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழக அமைச்சரவையில் பிளஸ் 2 தாண்டாத 15 பேர்

Posted: 29 May 2016 09:33 AM PDT

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில், முதல்வரையும் சேர்த்து, 33 அமைச்சர்களில், 15 பேர், பிளஸ் 2 படிப்பை தாண்டவில்லை.

அறிக்கையாகசட்டசபை தேர்தலின் போது, வேட்பு மனுக்களுடன் இவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, தமிழ்நாடு எலெக் ஷன் வாட்ச், ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள், இந்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டு ள்ளன.
அதில் கூறியுள்ளதாவது:தமிழக சட்டசபையில்,
மொத்தம் உள்ள, 33 அமைச்சர்களில், 18 பேர் பட்டப்படிப்பும், பட்டமேற்படிப்பும் படித்துள்ளனர். இவர்களில், ஆறு பேர் பட்டப்படிப்பும், எட்டு பேர் முதுகலை ...

அதிவேக ரயில்களை இயக்கும் ரயில்வேயின் முயற்சி வேகமெடுக்கிறது:'டால்கோ' ரயிலை 115 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை

Posted: 29 May 2016 09:48 AM PDT

புதுடில்லி:உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த, 'டால்கோ' நிறுவனம் தயாரித்துள்ள ரயில், அதிகபட்சமாக மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கி, சோதிக்கப்பட்டது.

மிக நீளமான ரயில் பாதைகளையும், அதிக அளவு ரயில்களையும் இயக்கி வரும் இந்திய ரயில்வே, செலவுகளை குறைக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.'கதிமான் எக்ஸ்பிரஸ்' என்ற, நாட்டின் அதிவிரைவு ரயில், கடந்த மாதம் ...

சோனியா, அமித் ஷாவுக்கு சி.ஐ.சி., 'நோட்டீஸ்'

Posted: 29 May 2016 09:53 AM PDT

புதுடில்லி:தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காத, ஆறு தேசிய கட்சிகளுக்கு, சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

தகவல் உரிமை ஆர்வலர், ஆர்.கே. ஜெயின் உள்ளிட்ட 17 பேர், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ், தேசிய கட்சிகளிடம், அவற்றின் செயல்பாடு, நிதி வருவாய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்தகேள் வி களுக்கு, ஆறு தேசிய கட்சிகள் பதில் அளிக்காத தால், மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர்.
இதையடுத்து, ஆறு தேசிய கட்சிகளுக்கும், மத்திய தகவல் ஆணையம், ...

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

Posted: 29 May 2016 09:59 AM PDT

பெங்களூரு:'' அடுத்த ஆறு ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே என் கனவு,'' என, பிரதமர் மோடி பேசினார்.

மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, இரண்டாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, கர்நாடக மாநிலம் தாவணகரேயில், பா.ஜ., சார்பில் நேற்று, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் பேசியதாவது:நாடு முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறேன். எனக்காக பல லட்சம் பேர், வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு வந்துள்ளனர்; அதற்காக நன்றி. பா.ஜ., அரசு, ஏழை களின் நலனுக்காக, 60 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை இரண்டே ஆண்டுகளில் செய்து ...

மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்

Posted: 29 May 2016 10:02 AM PDT

புதுடில்லி;''நாடு முழுவதும் கடும் வறட்சியால், விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், பா.ஜ., தலைவர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, இரண்டாண்டு முடிவடைந்ததை, அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி,டில்லியில் நேற்று முன்தினம் பிரம்மாண்ட விழா நடந்தது; இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறியதாவது:நாடு முழுவதும் கடுமையான வறட்சி ...

தமிழ் உட்பட ஆறு மொழிகளில்பிரதமர் அலுவலக இணையதளம்

Posted: 29 May 2016 10:11 AM PDT

புதுடில்லி:பிரதமர் அலுவலக இணையதளம், தமிழ் உட்பட, மேலும் ஆறு மொழிகளில் துவங்கப்பட்டுஉள்ளது.

மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், அறிவிப்புகள், பிரதமர் அலுவலக விவரங்கள், மற்றும் மக்களுடனான தகவல் பரிமாற்றம் ஆகியவை, www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இடம் பெறுகின்றன.
பிரதமர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணம், அவர் நிகழ்த்தும் உரை ஆகியவையும் இதில் இடம் பெறுகின்றன. இது வரை, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும், இந்த இணையதளத்தில் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. ...

செயற்கை மழை தொழில்நுட்பம்:இந்தியாவுக்கு உதவுகிறது சீனா

Posted: 29 May 2016 10:12 AM PDT

மும்பை:நாட்டில், கடும் வறட்சி பாதித்த பகுதிகளில், செயற்கை மழையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வழங்க, சீனா முன்வந்துள்ளது.

மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உள்ளது.
இந்நிலையில், செயற்கை மழை உண்டாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சீனா, அத்தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. செயற்கையாக கருமேகங்களை உருவாக்கி, மழை பெய்யச் செய்வதற்கான, ...

நாடு முழுவதும் போலி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்போர் 5 கோடி பேர்! தடுக்க அபராதம், தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

Posted: 29 May 2016 11:24 AM PDT

புதுடில்லி,:நாடு முழுவதும், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் போலி, 'டிரைவிங் லைசென்ஸ்' வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தடுக்க, போலி லைசென்ஸ் வைத்திருப்போருக்கான தண்டனை மற்றும் அபராதத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தற்போது நாடு முழுவதும், 18 கோடி பேருக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஏராளமானோர் போலி லைசென்ஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. போலி லைசென்சை ஒழிக்கவும், போலி லைசென்ஸ் வைத்திருப்போருக்கான தண்டனையை அதிகரிக்கவும் மத்திய அரசு ...

பெங்களூரு அணி தோல்வி; கோப்பை வாய்ப்பை பறிகொடுத்தது

Posted: 29 May 2016 11:31 AM PDT

பெங்களூரு: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., பைனலில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த பெங்களூரு அணி கோப்பை வாய்ப்பை பறிகொடுத்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
வார்னர் விளாசல்: ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான் 28 ரன்கள் எடுத்தார். ஹென்ரிக்ஸ் (4) நிலைக்கவில்லை. அதிரடியாக விளையாடிய வார்னர் (69) அரை சதம் கடந்தார். தன் பங்கிற்கு யுவராஜ் சிங் 38 ரன்கள் எடுத்தார். பின் வந்த பென் கட்டிங் 15 ...

எஸ்.டி., பட்டியலில் மீனவர்கள் கருணாநிதி வேண்டுகோள்

Posted: 29 May 2016 02:13 PM PDT

சென்னை:'மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு, அவர் எழுதிய கடித விவரம்:நரிக்குறவர்கள் உள்ளிட்டவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதற்கு, தி.மு.க., சார்பில் நன்றி. மற்ற சமூகத்தினரை விட, நரிக்குறவர்கள், சமூகம் மற்றும் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளனர். நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், பல சலுகைகளை பெற்று,அவர்கள் வாழ்வில் முன்னேற முடியும்.இதேபோல், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™