Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நீரிழிவு நோய் வராமல் தடுக்க கோவைக்காய்!

Posted: 09 Apr 2016 08:58 PM PDT

k

kபுதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவை கொடியின் முழுத் தாவரமும் மருத்துவகுணம் கொண்டது.

காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

நீரிழிவை கட்டுப்படுத்தும்கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று.

தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.

கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.

கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

The post நீரிழிவு நோய் வராமல் தடுக்க கோவைக்காய்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேலைவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது வழமை – நிதி அமைச்சர்

Posted: 09 Apr 2016 01:14 PM PDT

uyt

uytகனடாவில் வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது வழமையான ஒன்று என நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார்.

கனேடிய புள்ளி விவரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்ததன் காரணமாக வேலையற்றோரின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டது.
அத்துடன் இந்த நிலைமை மார்ச் மாத்தில் அதிகமான மாற்றத்தைக் காட்டியிருந்த போதிலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டிலும் சராசரியான வேலை வாய்ப்பு எண்ணிக்கைகள் அதிகமாகவே காணப்பட்டதை கனேடிய புள்ளிவிபரத் தகவல்கள் காண்பித்துள்ளன.

இந்த அதிபரிப்புத் குறித்து நிதியமைச்சரிடம் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் வினவிய போதே அவர், கனடாவின் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது அதீத ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழமை என்பதனையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைவாயப்பு விடயத்தினை தவிர நாடு வேறு பல சவால்களை எதிர்கெர்ண்டுள்ளதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசாங்கம் என்ற வகையில் இன்று மட்டுமின்றி எதிர்காலத்திலும் கனேடியர்களின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

The post வேலைவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது வழமை – நிதி அமைச்சர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடாபில் விசாரணை முன்னெடுப்பு

Posted: 09 Apr 2016 12:10 PM PDT

ui

uiLiberty Villageயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், நபர் ஒருவரை வேறு இருவர் அணுகியிருந்தனர் என்றும்,அந்த இருவரும் காவல்த்துறையினரின் மேற்கவசம் போல் உடையணிந்த, முகமூடி போட்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு இடம்பெற்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

அந்த இருவரும் குறித்த நபரை தாக்கியதுடன் கறுப்பு நிற SUV வாகனத்தினுள் தள்ளியிருந்தனர் என்றும், பின்னர் மூவரும் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர் என்றும் கூறியுள்ளனர்.ui

கடத்தப்பட்ட அந்த நபர் ஆசிய நாட்டவர் என்றும், ஐந்து அடி எட்டு அங்குல உயரமும் 160 இறாத்தல் நிறையும் குறுகிய கறுப்பு தலைமுடி கொண்டவர் என்றும் அடையாளப்படுத்தியுள்ள காவல்த்துறையினர் அவரை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடத்திய இருவரில் ஒருவர் ஐந்தடி பத்தங்குல உயரமும், மற்றையவர் ஆறடி உயரமும் கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

The post நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடாபில் விசாரணை முன்னெடுப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™