Tamil Star |
| வின்னிப்பெக்கின் Wolseley பகுதியில் தீ சம்பவம் Posted: 24 Apr 2016 12:38 PM PDT
அங்கு கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த புதிய குடியிருப்பு தொகுதி வீடு ஒன்றில் முதலில் தீ பற்றிக்கொண்டதாகவும், பின்னர் அது அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கு பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீ பற்றிக்கொண்ட அந்த வீட்டில் இருந்த அனைவரும் தாமாகவே வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைப்பதில் கடும் முயற்சி எடுத்திருந்தனர் என்றும், அதன் போது தீயணைப்பு படையினர் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். தீ்ப் பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், தீ விபத்து மற்றும் சதிச் செயல்கள் தொடர்பில் ஆராயும் அதிகாரிகள், இந்த சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post வின்னிப்பெக்கின் Wolseley பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உந்துருளி விபத்து – ஒருவர் படுகாயம் Posted: 24 Apr 2016 12:15 PM PDT
Church வீதியில் இன்று இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் உந்துருளியில் (Yamaha) வந்த நபர் நாய் ஒன்றுடன் மோதுண்டு உந்துருளியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான உந்துருளியின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் அவசர உலங்குவான்னூர்தி மூலமாக உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார் என்றும், அவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு மதுப் பாவனை காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விபத்து இடம்பெற்ற குறித்த பகுதி குறிப்பிட்ட மணித்தியாளங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது. The post உந்துருளி விபத்து – ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

வின்னிப்பெக்கின் Wolseley பகுதியில் மோசமான தீச் சம்பமவ் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
Blackstock இல் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஒட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.