Tamil Star |
- பிரம்டனில் சரக்கு தொடருந்து மோதி பாதசாரி உயிரிழப்பு
- Burlingtonஇல் இன்று பிற்பகலில் விபத்து: மூவர் பலி
- மார்க்கம் பகுதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
- Richmond Hill மதுபான நிலையத்தில் கைகலப்பு
| பிரம்டனில் சரக்கு தொடருந்து மோதி பாதசாரி உயிரிழப்பு Posted: 16 Apr 2016 02:16 PM PDT
நேற்று அதிகாலை 4 மணியளவில் Millவீதி மற்றும் Rail வீதிகளுக்கு அண்மையில் பாதசாரி ஒருவர் தொடருந்தால் மோதப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தால் மோதப்பட்ட பாதசாரி உயிரிழந்து விட்டார் என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் ஆண் நபர் என கூறப்பட்டுள்ள போதிலும், அவரின் வயது உள்ளிட்ட ஏனைய விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post பிரம்டனில் சரக்கு தொடருந்து மோதி பாதசாரி உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Burlingtonஇல் இன்று பிற்பகலில் விபத்து: மூவர் பலி Posted: 16 Apr 2016 01:36 PM PDT
இந்த விபத்தில் உந்துருளி ஒன்றும் SUV வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றிருப்பதாக முறையிடப்பட்டு மேற்கு Dundas வீதி மற்றும் Eaglesfield Drive பகுதிக்கு வருமாறு பிற்பகல் 6.10 மணியளவில் தாம் அழைக்கப்பட்டிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு விபத்தில் சம்பந்தப்பட்ட உந்துருளில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் உந்துருளியில் இருந்து தூக்கி வீசப்பட்டிருந்தனர் என்றும், அவ்வாறே SUV வாகனத்தின் ஆண் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார் என்றும் காவல்த்துறையினர் தெரிவி்துள்ளனர். விபத்தை அடுத்து Brant வீதி மற்றும் Blackwood Drive பகுதிக்க இடைப்பட்ட Dundas வீதி போக்குவரத்திற்க மூடப்பட்டு விசாரணைகளில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். The post Burlingtonஇல் இன்று பிற்பகலில் விபத்து: மூவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மார்க்கம் பகுதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு Posted: 16 Apr 2016 12:10 PM PDT
Major Mackenzie Drive இற்கு அருகில் Reesor வீதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், ஒரு வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் குறித்த வாகனம் ஹைட்ரோவன் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விபத்து நடந்த குறித்த வாகனத்தில் வேறு நபர்கள் இருந்தார்களா என்பது தொடர்பிலும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. விபத்தை அடுத்து குறித்த வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post மார்க்கம் பகுதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Richmond Hill மதுபான நிலையத்தில் கைகலப்பு Posted: 16 Apr 2016 12:03 PM PDT
East Beaver Creek மற்றும் நெடுஞ்சாலை 407 இற்கு அருகில் York Boulevard இல் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், குறித்த மது பானநிலையத்தினுள் சண்டை ஆரம்பித்ததாகவும், அதன் போது ஏற்பட்ட கைகலப்பிலேயே ஒருவர் காயமடைந்தார் என்றும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், எனினும் அவருக்கு உயிராபத்தான காயம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடாபில் நான்கு சந்தேக நபரைக் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர். The post Richmond Hill மதுபான நிலையத்தில் கைகலப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரம்டனில் பாதசாரி ஒருவரை சரக்குத் தொடருந்து மோதிய சம்பவம் தொடர்பில் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Burlington பதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹோடரன் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மார்க்கம் பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Richmond Hill பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.