Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மூவருக்கு வலைவீச்சு

Posted: 14 Apr 2016 09:48 AM PDT

shooting_-_14042016

shooting_-_14042016ரொரன்ரோவின் யங் வீதி மற்றும் பூலர் வீதிப் பகுதியில் நேற்று இரவு வேளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரை உடனடியாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் ஒரு ஆண் என கூறப்படுகின்ற போதிலும் அவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த குழுவில் இருந்த ஒருவர் உணவகத்தினுன் செல்ல முயன்ற போது அவரது முதுகுப் பகுதியில் 5 முறை சுடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.shooting_-_14042016

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்திவரும் காவல்த்துறையினர், தற்போது மூன்று சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.

தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களும் வெள்ளை இன ஆண்கள் எனவும், ஒவ்வொருவரும் கறுப்பு, நீலம், வெள்ளை ஆகிய நிறங்களில் குளிர் அங்கி அணிந்திருந்ததாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ரொரன்ரோ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மூவருக்கு வலைவீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™