Tamil Star |
- ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
- வீடு மற்றும் வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு
- எந்த பழத்தில் என்ன உள்ளது? தெரிந்து கொள்ளுங்கள்
| ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Posted: 12 Apr 2016 09:01 AM PDT
இது தொடர்பில் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிடுகையில், Dixon வீதி மற்றும் Kipling அவனியூப் பகுதியில் 18 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஒன்றுடன் அவதியுள்ள நிலையில் கிடக்கக் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர். உயிராபத்தான நிலையில் இருந்த அவர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளனர். இதேவேளை துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான அந்த நபர் வாகனம் ஒன்றில் வந்த நபர் ஒருவர் தம்மை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார் என காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டள்ளனர். எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய சந்தேக நபர் தொடர்பிலான அடையாளங்கள் எதனையும் காவல்த்துறையினர் இதுவரையில் வெளியிடவில்லை. The post ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீடு மற்றும் வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு Posted: 12 Apr 2016 08:52 AM PDT
அதிகாலை 1 மணியளவில் குறித்த வாகனம் Vaughan பகுதியில் திருடப்பட்டுள்ளதாகவும், அங்கு இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். பின்னர் சந்தேக நபர்கள் பியர் விற்பனை நிலையத்தினுள் யன்னலை உடைத்து நுளைந்து 24 பெட்டி பியரை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்ற அரை மணித்தியாளங்களின் பின்னர் இலத்திரனியல் கடை ஒன்றினுள் நுளைந்து தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர். சந்தேக நபர்களை இனங்காண்பதற்காக பாதுகாப்பு ஒளிப்படக் கருவிகளில் பதிவுகளை சோதனை செய்துவரும் காவல்த்தறையினர், இன்னமும் சந்தேக நபர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை. The post வீடு மற்றும் வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எந்த பழத்தில் என்ன உள்ளது? தெரிந்து கொள்ளுங்கள் Posted: 12 Apr 2016 07:27 AM PDT
எனவே பழங்களின் பயன் அறிந்த சாப்பிடுங்கள். அவகேடா கெட்ட கொழுப்பை குறைத்து நல்லகொழுப்பை அதிகரிக்கும். லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும். இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும். வாழைப்பழம் உடனடி ஆற்றல் கிடைக்கும். விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது. அல்சரை தடுக்கும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சிறுநீரக கோளாறுகளை சீர்செய்யும். மாம்பழம் உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது. திராட்சைப்பழம் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைகுறைக்கும். The post எந்த பழத்தில் என்ன உள்ளது? தெரிந்து கொள்ளுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



ஆரோக்கிய வாழ்க்கைக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.