Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கட்சிக்காக நிதி சேகரிப்பது தடை செய்யப்படும் – கதலின் வின்

Posted: 11 Apr 2016 09:15 PM PDT

l

lஒன்ராறியோவின் பிரதான கட்சிகள் இன்று சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளன.

அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் விடயத்தில் சீர்திருத்ம் செய்வது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் போது நிதி திரட்டுவது தொடர்பில் மாநில முதல்வர் கதலின் வின் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களின் கரிசனையை முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

வசந்தகாலத்தில் அது தொடர்பான சட்ட மூலம் ஒன்றை சமர்ப்பிக்க இருப்பதாக மாநில முதல்வர் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சிகள் நிதி சேகரிப்பதுத தொடர்பில் எதிர் கட்சிகள் ஏற்கனவே கடும் கண்டனத்தை வெளியிட்டுவருகின்றனர்.

அமைச்சர் ஒவ்வொருவரும் ஐந்து இலட்சம் டொலர் நிதி திரட்ட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர்

The post கட்சிக்காக நிதி சேகரிப்பது தடை செய்யப்படும் – கதலின் வின் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

யப்பானின் ஹிரோசிமா நினைவிடத்திகு சென்ற கனேடிய வெளிவிவகார அமைச்சர்

Posted: 11 Apr 2016 10:15 AM PDT

Stephane_Dion_-_10042016

Stephane_Dion_-_10042016கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் லியோன் யப்பானின் ஹிரோசிமா நகரிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்தில் அமைக்கப்பட்ட அமைதி பூங்காவிற்கு சென்றுள்ளார்.

ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 26ஆம் 27ஆம் நாட்களில் ஜப்பானில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று யப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று நடைபெற்றிருந்தது.

அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் யோன் கெரி உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சர்கள் அனைவரும் அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்தில் அமைக்கப்பட்ட அமைதி பூங்காவிற்கு சென்றிருந்ததுடன், அங்கு மலர் வளையங்களை வைத்து வணக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கனேடிய வெளிவிவகார அமைச்சர்ஸ்டீபன் லியோனும் பங்கெடுத்துள்ளார்.Stephane_Dion_-_10042016

இதேவேளை குறித்த இந்த வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவதற்காண முயற்சிகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் அணு ஆயுதங்களை இல்லாது செய்யும் இந்த இலக்காணது மிகவும் நீண்ட தூரம் கொண்டது என்ற போதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் அணு ஆயுதத்தை உறுவாக்குவதை தடுக்கும் வகையில் அவற்றிற்கான பொருட்கள் அவர்களைச் சென்றடையாது செய்யும் நடவடிக்கையும் அடங்குவதாகக் கூறியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத்திற்கு எதிரான போர் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம், துருக்கி, நையீரியா, பாகிஸ்தான், ஐவரிக் கோஸ் ஆகிய இடங்களில் அண்மையில் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் வடகொரியா மேற்கொண்ட அணுவாயுத சோதனை நடவடிக்கைகள் தொடர்பிலும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post யப்பானின் ஹிரோசிமா நினைவிடத்திகு சென்ற கனேடிய வெளிவிவகார அமைச்சர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் பழங்குடியின குடியிருப்பு பகுதியில் அவசரகால நிலை பிரகடனம்

Posted: 11 Apr 2016 10:01 AM PDT

Attawapiskat_-_10042016

Attawapiskat_-_10042016தற்கொலைக்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்ராறியோவின் அட்டாவாபிஸ்காட்(Attawapiskat) பழங்குடியின குடியிருப்பு பிரதேசத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் குறித்த அந்த பழங்குடியின குடியிருப்பில் நேற்று முன்தினம் ஒருநாளில் மாத்திரம் 11 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், அதனை அடுத்தே அவசரகால நிலையினை பிரகடனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறித்த அந்த பழங்குடியின தலைவர் தெரிவித்துள்ளார்.

அந்த குடியிருப்பு பகுதிக்கு அவசரகால நடவடிக்கை குழு ஒன்றினை பழங்குடியின மக்களின் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ள நிலையில், அந்த குழுவுடன் மத்திய சுகாதார திணைக்களமும் தமது மனநல ஆலோசகர்கள் இருவரை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த அந்த பழங்குடியின குடியிருப்பில் கடந்த மாதத்தில் மாத்திரம் 28 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதுடன், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.Attawapiskat_-_10042016

கனடாவில் சுமார் 1.4 மில்லியன் பழங்குடியின மக்கள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதுடன், அவர்களின் வாழக்கைத் தரம் சாதாரண கனேடியர்களின் சராசரியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது

இதேவேளை இவ்வாறு ஒரு நாளில் மட்டும் குறைந்தது 11 பேர் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், இது மனதை உடைக்கும் ஒரு செய்தி என பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் தெரிவித்துள்ளார்.

The post ஒன்ராறியோவின் பழங்குடியின குடியிருப்பு பகுதியில் அவசரகால நிலை பிரகடனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகாலை கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 11 Apr 2016 09:52 AM PDT

Jem_Bar_-_10042016

Jem_Bar_-_10042016இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Danforth இல் உள்ள மதுவிற்பனை நிலையம் ஒன்றின் வெளியில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மது விற்பனை நிலையம் (Jem Bar) Danforth அவனீயூ மற்றும் பிரதான வீதியில் அமைந்துள்ளது.

காலை இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உயிராபத்தான காயம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவரை தாம் இனம் கண்டுள்ள போதிலும், அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.Jem_Bar_-_10042016

அத்துடன் இது தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post அதிகாலை கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்!

Posted: 11 Apr 2016 08:31 AM PDT

iu

iuஅதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

குழந்தைகள் பீட்ரூட்டை சாப்பிட மறுத்தால், அதனை கொண்டு விதவிதமான ரெசிபிக்கள் செய்து கொடுங்கள்.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 சதவீதம், புரதம் 17, கொழுப்பு 0.1, தாதுக்கள் 0.8, நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் 0.8 சதவீதமும், கால்சியம் 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 5.5, இரும்புச்சத்து 10, விட்டமின் 'சி' 10 மில்லி கிராமும் உள்ளன.

மருத்துவ பயன்கள்

பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.

அதோடு, விட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.y

பீட்ரூட் சாதம்

வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயைபொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகுபோட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்பு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டைநன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும்போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்துபிரட்டி அடுப்பை அணைக்கவும்.

பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதேஅதில் சிறிது சிறிதாக சாதத்தைசேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
p

The post சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழுப்பு அதிகமாக உள்ளதா? இந்த உணவை சாப்பிடாதீர்கள்!

Posted: 11 Apr 2016 08:26 AM PDT

k

kதற்போது அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் ஆகும்.

பாஸ்ட் புட் உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி, துரித உணவு வகைகளில் உள்ளது.

இந்த உணவில் கலக்கப்படும் சைனீஸ் சால்ட், வினிகர் உட்பட அனைத்தும் ரசாயனங்கள் ஆகும்.

இதனால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், அல்சர், வயிற்றுப்போக்கு, சிறுவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்மைக் குறைபாடு, நீரிழிவு நோய் ஏற்படும்.kj

நூடுல்ஸில் வழுவழுப்பு தன்மைக்காக சேர்க்கப்படும் மெழுகு போன்ற பொருள் எளிதில் ஜீரணமாகாது.

இதனால் குடல், இரைப்பை, உணவுக்குழாய் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இந்த வகை உணவை சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை, குழந்தை பேறு பிரச்னை, கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும்.

எனவே, இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

The post கொழுப்பு அதிகமாக உள்ளதா? இந்த உணவை சாப்பிடாதீர்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய, யப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Posted: 10 Apr 2016 01:57 PM PDT

f

fகனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோனும், ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஃபூமியோ கிஷின்டாவும் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளனர்.

G7 நாடுகளின் மாநாடு யப்பானின் ஹீரோஷீமா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக கனேடிய அமச்சர் ஜப்பான் சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஜப்பானுக்கும் கனடாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துளைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.f

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துளைப்புகளை மேலும் அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு "ரூ பிளஸ் ரூ" (two-plus-two) என அழைக்கப்படும் இரு தரப்பு மாநாடு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இரண்டு நாடுகளின் துணை வெளியுறவு அமைச்சர்களும், பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்துகொள்ளும் இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி டோக்கியோவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனேடிய, யப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க்கில் நெருப்புக் குழியில் இருந்து சடலம் மீட்பு

Posted: 10 Apr 2016 12:50 PM PDT

yi

yiநோர்த் யோர்க் பார்க் பகுதியில் நெருப்புக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலத்தை இனம் காணும் முயற்சியில் விசாரணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு ஷெப்பேர்ட் அவனியூ மற்றும் கீல் வீதிப் பகுதியில் உள்ள நோர்த்வூட் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டள்ளனர்.

குறித்த சடலம் தீக் குழியினுள் காணப்பட்டதாகவும், குறித்த அந்த தீக்குழி சேதமடைந்து எரிந்து காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.yi

குறித்த சடலம் 20 இற்கும் 35 இற்கும் இடைப்பட்ட வயதுடைய ஆணுடையது என்றும், மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது இது தொடாபில் பொதுமக்களின் உதவி நாடப்படுவதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post நோர்த் யோர்க்கில் நெருப்புக் குழியில் இருந்து சடலம் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™