Tamil Star |
- நண்டு வறுவல் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!
- மிலிற்றரின் விபத்து
- நோர்த் யோர்க் விபத்தில் மூவர் பலி
| நண்டு வறுவல் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! Posted: 10 Apr 2016 06:49 PM PDT
நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம். நண்டில் உள்ள புரோட்டீன் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும். காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது விட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும். பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். நண்டில் பல்வேறு வகையான ரெசிப்பிக்கல்செய்யலாம், இருப்பினும் இன்று நண்டு வறுவல் செய்து சாப்பிடுங்கள். நண்டை நன்றாக கழுவி சுத்தம்செய்த பிறகு நண்டுடன் மிளகாய்த்தூள், மிளகுத் தூள், மஞ்சள்தூள், பூண்டு விழுது, தேவையானஉப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறிஊற வைக்கவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து ஒருமேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும்மசாலாவுடன் சேர்த்து பிரட்டி ஊற வைத்திருக்கும்நண்டை போட்டு முன்னும் பின்னுமாகபிரட்டு, மூடி போட்டு இரண்டுபக்கமும் நன்றாக வேகும் வரைவதக்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
The post நண்டு வறுவல் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Apr 2016 01:40 PM PDT
ஆபத்தான காயங்களுக்கு உள்ளான அவரை அவசர உலங்கு வானூர்தி மூலம் ஹமில்ரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Esquesing இற்கு அருகில் James Snow Parkway South இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் எவையும் இன்னமும் வெளியிடப்படவில்லை. The post மிலிற்றரின் விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோர்த் யோர்க் விபத்தில் மூவர் பலி Posted: 10 Apr 2016 08:08 AM PDT
இந்த விபத்து Jane வீதி, Sheppard அவனியூப் பகுதியில் அதிகாலை 3.30 இற்கு இடம்பெற்றுள்ளது. Acura வாகனம் ஒன்றே Mercedes Benz வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், பின்னா அது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின் கம்பத்தையும் மோதித் தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர் என்றும் இதன் போதே மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. உயிரழந்த மூவரில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும், காயமடைந்த ஐவரில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் வேகம் இந்த விபத்துக்கு முக்கியமான காரணியாக அமைந்ததாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர். The post நோர்த் யோர்க் விபத்தில் மூவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமானது.
மிலிற்றனின் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 20 வயது ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நோர்த் யோர்க்கில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.