Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தேர்தல் பிரச்சார ஓய்வில் ஷூட்டிங் வரும் ஸ்ரீசாந்த்..!

Posted:

தமிழ் சினிமாவில் நடிகர்சங்க தேர்தல் நடைபெற்றபோது, தீவிர பிரச்சாரத்திலும் தேர்தல் தொடர்பான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே 'கதகளி' என்கிற படத்திலும் விஷால் நடித்து முடித்தாரே.. ஞாபகம் இருக்கிறதா..? இப்போது அதே ரூட்டில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் பயணிக்கிறார்.. விஷாலாவது நடிகர் சங்க தேர்தலில் தான் ...

நிவின்பாலி படம் மூலம் பாப்புலரான ட்வின்ஸ் தங்கச்சி..!

Posted:

கடந்தவாரம் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் டைரக்சனில் நிவின்பாலி நடிப்பில் 'ஜேகப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படம் வெளியானது.. வானத்தைப்போல படம்போல ஒரு குடும்பத்தில் உள்ள உறவுகளின் பிணைப்பையும், குடும்பத்தலைவனான தகப்பன் இக்கட்டான தருணத்தில் சிக்கி, குடும்பம் பொருளாதார சரிவுக்கு ஆளாகும்போது, மனைவியும் மகனும் அந்த குடும்பத்தை ...

பிரபாஸுடன் ஜோடி சேர விரும்பும் எமி ஜாக்சன்

Posted:

மதராசபட்டினம் படத்தின் வாயிலாக தமிழ் திரை உலக ரசிகர்களைக் கவர்ந்த எமி ஜாக்சன் அப்படத்திற்கு பின்னர் தாண்டவம், ஐ, கெத்து போன்ற பல படங்களில் நடித்து விட்டார். எமி ஜாக்சன் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள தெறி படம் தெலுங்கிலும் வெளிவரவுள்ளது. மதராசபட்டினம் படம் தெலுங்கில் 1947 எ லவ் ஸ்டோரி என்ற பெயரில் வெளிவந்தது. அதே போல் தெலுங்கிலும் ...

சென்டிமென்டை மாற்றும் மகேஷ் பாபு

Posted:

தெலுங்கு திரை உலகின் பிரின்ஸஸ் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோற்சவம் படம் மே 13 ஆம் தேதி திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் மே மாதங்களில் திரைக்கு வந்த நிஜம், நானி போன்ற படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் மகேஷ் பாபுவிற்கு மே ராசில்லாத மாதம் என கூறப்பட்டது. பிரம்மோற்சவம் படத்தின் திரையிடும் தேதியும் ...

பவன் கல்யாணின் அடுத்த படங்கள்

Posted:

பவன் கல்யாண் காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த சர்தார் கப்பார் சிங் படம் முதல் இரண்டு நாட்கள் வசூலை அள்ளினாலும் அதற்கு அடுத்து படத்திற்கு கிடைத்த எதிர்மறையாக விமர்சனங்களால் படத்தின் வசூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்நிலையில் பவன் கல்யாண் தனது அடுத்த அடுத்த படங்களில் கவனம் ...

ஆகஸ்டில் ஜுனியர் என்.டி.ஆரின் அடுத்த படம்

Posted:

இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் அப்படத்திற்கு பின்னர் அவரது சகோதரர் நடிகர் கல்யாண் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படம் ஆகஸ்டில் துவங்கும் என கூறப்படுகின்றது. ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ஜுனியர் என்.டி.ஆர், ...

செங்கல்பட்டு தெறி பிரச்னை : தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ காரணமில்லை - தாணு

Posted:

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி நடித்திருக்கும் தெறி படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுக்க இன்று(ஏப்.14ம் தேதி) வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் தெறியை தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இதுஒருபுறம் ...

ஒபாமாவுடன் ப்ரியங்கா விருந்து சாப்பிடவில்லை

Posted:

ப்ரியங்கா சோப்ராவின் புகழ் பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் டிவி நிகழ்ச்சியான குவாண்டிகோ மற்றும் ஹாலிவுட்டின் பேவாட்ச் படத்தில் பிஸியாக இருக்கிறார். இருதினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் ...

2017 ரம்ஜான், தீபாவளியை புக் செய்த சல்மான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் படம் ஆரம்பிக்கும் முன்னரே தனது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவார். குறிப்பாக பண்டிகை காலங்களில் இவருடைய படங்கள் தான் அதிகமாக ரிலீஸாகும். இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சுல்தான் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 2017ம் ஆண்டு ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகையை ...

மர்தானி-2 எடுக்கிறார் யாஸ்ராஜ்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ராணி முகர்ஜி, அதிரடி ஆக்ஷ்ன் போலீஸ் அதிகாரியாக நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த படம் மர்தானி. பிரதீப் சர்கார் இயக்கிய இப்படம் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து வெளியானது. யாஸ் ராஜ் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் மர்தானி-2 உருவாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரதீப் ...

ஹிருத்திக்கிற்கு ஆதரவாக போலீஸ் செயல்படுகிறது - கங்கனா

Posted:

பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், கங்கானா ரணாவத் இடையே கடுமையாக சண்டை நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பி வந்தவர்கள் இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறார்கள். தனது பெயரில் போலி இ-மெயில் உருவாக்கியதாக கங்கனா மீது ஹிருத்திக் புகார் தர, அவரையும், அவரது தங்கையையும் போலீஸ் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் ...

அஜய்யுடன் மோதும் ஷாரூக்கான்

Posted:

ஷாரூக்கான் நடித்து வரும் ராயீஸ் படம் அக்ஷ்ய் குமாரின் ருஸ்தம் படத்துடன் மோதுவாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அந்தப்படம் அக்ஷ்ய்குமாரின் ராயீஸ் படத்துடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன், தனது கனவுப்படமான 'ஷிவ்வாய்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக ...

அந்தமான் காட்டுக்கு செல்லும் அரவிந்த்சாமி!

Posted:

சினிமாவில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு இமேஜை ஏற்படுத்தியவர் அரவிந்த்சாமி. ஆனபோதும், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த கடல் படத்தில் பாதிரியாராக நடித்தார். அதன்பிறகு மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாகி விட்டார். அதுவும் அதிரடி வில்லனாக நடித்தார் அரவிந்த்சாமி. அந்த ...

சிம்பு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்! - மஞ்சிமா மோகன்

Posted:

மலையாள சினிமாவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு படையெடுத்துக்கொண்டிருக்கும் நடிகைகள் பெரும்பாலும் சோடை போவதில்லை. அந்த வகையில், சமீபத்திய வரவுகளான மடோனா, அனுபமா, சாய் பல்லவி, சாத்னா டைட்டஸ் என சில நடிகைகள் இறக்குமதியான நிலையில், கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தில் இன்னொரு கேரளத்து வரவான ...

கமர்சியல் நடிகையான கீர்த்தி சுரேஷ்!

Posted:

மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். மாஜி நடிகை மேனகாவின் மகள் என்பதால் அவருக்கு தமிழில் நல்லதொரு என்ட்ரி கிடைத்தது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் பல படங்களை கமிட் பண்ணினார். அதனால் இது என்ன மாயம், ரஜினி முருகன், நீனு சைலஜா ஆகிய ...

இறைவியை எதிர்பார்க்கும் பாபி சிம்ஹா!

Posted:

சித்தார்த் தயாரித்து நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகமானபோதும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் பாபி சிம்ஹா. அதையடுத்து மசாலா படம், உருமீன், பெங்களூர் நாட்கள் என அவர் ஹீரோவாக நடித்து வெளியான சில படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில், பாம்பு சட்டை, மெட்ரோ, இறைவி, வல்லவனுக்கு வல்லவன், கோ-2, ...

ஐஸ்வர்யா ராஜேஷ் போடும் திடீர் கண்டிசன்!

Posted:

ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமான அவர்களும் இவர்களும் என்ற படத்தில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில்தான் நடித்தார். அதன்பிறகு அட்டகத்தி, விளையாடவா, ரம்மி படங்களிலும் இரண்டாவது நாயகியாகவே நடித்தவர், விஜயசேது பதியின் பண்ணையாரும் பத்மினியும் படத்தில்தான் சிங்கிள் நாயகியாக நடித்தார். அதையடுத்து திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், ...

அட்டத்தி தினேஷை தேடிச்செல்லும் போலீஸ் கதைகள்!

Posted:

பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் தினேஷ். பின்னர் அவர் நடித்த குக்கூ பேசப்பட்டபோதும், திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ் நடித்த விசாரணை படம் வெற்றி பெற்று அவரது மார்க்கெட்டை சற்று உயர்த்தியிருக்கிறது. வெற்றிமாறனைத் ...

கடலுக்கு அடியில் 20 மணி நேரம் பயணிக்கும் ராணா

Posted:

நடிகர் ராணா எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டி எழுதிய தி ப்ளூ பிஷ் எனும் புத்தகத்தை தழுவி எடுக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிவிபி நிறுவனம் ரூ 70 கோடி செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாஷி(Ghazi) என பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டியே இப்படத்தை இயக்குகின்றார். தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளில் ...

த்ரிஷாவின் ‛நாயகி' பட பாடல்களை வெளியிடும் பாலகிருஷ்ணா

Posted:

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் த்ரிஷா நடிக்கும் திகில் படமான நாயகி படத்தை லவ் யு பங்காரம் எனும் வெற்றிப் படம் இயக்கிய இயக்குநர் கோவி இயக்குகின்றார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் வெளிவரும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. த்ரிஷா இப்படத்திற்காக பாடிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™