Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் கூறும் 12 அறிவுரைகள்!

Posted: 28 Apr 2016 12:29 PM PDT

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் கூறும் 12 அறிவுரைகள் ! பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் ...

சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்

Posted: 28 Apr 2016 12:21 PM PDT

புவனேஷ்வர், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச மணற்சிற்ப போட்டி சென்ற 21-ந்தேதி துவங்கியது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 20-க்கும் மேற்பட்ட பிரபல மணற்சிற்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 15 அடி உயரத்தில் மகாத்மா காந்தியின் உருவத்தை மணற்சிற்பமாக அழகாக வடித்திருக்கிறார் சுதர்சன். இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் ...

பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!

Posted: 28 Apr 2016 12:20 PM PDT

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயில் உக்கிரமாக நாட்டையே வாட்டிவரும் நிலையில், மக்கள் வெளியில் சென்று தினசரி வேலைகள் செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மதிய நேரங்களில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வது மிகச் சிரமமமான வேலையாக மாறிவிட்டது. 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டிவரும் நாக்பூர், இந்தியாவின் வெப்பமான நகரங்களில் ஒன்று. இந்த நிலையில் நாக்பூரில் உள்ள அதிகாரிகள் சிலர், வெயிலில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு உதவும் பொருட்டு ...

திருவண்ணாமலையில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பேராசிரியை வெட்டிக்கொலை

Posted: 28 Apr 2016 12:15 PM PDT

திருவண்ணாமலையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி பேராசிரியையை வெட்டிக்கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கல்லூரி பேராசிரியை திருவண்ணாமலையில் சென்னை சாலை அருகே உள்ள நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 50). இவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் ...

குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்

Posted: 28 Apr 2016 12:10 PM PDT

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். குடிபோதையில் காதல் ஜோடி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நேற்று காலை சுடிதார் அணிந்த நிலையில் இளம்பெண் ஒருவரும், பேண்ட், சட்டை அணிந்தவாறு வாலிபர் ஒருவரும் வந்தனர். காதல் ஜோடியை போல காணப்பட்ட அவர்கள், தள்ளாடியபடி பஸ் நிலையத்திற்குள் நடந்து சென்றனர். மேலும் அந்த வழியாக சென்ற பயணிகளிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதை பார்த்த கடைக்காரர்கள் அந்த ஜோடியை அங்கிருந்து செல்லுமாறு ...

காலில் விஷம் ஏறி விட்டது, காலை அகற்ற வேண்டும்

Posted: 28 Apr 2016 12:08 PM PDT

ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். பரிசோதனை செய்து விட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார். வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் ...

விஜயகாந்த் ஸ்பெஷல் - காணொளி

Posted: 28 Apr 2016 12:07 PM PDT

பிளஸ்-2 தேர்வு முடிவு

Posted: 28 Apr 2016 12:03 PM PDT

சென்னை, பிளஸ்--2 தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 23-ந்தேதி வரை நடந்தது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவு செய் யும் பணி நடந்த வருகிறது. சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள டேட்டா சென் டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. இரவு - பகலாக நடைப் ...

சைனா டீ என்ற கலக்கல் காமெடி.குறும்படம்

Posted: 28 Apr 2016 11:53 AM PDT

சைனா டீ என்ற குறும்படம். ஒரு கலக்கல் காமெடி. சூடான நடிப்பு . வாசனையுள்ள கதாபாத்திரங்கள். கிளாசைக் கலக்கிக் குடிச்சா அப்படியே கிளாசிக். செம கிக். கட்டிங் போட ரெடின்னா குறும்படம் பாருங்க! -

அதென்ன டிஜிட்டல் தோசை..?

Posted: 28 Apr 2016 11:34 AM PDT

- அதென்ன டிஜிட்டல் தோசை..? - தோசையை சாப்பிடும்போது வர்ற மொறு மொறுப்புச் சத்தத்திலே இந்த ஹால் முழுக்க எக்கோ கேட்கும் சார்..! - கே.அருள்சாமி - --------------------------------- - தலேவரோட சுகர் எப்படி கண்ட்ரோலுக்கு வந்தது..? - நிறைய கட்சி ஆபிசுக்கு, கூட்டணிக்காக நடையாய் நடந்தாரே..! ----------------------------- - பறக்கும் படையை ஏமாத்தி வாக்காளர்களுக்கு கொடுக்க அவ்வளவு பணத்தை எப்படி கொண்டு வந்தீங்க? - எங்க பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட போற பணம்னு சொல்லிட்டோம்..!! - ------------------------------ - அந்தக் ...

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

Posted: 28 Apr 2016 11:31 AM PDT

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக்காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும்சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்ப்டி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை ...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள்!!!!

Posted: 28 Apr 2016 11:30 AM PDT

"வெற்றிச் செல்வன்' படத்தின் முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ருத்ரன். அந்த அனுபவங்களைக் கேட்கலாம் எனச்சென்றால்... "எனது படத்தைப் பற்றி எதுவும் பேசத் தேவையில்லை. ஆனால், கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கொடுமைகளை உங்கள் பத்திரிகை மூலமாகப் பேச வேண்டும். அங்கு நடைபெறும் அவலங்களை நேரில் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அங்கு நோயாளிகளுக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுவதைவிட, அவர்களை மென்மேலும் மன நோயாளிகளாக ஆக்குவதற்கான செயற்பாடுகள்தான் ...

வங்கிக்கு பணம் கொண்டு சென்ற தலைர் கைதா... ஏன்?

Posted: 28 Apr 2016 11:28 AM PDT

- என் மனைவிக்கு நான்தான் உலகம்...! - உலகம் தெரியாதவங்களா இருப்பாங்க போலிருக்கே...! - வி.ரேவதி - ---------------------------- - வங்கிக்கு பணம் கொண்டு சென்ற தலைர் கைதா... ஏன்? - வாக்கு வங்கிக்கு கொண்டு சென்றாராம்...! - சரஸ்வதி செந்தில் - ------------------------------- - காலையில் வாக்கிங் போன நம்ம தலைவரை பறக்கும் படை சோதனை போட்டதாமே..ஏன்? - யாரோ பீச்சிலே 'நடமாடும் ஏடி.எம்.மே'னு தலைவருக்கு பேனர் வச்சிருந்தாங்களாம்..! அதான்..! - பா.சிதம்பரநாதன் - ------------------------------- - சார்! ...

லண்டனின் பிக் பென் பல மாதங்கள் ஒலிக்காது

Posted: 28 Apr 2016 11:27 AM PDT

லண்டனின் பிக் பென் என்ற பெரிய கடிகாரம் பல மாதங்களுக்கு ஒலிக்காமல் நிறுத்தப்படுகின்றது. லண்டனின் பிக் பென் என்ற பெரிய கடிகாரம் பல மாதங்களுக்கு ஒலிக்காமல் நிறுத்தப்படுகின்றது. 1856-ம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்தக் கடிகார கோபுரத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை அவசரமாக பழுதுபார்க்க வேண்டியுள்ளது. இந்தக் கடிகாரத்தை நிர்மாணிக்க 13 ஆண்டுகள் பிடித்ததாம். இதனை பழுதுபார்க்க 4 கோடியே 20 லட்சம் டாலர் செலவாகும். பிக் பென் என்ற இந்த பெயர் உண்மையில் 13.5 டன் எடையிலான ஒரு பெரிய மணி ஒன்றுக்கே ...

பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்

Posted: 28 Apr 2016 11:26 AM PDT

புதுடெல்லி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசிய புத்தக அறக்கட்டளை தலைவராக இருந்த பிபின் சந்திரா மற்றும் மிரிதுளா முகர்ஜி ஆகியோர் எழுதிய, 'சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம்' என்ற புத்தகம் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தில் பகத்சிங் ஒரு 'புரட்சிகர தீவிரவாதி' என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பாராளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் அனுராக் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அந்த புத்தகத்தில் ராகுல் ...

யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி

Posted: 28 Apr 2016 11:14 AM PDT

இந்திய காவல் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற பெண் அதிகாரி வந்திதா பாண்டே. பூர்வீகம் உத்தரப்பிரதேசம் அலகாபாத். தமிழக கேடரில் 2010ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். காக்கிகளிடம் ரொம்ப கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்தவர். "அதிரடியில் ஈடுபட்டாலே, தன்னை டிரான்ஸ்பர் செய்துவிடுவார்களோ?" என்பதற்காக தவறுக்கு துணைபோகும் காக்கிகள் மத்தியில், 'இந்தியாவில் எங்கே இடமாற்றம் கொடுத்தாலும் கவலைப்படேன்' என்று நேர்மை ...

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு போர்விமானம் - அமேரிக்கா???அமெரிக்கா

Posted: 28 Apr 2016 11:11 AM PDT

வாஷிங்டன்: அமெரிக்கா விற்கும் எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தாமல், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல எம்.பி.,க்கள் விமானம் விற்பது தொடர்பான முடிவு அதற்கான நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழ்நிலையில் போர் விமானங்களை விற்பது, பாகிஸ்தான் விமானங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ...

அட்ரஸ் - ஒரு பக்க கதை

Posted: 28 Apr 2016 11:07 AM PDT

சிவா குமரன் நகருக்கு புது அறை பார்த்துப் போய் இரண்டு வாரமானாலும், நண்பன் மூர்த்திக்கு இன்றுதான் அவன் அறைக்குச் செல்ல சமயம் வாய்த்தது. - குமரன் நகர் முழுக்க சுற்றி வந்தும் எட்டாவது தெரு மாத்திரம் தென்படவில்லை. மூன்று பேரிடம் கேட்டு பார்த்தாயிற்று. யாருக்கும் தெரியவில்லை. - பழகின இடம்தான், ஆனாலும் இப்போது மூர்த்திக்கு சட்டென குழப்பத் துவங்கியது.கடுப்போடு சிவாவுக்கு போன் செய்தான். - டேய்! எட்டாவது தெரு எங்கேடா இருக்கு? - விநாயகர் கோயிலுக்குப் பின்னாடிடா! - விநாயகர் கோயிலா...? - மீனாட்சி ...

தண்ட சப்பாத்தி...!!

Posted: 28 Apr 2016 10:58 AM PDT

- பொட்டி கடை வைக்க லோன் கேட்டேன், மேனேஜர் தர மாட்டேன்னுட்டார்! - அப்புறம்? - என் மனைவியை விட்டு பொட்டீக் கடை வைக்கிறேன்னதும் ஓ.கே.ன்னுட்டார்..! - வி.சகிதா முருகன் - ---------------------------------------------------- - என் எதிர் வீட்டுக்கு புதுசா வாடகைக்கு வந்திருக்கிறவங்க வட நாட்டுக்காரர்தான்னு என்று எதை வெச்சு சொல்றே? - வேலை இல்லாமல் இருக்கிற அவருடை` மகனை தண்ட சப்பாத்தின்னு திட்டறாரே...! - இரா.வசந்தராசன் - ------------------------------------------------- - தலைவரை சாப்பாட்டு ...

பிடி பிடி – ஒரு பக்க கதை

Posted: 28 Apr 2016 10:56 AM PDT

அந்த வணிக வளாகத்தில் வித விதமான கடைகள், நம்மைத் தாண்டிச் செல்லும் விதவிதமான மனிதர்கள். அவர்கள் கைகளில் பைகள். – திடீரென என்னருகே ஒரு பதற்றம். பைகளை எறிந்து விட்டு தடதடவென என்னைத் தாண்டி ஓடும் ஆணும் பெண்ணும், அவர்களைத் துரத்தி ஓடும் மனிதர்கள்.மொத்தம் மூன்று பேர், கைகளில் அரிவாள், கத்தி என ஆயுதங்கள். – யாரும் சொல்லாமலே அங்கிருந்தோருக்கு சூழ்நிலை புரிந்தது. அவர்களைப் பிடித்து விட ஆயத்தமானேன். என்னைப் போலவே அங்கு பலரும் ஆயத்தமாயினர். – அப்போது அந்தப் பாதகம் நிகழ்ந்தது. ஒரே வெட்டு ஐயோடா, ...

பெல்ட் - ஒரு பக்க கதை

Posted: 28 Apr 2016 10:55 AM PDT

- கல்பனா கொலையில் நீங்க சம்பந்தப்பட்டிருக்கீங்க வசந்தன்! நீங்க வழக்கத்தை விட அதிவேகமா உங்க கார்ல பயணிச்சது பொது சிசிடிவி கேமராவுல பதிவாகியிருக்கு – அதை மட்டும் ஒரு காரணமாக வெச்சுக்கிட்டு என்மேல சந்தேகப்படறது தப்பு சார் – இல்லை வசந்தன், உங்களுக்கும் கல்பனாவுக்குமிடையே விவாதம் முற்றிப் போய் அவளை தாக்கியிருக்கீங்க, அவ மயங்கி விழுந்ததும் மனசாட்சியில்லாமல் அவளோட உறவு வெச்சுட்டு அங்கிருந்து தப்பிச்சு உங்க கார்ல பெல்ட் கூட அணியாமல் அதிவேகமா போயிருக்கீங்க – நான் பெல்ட் அணியலைங்கறதை யார் ...

பலன் - ஒரு பக்க கதை

Posted: 28 Apr 2016 10:52 AM PDT

கல்யாணப்பேச்சை எடுத்தாலே காயத்ரி பிடி கொடுப்பதில்லை. மனசில யாரையாச்சும் `நினைச்சிருக்காளா? எப்ப கேட்டாலும் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு தட்டிக் கழிக்கிறாளே? என்று அம்மா வருத்தப்பட, அப்பா ஜோசியரிடம் ஓடிக் காரணம் கேட்டார் – இன்னும் ரெண்டு வருஷம் போன பின்னாடி பாருங்க, நடந்துடும் என்று அவரும் பலன் சொல்லி அவரை அனுபிவிட்டு மொபைலில் காயத்ரியைத் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொன்னார் – நான் கேட்டுக்கொண்டபடி பலன் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அங்கிள்….எனக்குக் குருபலன் வந்துட்டுதா இல்லையான்னு எனக்குத் ...

கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்

Posted: 28 Apr 2016 10:49 AM PDT

ஆலந்தூர் கிண்டியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அதில் 38 மாணவர்கள் காயம் இல்லாமல் தப்பினார்கள். கல்லூரி சொகுசு பஸ் சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்று நேற்று காலை 38 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்னை மந்தைவெளியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் வினோத் என்பவர் ஓட்டி வந்தார். கிண்டி ஹால்டா சர்தார் பட்டேல் சாலையில் வந்த போது திடீரென சொகுசு பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து ...

புத்தகங்கள் தேவை !

Posted: 28 Apr 2016 10:15 AM PDT

மதன் எழுதிய கிமுகிபி மின் நூல் வடிவில் இருந்தால் பகிரவும்

சிரிச்சா போச்சு...!!

Posted: 28 Apr 2016 10:07 AM PDT

வாட்ஸ் அப் பகிர்வு - சிலது பழசுதான், இருந்தாலும் மீண்டும் சிரிக்கலாம்...!!! - சிரிcha போChe..... No : 1 நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..? சும்மா இருங்க சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!! * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * No: 2 உன் பேரு என்ன..? " சௌமியா " உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க., * ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 28 Apr 2016 10:05 AM PDT


-

-
-

அரிய புத்தங்கள்

Posted: 28 Apr 2016 09:01 AM PDT

இந்த தரவிறக்க சுட்டியில் நிறைய சித்தர்களின் அரிய புத்தங்கள் உள்ளது பயன் படுத்தவும்

என்றும் அன்புடன்

ஜெ.செந்தில்குமார்

முன்னாள் காதலி!

Posted: 28 Apr 2016 08:02 AM PDT

பாலிவுட்டில் இப்போது ஒரே பேச்சு ஹ்ரித்திக்-கங்கனா சண்டை பற்றித்தான். முன்னாள் காதலர்களான இவர்கள் சண்டக்கோழிகளாக மாறி, மாற்றி மாற்றி சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்கள். அதற்கு முன்பே இப்படி அடித்துக் கொண்ட முன்னாள் பிரேக்-அப் ஜோடிகள் இவர்கள்... அபிஷேக் பச்சன்-கரிஷ்மா கபூர்: 1992-ல் அஜய் தேவ்கன்னோடு இருந்த ரிலேசன்ஷிப் முடிவுக்கு வந்த 1995-ல் அபிஷேக் பச்சனோடு காதல் தொடங்கியது கரிஷ்மாவுக்கு. இந்தக் காதல் கனிந்து இருவீட்டார் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் வரைக்கும் போய் அந்த உறவு முறிந்து போனதால், ...

கிரிடிகல் திங்கிங் புக்ஸ் ஏதும் கிடைக்குமா

Posted: 28 Apr 2016 08:00 AM PDT

கிரிடிகல் திங்கிங் புக்ஸ் ஏதும் கிடைக்குமா? தயவு செய்து பகிரவும். அழுகை

ரமணியின் கவிதைகள்

Posted: 28 Apr 2016 07:02 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

அனுபவத் துளிகள்

Posted: 28 Apr 2016 06:52 AM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

ரமணி ஹைக்கூ

Posted: 28 Apr 2016 06:47 AM PDT

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

Posted: 28 Apr 2016 06:40 AM PDT

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****

பாமரர் தேவாரம்

Posted: 28 Apr 2016 06:32 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 28 Apr 2016 04:05 AM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™