Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்!

Posted: 24 Mar 2016 06:53 PM PDT

sw

swபூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.h

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவது தடுக்கப்படும்.

வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனை வெளியேற்ற, தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலை வலி ஏற்படுவது போன்றவை இருந்தால், உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.sw

The post பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Ajaxஇல் கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 24 Mar 2016 06:43 PM PDT

gf

gfAjax பகுதியில் இன்று பிற்பகல் அளவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Rossland மற்றும் Salem வீதிப்பகுதியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த ஆண் நபர் உடனயடிக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் காயமடைந்த நபரின் விபரங்களோ, அல்லது அவருக்க ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை குறித்தோ தகவல்கள் எவையும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் குறித்த விபரங்களும் டூர்ஹாம் காவத்துறையினரால் வெளியிடப்படவில்லை.

The post Ajaxஇல் கத்திக்குத்து சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீரற்ற வானிலை: வோன் பகுதியில் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது

Posted: 24 Mar 2016 10:33 AM PDT

freezing_rain_-_03242016

freezing_rain_-_03242016வோன் பகுதியில் ஆயிரக்கணக்கானோருக்கான மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் நீடித்த சீரற்ற வானிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலையில் பொழிந்த உறை பனி மழை காரணமாக ரொரன்ரோவின வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 35,000 ற்கும் அதிகமான ஹைற்ரோ வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் தடைப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

Klienburg, Maple மற்றும் Woodbridge பகுதிகளில் சுமார் 26,000 வாடிக்கையாளர்கள் மின் தடையை எதிர்கொண்டுள்ளதை மின்சார வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களுக்கான மின் வினியோகத்தினை சீர் செய்வதற்கு துரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.freezing_rain_-_03242016

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளிலும், மரங்கள், மின்வினியோ வடங்களின் மீதும் தடிப்பான படையாக பனி படர்ந்திருக்க கூடும் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களமும் எச்சரித்துள்ளது.

இந்த சீரற்ற வானிலை காரணமாக ரொரன்ரோ மற்றும் அதனைச் சூழவுள்ள பிராந்தியங்களுக்கான சில பாடசாலை பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இரவு முழுவதும் கொட்டிய உறை மழை காரணமாக ஐந்திலிருந்து பத்து மில்லிமீட்டர் வரையிலான உறை மழை பதிவாகியுள்ள நிலையில், Caledon, York மற்றும் Durham பகுதிகளில் பத்திலிருந்து இருபது மில்லிமீட்டர் உறைமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரொரன்ரோ, ஹமில்ரன் ஹில்ஸ்-மில்ரன், மிசிசாகா, பிரம்ரன், ஓக்வில், யோர்க் - டூர்ஹாம், Dufferin County மற்றும் பேர்லிங்ரன் பகுதிகளில் உறை மழை எச்சரிக்கை தொடர்ந்தும் நடப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சீரற்ற வானிலை: வோன் பகுதியில் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™