Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வசந்தகால ஆரம்பம்: குளிர்காலத் தாக்கத்தை எதிர்கொள்ளும் அத்திலாந்திக் கனடா

Posted: 19 Mar 2016 02:55 PM PDT

நாளை ஞாயிற்றுக்கிழமை வசந்தகாலம் ஆரம்பிக்கும் என உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அத்திலாந்திக் கனடா மக்கள் குளிர்காலத் தாக்கத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோவா ஸ்கொற்றியா, நியூ பிரன்சுவிக், பி.ஈ.ஐ ( P.E.I), நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் அகிய பகுதிகளுக்கான சிறப்பு வானிலை அறிக்யை கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பு விடுத்துள்ளது தேசிய வானிலை அறிவிப்பாளர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கம் ஏற்படும் என்றும், அது வடக்கு நோக்கி வேகமாக […]

The post வசந்தகால ஆரம்பம்: குளிர்காலத் தாக்கத்தை எதிர்கொள்ளும் அத்திலாந்திக் கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மன அழுத்தமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Posted: 19 Mar 2016 10:47 AM PDT

op

opஇந்த நவீன உலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து நாமும் உழைக்க வேண்டியுள்ளது.

இதனால் உடல் அளவில் பல பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிக்கு ஆளாகிறோம், இதற்கு நாம் அதனை சரிசெய்வதற்கேற்ப உணவுகளை எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சனையும் இருக்காது.

பச்சைக் காய்கறிகள்

பச்சை நிறக் காய்கறிகளும்.. கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகேடா, வெண்டை ஆகியவற்றில் அதிகமாக ஃபோலிக் ஆசிட் (விட்டமின் பி9) இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது.

நீங்கள் முன்கோபம் கொண்டவர் என்றால் உங்களது டென்ஷனை குறைக்க இவை உதவும்.p

சொக்லேட்ஸ்

சொக்லேட்களில் ''ட்ரைப்டோஃபன்'' அதிகம் உள்ளது. இது உங்களுக்கு நல்ல உற்சாகத்தை தரும். நாம் நலமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை உணர உதவுவது சொரட்டோடின் என்ற ஒரு வகை ஹார்மோன் தான்.

அதனை அதிகப்படுத்த உதவுவது இந்த 'ட்ரைப்டோஃபன்'' ! இவை வாழைப்பழம், முட்டை இவற்றிலும் அதிகம் உள்ளது. மேலும் இவைகளை உண்ணும்போது உங்களுக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.jk

தயிர்

சிலர் செரிமானப் பிரச்னைகளாலே மிகவும் சோர்வாக இருப்பார்கள். தயிரில் ''ப்ரோபயோட்டிக்'' என்று சொல்லப்படும் நல்ல பாக்டீரியா உள்ளது. இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

மேலும் சின்ன விடயத்திற்குக்கூட அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களுக்கு தினமும் உணவில் தயிரை சேர்த்துவர இந்த பிரச்சனை குறையும்.o

ஒமேகா - 3

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஒமேகா - 3 உதவுகிறது. காரணம் தெரியாமல் ஏற்படும் எரிச்சல், கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.

எனவே ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.op

The post மன அழுத்தமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

திடீரென உடல் எடை குறைகிறதா? என்ன காரணமாக இருக்கலாம்!

Posted: 19 Mar 2016 10:42 AM PDT

io

ioசிலருக்கு தாங்கள் உடல் எடை குறைகிறோம் என்பதைக்கூட அறியாமல் இருப்பார்கள்.

உடல் எடை குறைவு எல்ல தாண்டியபின்னதா தான் என்ன பிரச்சனையோ என்ற அச்சத்தில் மருத்துவரை அணுகுவார்கள்.

சத்துக்குறைவு, ஏதேனும் நோய் தாக்கம் காரணத்தினாலேயே திடீரென உடல் எடை குறைகிறது என்பதை நினைவில் கொள்க.

உணவால் திடீரென உடல் எடை குறையாது.

திடீர் உடல் எடை குறைவிற்கான காரணம் என்ன?

1. பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்கள்.io

2. விழுங்குவதில் ஏற்படும் சிரமங்கள், நாக்கு பாதிப்படைவது, தொண்டைக் கோளாறு, அழற்சி மற்றும் கட்டிகள்.

3. உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல் அடைப்புகள்.

4. வயிற்றில் புற்றுக் கட்டிகள் இருந்தாலும் உடல் இளைத்துவிடும்.

5. அல்சர் குடல் அழற்சி, பூச்சிகள், குடல் காச நோய்.

6. கணையம், கல்லீரல், சார்ந்த கட்டிகள் கணைய அழற்சி, கல்லீரல் சுருங்கி விடுவது.

7. இதய உள்தசை அழற்சி, இதயச் செயல்பாட்டில் குறைபாடு.

8. பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.

9. நீரிழிவு, தைராய்டு நச்சுத் தன்மை போன்ற நாளமில்லா சுரப்பி சார்ந்த வியாதிகள்.

10. ஊன்ம ஆக்கச் சிதைவு சார்ந்த பல்வேறு கட்டிகள் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு.

11. விட்டமின் குறிப்பாக வைட்டமின் பி குறைபாடு.

12. அடிபடுவது அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் நைட்ரஜன் சீர் குறைவு.

13. காச நோய், நாள்பட்ட மலேரியா போன்ற தொற்று நோய்கள்.

14. ரத்தம் சார்ந்த வியாதிகளான லூக்கிமியா, ஏபிளாஸ்டிக் சோகை.

15. குடிப்பழக்கம், மருந்துகளுக்கு அடிமை, அதிகமாக புகைப்பிடிப்பது.

The post திடீரென உடல் எடை குறைகிறதா? என்ன காரணமாக இருக்கலாம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

விபத்துக்குள்ளான விமானத்தில் கனேடியர்கள் இல்லை

Posted: 19 Mar 2016 10:39 AM PDT

iuo

iuoரஷ்யாவின் தென்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான டுபாய் விமானத்தில் பயணித்த மற்றும் பணியாற்றியவர்களுள் கனேடியர்கள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை CEO எனப்படும் அந்த விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

டுபாயிலிருந்து 55 பயணிகளையும் 7 ஊழியர்களையும் ஏற்றிச்சென்ற "பிளைடுபாய் 981" (FlyDubai 981) என்ற பயணிகள் விமானம் ரஷ்யவிற்கு பயணித்திருந்தது.

எனினும் இன்று சனிக்கிழமை காலை அந்த விமானம் ரஷ்யாவின் தென்பிராந்தியத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, விமானம் விபத்துக்குள்ளாகியதுடன், அதில் பயணித்த 62 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது விபத்து சம்பவித்ததாகவும், கண்காணிப்புப் கருவியில் விமானம் வெடித்து எரிவது பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.iuo

விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்ற போதிலும், பார்வைப்புலம் தெளிவற்றிருந்தமை மற்றும் வேகமான காற்று என்பன காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

The post விபத்துக்குள்ளான விமானத்தில் கனேடியர்கள் இல்லை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞன் படுகாயம்

Posted: 19 Mar 2016 10:32 AM PDT

ui

uiகத்திக்குத்தில் படுகாயமடைந்த 20 வயதுகளை மதிக்கத் தக்க இளைஞன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்துச் சம்பவம் பிரம்ரன் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

McLaughlin வீதி மற்றும் Steeles அவனியூவிற்கு அருகில் Moffatt அவனியூவில் இன்று அதிகாலை 3.30 மணியளவிலேயே குறித்த இளைஞன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும், அவர் மீது பல முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.ui

இதேவேளை குறித்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரைத் தடுத்து வைத்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பின் காவல்த்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞன் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

முறையாக வாகனம் செலுத்தாத குற்றச்சாட்டில் இருவர் கைது

Posted: 19 Mar 2016 10:29 AM PDT

jk

jkஇன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்கள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையாக வாகனத்தைச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக் காரணமாகவே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் நபர் Bloor வீதிக்கு அருகில் Dovercourt வீதியில் அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்.

அவர் தமது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையால் வாகனம் கடைஒன்றினுள் நுளைந்ததாகவும், அங்கிருந்த எரிவாயு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அருகில் உள்ள கட்டங்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையிலேயே, விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியைக் கைது செய்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவப் பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்த போதிலும், யாரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே இரண்டாவது விபத்து டுப்ரின் வீதி மற்றும் மேற்கு குயில் வீதி பகுதியில் அதிகாலை 3.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ரக் ரக வாகனம் ஒன்று வாடகைக்கார் ஒன்றை மோதி விட்டு மேலும் ஒரு வாகனத்தையும் மோதியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்தியதாக குற்றச்சாட்டில் விபத்தை ஏற்படுத்திய நபர் காவல்த்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

The post முறையாக வாகனம் செலுத்தாத குற்றச்சாட்டில் இருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™