Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முதல் தடவையாக 36 மில்லியனை எட்டியுள்ள கனடாவின் சனத்தொகை!

Posted: 17 Mar 2016 06:54 PM PDT

h

hகனடாவின் சனத்தொகை முதல் தடவையாக 36 மில்லியனை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்கம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி நிலவரப்படி கனடாவின் சனத்தொகை 36 மில்லியன் 48ஆயிரத்து 500 (36,048,500) என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி காணப்பட்ட சனத்தொகையைக் காட்டிலும், இந்த எண்ணிக்கை 62,800இனால் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2015ஆம் ஆண்டின் சனத்தொகை வளர்ச்சியானது 0.95 சதவீதத்தினால் மெதுவடைந்துள்ளதனையும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.h

2015ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இறப்பு எண்ணிக்கை 67,900 ஆகவும் அதற்கு எதிரான பிறப்பு எண்ணிக்கை 95,300 ஆகவும் அதிகரித்தமையே இந்த சனத்தொகை வளர்ச்சிக்கு காரணம் என ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் காட்டுவதாகவும் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post முதல் தடவையாக 36 மில்லியனை எட்டியுள்ள கனடாவின் சனத்தொகை! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்ரனில் விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted: 17 Mar 2016 02:10 PM PDT

hju

hjuபிரம்ரனில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்த நபர் ஒருவர் அவசர உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

நெடுஞ்சாலை 410 பகுதியில் நெடுஞ்சாலை 407 இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் பிற்பகல் 3.05 மணியளவில் இந்த விபத்து இடத்பெற்றுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவரை அவசர மீட்புப் படையினர் வெளியில் மீட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவசர உலங்கு வான்னூர்தி மூலமாக சென்.மைக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.hju

விபத்து இடம்பெற்ற குறிப்பிட்ட பகுதி போக்குவரத்திற்கு சில மணித்தியாளங்கள் மூடப்பட்டதாகவும், பின்னர் மாலை 6.30 மணியளவில் மீண்டும் திறந்து விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரம்ரனில் விபத்தில் ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதிகளுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது

Posted: 17 Mar 2016 01:07 PM PDT

p

pலிபரல் அரசாங்கம் அண்மையில் 25,000 சிரிய அகதிகளை கனடாவினுள் வரவழைத்திருந்த நிலையில், அவர்களுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயத்தில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

கியூபெக்கிற்கு வெளியே உள்ள சிரிய அகதிகளில் 69 சதவீதமானவர்களுக்கு நிரந்தர தங்குமிடங்கள் கிடைத்து விட்டதாகவும், கடந்த வார நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது 52 சதவீத அதிகரிப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போது எதிர்நோக்கப்படும் சவால் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகப் பெருமளவான அகதிகள் இவ்வாறு நாட்டுக்குள் வந்து சேர்ந்துள்ள நிலையில், அவர்கள் எதிர்நோக்கக் கூடிய அனைத்துவித சவால்களுக்கும் ஒரு இரவில் தீ்ர்வினைக் கண்டுவிட முடியாது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் போது பல்வேறு விதமான மேடு பள்ளங்கள் காணப்படும் என்ற போதிலும், அகதி மக்களுக்கான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கை குறிப்பிடத்தக்க வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் திருப்தி வெளியிட்டுள்ளார்.

கியூபெக்கில் அந்த மாநில அரசு தனது சொந்த திட்டத்தினை முன்னெடுத்து வருவதனால், நாட்டின் ஏனைய பாகங்களில் நடைமுறப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களுடன் அதனை ஒப்பீடு செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அகதிகளுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தனி நபர் தாக்குதல் முனைப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Posted: 17 Mar 2016 08:08 AM PDT

j

jதனி நபர் தாக்குதல் முனைப்புக்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில், உலக நாடுகள் மத்தியில் கனடா முன்னணி நாடாக திகழ வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்வ்ஃப் கோடேல்(Ralph Goodale) வலியுறுத்தியுள்ளார்.

தனித் தனி நபர்கள் ஆங்கேங்கே தீவிரவாதத்தினால் உந்தப்பட்டு, சுயமாகவே தாக்குதல்ளில் ஈடுபடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்து மிகவும் கடினமான நடவடிக்கைகள் என்ற போதிலும், இத்தகைய தீவிரவாதத்தினை நிறுத்துவதில் கனடா முதன்மையான நாடாக திகழ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரொரன்ரோவின் வடக்குப் பிராந்தியத்தில் இராணுவ வீரர்கள் இருவர் மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் தனித்தே அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகள் காட்டுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய பயங்காரவாத தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பான நிலையில் எப்போதும் இருக்க வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டால் அதனை உடனடியாக காவல்த்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறன தீவிரவாதப் போக்குகள் சமூகங்கள் மத்தியில் உருவாவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராணுவ ஆட்சேர்ப்பு மையத்திற்குள் கத்தியுடன் நுளைந்த சிறுவன் ஒருவன் அல்லாவின் பெயரை கூறியவாறு அங்கிருந்த சீருடையணிந்த இராணுவத்தினர் இருவரைக் கத்தியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது.

குறித்த அந்த நபரை கைது செய்துள்ளதுடன், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொன்றியலில் பிறந்த 27 வயதான அயானேல் ஹாசன் எனப்படும் அந்த இளைஞன் கடந்த ஐந்து வருடங்களாக ரொரன்ரோவில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனி நபர் தாக்குதல் முனைப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும் – பொது பாதுகாப்பு அமைச்சர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உணவிற்கு முன், பின் பழங்கள் சாப்பிடலாமா?

Posted: 17 Mar 2016 03:56 AM PDT

ij

ijபொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும்தான்
பழங்களில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.

நார்ச்சத்து, நீர்ச்சத்து, விட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை.

இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி போன்ற வியாதிகளை தடுக்கலாம்.
மேலும், பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஆனால், நம்மில் பாதிபேருக்கு பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்பது குறித்து தெரியாது.

உணவுக்கு முன், உணவுக்கு பின் சாப்பிடுவதா, அல்லது எந்த மாதிரியான பழங்களை சாப்பிடுவது என குழப்பிக்கொள்வார்கள்.io

உணவுக்கு முன், பின் எந்த பழங்கள் சாப்பிடலாம்?

பொதுவாகவே, எல்லாப் பழங்களிலும் விட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்கு மிக அவசியமான, நுண்ணுாட்டச் சத்துகள் அதிகம் உள்ளன.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும், தாராளமாகச் சாப்பிடலாம்.

உணவுக்கு முன், உணவிற்கு பின் சாப்பிடும் பழங்கள் என்றெல்லாம் வகைப்படுத்தத் தேவையில்லை.

அதுபோல சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்வதும் தவறு. இயற்கையாக பழங்களில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்க வேண்டும் என்றால், சமைத்த உணவை சாப்பிடுவதற்கு குறைந்தது அரை மணி நேரம் முன் அல்லது சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின், பழங்கள் சாப்பிடலாம்.

பழங்கள் செரிமானம் ஆவது எளிது. ஆனால் சமைத்த உணவுசெரிமானம் ஆவது கடினம். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது, பழங்களில் உள்ள சத்துகள், உடலுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம்.

உணவு செரிமானம் ஆவதற்கு மீத்தேன் உட்பட, ஐந்து பிரதான வாயுக்கள் வயிற்றில் சுரக்கும். பழங்களையும் சமைத்த உணவையும் சேர்த்து சாப்பிடும் போது, வாயுக்கள் சுரப்பது வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கும்.ij

The post உணவிற்கு முன், பின் பழங்கள் சாப்பிடலாமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™