Tamil News | Online Tamil News |
- லாபத்தை பார்க்கும் அதிகாரிகள்: சகாயம் வேதனை
- பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது: சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்
- ஆதரவாளர்கள் கணக்கெடுப்பு:ஆட்டம் காணும் 'ஐவரணி'
- மோடிக்கு கருணாநிதி பாராட்டு: காங்., கோஷ்டிகளுக்கு 'ஷாக்'
- அரசியலில் நுழையும் ரவுடிகள்: போலீசிற்கு சாதகமா... பாதகமா...
- உரிமை மீறல் பிரச்னை:காங்., - பா.ஜ., போட்டா போட்டி
- கார்த்தி சிதம்பரம் விவகாரத்தால் பார்லிமென்ட்டில் அமளி: திடுக்கிடும் தகவல் வெளியானதால் அ.தி.மு.க., ஆவேசம்
- முதன்முறையாக விவசாயத்திற்காக பட்ஜெட்: தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பாராட்டு
- ரேஷன் முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினருக்கு 'நோ சீட்'
- எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஹரியானா முதல்வர் கதறல்
| லாபத்தை பார்க்கும் அதிகாரிகள்: சகாயம் வேதனை Posted: 01 Mar 2016 09:30 AM PST சென்னை:''எதிலும் தங்களுக்கு என்ன லாபம் என, நினைக்கும் அதிகாரிகளே பெரும்பாலும் இருக்கின்றனர் என்பது மிகவும் வேதனையான விஷயம்,'' என, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறினார். தேவாமிர்தம் பாரம்பரிய உணவு கலாசார மையம், எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரி, பின் தங்கியவர்களுக்கான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுக்கான இந்திய அமைப்பு போன்றவை இணைந்து, 'தமிழக பாரம்பரிய மும், இயற்கை உணவும்' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கத்தை, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடத்தின. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், சாவித்திரி கண்ணன் எழுதிய, 'உணவில் ... |
| பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது: சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம் Posted: 01 Mar 2016 09:53 AM PST புதுடில்லி: இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கானவட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.பார்லிமென்டில் நேற்று முன்தினம், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் ... |
| ஆதரவாளர்கள் கணக்கெடுப்பு:ஆட்டம் காணும் 'ஐவரணி' Posted: 01 Mar 2016 09:59 AM PST அ.தி.மு.க., ஐவரணிக்கு, 'செக்' வைக்கும் வகையில், அவர்களின் ஆதரவாளர்கள் யாரெல்லாம், 'சீட்' கேட்டுள்ளனர் என, விசாரணை நடத்த, கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அ.தி.மு.க.,வில், 'பவர்புல்' மையமாக உள்ள ஐவரணியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை, அக்கட்சி தலைமை எடுத்து வருகிறது.சட்டசபை தேர்தலில், தங்கள் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக்கும் முயற்சியில், ஐவரணியினர், ஐந்து மண்டலங்களாக பிரித்து, வேட்பாளர் பட்டியல் தயாரித்துள்ளனர்.இந்த பட்டியலில், கட்சி விசுவாசிகளை தேர்வு செய்வதற்கு பதிலாக, தங்கள் விசுவாசிகளை தேர்வு செய்துள்ளனர் என்ற ... |
| மோடிக்கு கருணாநிதி பாராட்டு: காங்., கோஷ்டிகளுக்கு 'ஷாக்' Posted: 01 Mar 2016 10:00 AM PST தி.மு.க., தலைவர் கருணாநிதி மத்திய அரசின் பட்ஜெட்டை பாராட்டி உள்ளார். 'பிரதமர் மோடி பாஸ் செய்திருக்கிறார்' என, அவர் கூறியுள்ளார். இது, தமிழக காங்கிரசாருக்கு, கருணாநிதி மீதுஅதிருப்தியை உருவாக்கி உள்ளதோடு, அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 'தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி ஏற்படப் போகிறது' என, சுப்பிரமணியன் சாமி கூறியதும், உடனடியாக தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்தது காங்கிரஸ். ஆனால், இரண்டு கட்சிகளும், தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதால், தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. இரு கட்சிகளிலும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ... |
| அரசியலில் நுழையும் ரவுடிகள்: போலீசிற்கு சாதகமா... பாதகமா... Posted: 01 Mar 2016 10:11 AM PST மதுரை:தேர்தல் நெருங்கும் நிலையில் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், 'திருந்தி வாழவும்' அரசியல் கட்சிகளில் சேர ரவுடிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல்வாதிகளுக்காக 'தொழில்' செய்த காலம் மாறி, தற்போது ரவுடிகளே அரசியல்வாதிகளாக மாறி வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சிகள், முக்கிய பொறுப்புகளை வழங்கி, சமூக அந்தஸ்து தந்து ஊக்குவிக்கின்றன. சிலர் கட்சியும் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, போலீஸ் பராமரிக்கும் ரவுடிகள் பட்டியலில் இருக்கும் 'அட்டாக்' பாண்டி, தி.மு.க.,வில் சேர்ந்து, கடந்த ஆட்சியில் வேளாண் விற்பனை குழு தலைவராக இருந்தார். ... |
| உரிமை மீறல் பிரச்னை:காங்., - பா.ஜ., போட்டா போட்டி Posted: 01 Mar 2016 10:15 AM PST புதுடில்லி;மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் உரிமை மீறல் பிரச்னை எழுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை கொறடா ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு எதிராக, லோக்சபாவில் பா.ஜ., உரிமை மீறல் பிரச்னையை எழுப்பியுள்ளது. ஐதராபாத் பல்கலைக்கழகத்தில், தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, லோக்சபாவுக்கு தவறான தகவல்களை தந்ததாகக் கூறி, அவருக்கு எதிராக காங்கிரஸ், நேற்று முன்தினம், உரிமை மீறல் பிரச்னையை எழுப்பியது. இதற்கு பதிலடியாக, பா.ஜ., ... |
| Posted: 01 Mar 2016 10:25 AM PST புதுடில்லி: சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்கள் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு சபைகளிலும் அலுவல்கள் முடங்கின.'ஏர்செல் - மேக்சிஸ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கை அமலாக்க பிரிவும், வருமான வரித்துறையும் விசாரிக்கின்றன. இந்த விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது ... |
| முதன்முறையாக விவசாயத்திற்காக பட்ஜெட்: தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பாராட்டு Posted: 01 Mar 2016 10:27 AM PST புதுடில்லி:'நிதியமைச்சர், நேற்று முன்தினம் தாக்கல் செய்த பட்ஜெட், நாட்டிலேயே முதன்முறையாக விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பட்ஜெட்' என, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் புகழாரம் சூட்டியு உள்ளனர். பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்களும், கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.,க்களும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியாவின் ... |
| ரேஷன் முறைகேட்டில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினருக்கு 'நோ சீட்' Posted: 01 Mar 2016 10:32 AM PST தமிழகத்தில், 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளை நடத்துகின்றன.கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், ரேஷன் ஊழியர் இடமாறுதல், உணவு பொருட்கள் கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் தலையிடுகின்றனர். கூட்டுறவு நிதியில் இருந்து, சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு,சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதில்லை என, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அ.தி.மு.க., வட்டாரங்கள் ... |
| எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஹரியானா முதல்வர் கதறல் Posted: 01 Mar 2016 12:25 PM PST புதுடில்லி:இடஒதுக்கீடு கோரி, ஜாட் இன மக்கள் நடத்திவரும் போராட்டம், கட்டுப்படுத்த முடியாத நிலையில், டில்லியில் நேற்று நடந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், சோகத்தை அடக்க முடியாமல் தேம்பி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் ஹரியானாவில், ஜாட் இனத்தவர், கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தினர். அப்போது, ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த, பஞ்சாபி மக்களை குறிவைத்து, ஜாட் இனத்தவர், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், டில்லியில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 02,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |