Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இன்று தேசிய தினம்: பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 22 Mar 2016 10:44 PM PDT

பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில் பாகிஸ்தானுடன் சுமூகமான நட்புறவை பேணுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

திருப்பதி கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது

Posted: 22 Mar 2016 10:34 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் உள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கு குறிப்பிட்ட நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தற்போது கோடை விடுமுறை வர இருப்பதால் திருப்பதிக்கு வரும்

அதிகாரத்துக்காக தன்மானத்தை விற்பதா?: மெகபூபா முப்திக்கு காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ., சுருக். கேள்வி

Posted: 22 Mar 2016 10:02 PM PDT

காஷ்மீர் மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில சட்டசபை சுயேட்சை எம்.எல்.ஏ., அதிகாரத்துக்காக காஷ்மீர் மக்களின் தன்மானத்தை தியாகம் செய்ய துடிக்கும் மெகபூபா முப்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க சங்கு காணிக்கை

Posted: 22 Mar 2016 09:11 PM PDT

உலகின் 'பெரும் பணக்கார சாமி' என்று வர்ணிக்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, தினந்தோறும் பக்தர்கள் பணமாகவும், பொருளாகவும் காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பொருட்களை பெறுவதற்காகவே, திருமலையில் ஒ

உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்

Posted: 22 Mar 2016 08:57 PM PDT

பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, லண்டனில் உள்ள தன்னார்வ

உயர்கல்வியை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல அடிப்படை கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம்: ஸ்மிரிதி இரானி

Posted: 22 Mar 2016 07:27 PM PDT

இந்திய கல்வி வளர்ச்சி சங்கம், கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் காமட்கே மற்றும் கே.யூ.பி.இ.சி.ஏ. அமைப்புகளுடன் சேர்ந்து 'இந்தியாவில் உலக தரத்திலான உயர்கல்வி மையம்' என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை நேற்று நடத்தியது.

மல்லையாவை பிடியுங்கள், பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன்: டிக்கெட் இன்றி பயணம் செய்த கோடீஸ்வர பெண் பிடிவாதம்

Posted: 22 Mar 2016 05:23 PM PDT

மும்பையில் உள்ள மகாலட்சுமி ரெயில்நிலையத்தில் நேற்று முன்தினம் பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தீவிரமாக தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் பிரேமலதா (வயது 44) என்ற பெண் வந்தார்.

தீவிரவாதிகள் தாக்குதலை மீறி மோடி பெல்ஜியத்துக்கு பயணம்

Posted: 22 Mar 2016 04:52 PM PDT

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் பலியானார்கள்.

கர்நாடகத்தில் தீமிதி திருவிழாவுக்கு தடை விதிக்கப்படும்: சித்தராமையா அறிவிப்பு

Posted: 22 Mar 2016 03:05 PM PDT

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்கவுடா எழுந்து, துமகூருவில் தீமிதி திருவிழாவில் ஒரே நேரத்தில் ஓடியபோது 100 பேர் தீயில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, "மூடநம்பிக்கைகளை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம்

பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை: பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் தமிழகம் வருகிறார்

Posted: 22 Mar 2016 01:58 PM PDT

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- தமிழக தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராகி வருகிறது. 3

டெல்லி-சென்னை விமானங்கள் உள்பட 5 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 22 Mar 2016 01:30 PM PDT

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். அதில், ஜெட் ஏர்வேஸ் விமான சிப்பந்திகளும் காயம் அடைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில், டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அழைப்பு மையத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் அழைப்பு

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்: கெஜ்ரிவாலுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்

Posted: 22 Mar 2016 12:51 PM PDT

தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீரஜ் சக்சேனா என்பவர் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ''2013-ம் ஆண்டு டெல்லி மாநில சட்டசபை தேர்தலில்

எலக்ட்ரானிக் உற்பத்தியில் ரூ.1.28 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து இந்தியா சாதனை

Posted: 22 Mar 2016 11:02 AM PDT

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு பல்வேறு யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை எலக்ட்ரானிக் உற்பத்தி துறையின் தாயகமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எலக்ட்ரானிக் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தும் நுகர்வோர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

விலை ரூ.39 ஆயிரம்: ஏப்ரல் 8 முதல் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்.இ.

Posted: 22 Mar 2016 10:50 AM PDT

நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. ஆனது இந்திய மற்றும் சீனா ஸ்மார்ட் போன்

பாகிஸ்தானுடன் நட்புறவை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Posted: 22 Mar 2016 10:28 AM PDT

பாகிஸ்தானுடன் சுமூகமான நட்புறவை பேணுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தேசிய தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி இன்று அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன் ஹுசனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: போலீசாருடன் மோதல்

Posted: 22 Mar 2016 08:37 AM PDT

ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில், ஐதராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் அப்பா ராவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஐதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று

பெல்ஜியம் தாக்குதலைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 22 Mar 2016 08:15 AM PDT

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களும் காயம் அடைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில், டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அழைப்பு மையத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, டெல்லி இந்திரா காந்தி

தேசிய கீத விவகாரம்: அமிதாப் பச்சன் மீது புகார் கொடுத்தவரை அறைய வேண்டும்- பாலிவுட் நடிகர் ஆவேசம்

Posted: 22 Mar 2016 08:06 AM PDT

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை 20 ஓவர் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். போட்டியின் போது அமிதாப் பச்சன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அவர் மீது டெல்லி அசோக் நகர் காவல்நிலையத்தில்

நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிவு: மத்திய அரசு

Posted: 22 Mar 2016 07:35 AM PDT

நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிவு: மத்திய அரசு

தந்தை இறந்த செய்தி அறிந்தும் மனம் தளராமல் பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவன்

Posted: 22 Mar 2016 07:18 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், ரத்த புற்றுநோய் காரணமாக தந்தை இறந்துபோன நிலையிலும், மனம் தளராமல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார். உஸ்மானாபாத் மாவட்டம் காத்ரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சூரஜ் காதம், கடந்த 1-ம் தேதி தேர்வு எழுதுவதற்காக சென்றிருந்தார். தேர்வுக்கு சில நிமிடங்களுக்கு முன், அவரது தந்தை ஜம்புவந்த் காதம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™