மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரூ.70 லட்சம் செலவில் மனைவிக்கு கோவில் கட்டிய போலீஸ் டி.எஸ்.பி.
- மம்தா பானர்ஜியை எதிர்த்து தீபா தாஸ்முன்ஷி போட்டி
- திருப்பதி கோவிலில் 5 நாள் தெப்ப உற்சவம் இன்று தொடங்குகிறது
- தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதியில் 900 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
- நடிகை ரோஜாவை அனுமதிக்காததால் ஆந்திர சட்டசபையில் அமளி: கருப்பு உடை அணிந்து கண்டனம்
- இசையாக கரைந்த இறுதிமூச்சு: பிரபல புல்லாங்குழல் கலைஞர் கச்சேரியின்போது மாரடைப்பால் மரணம்
- தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 50 சதவீதம் குறைய வாய்ப்பு
- ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: மோடி-மெக்பூபா சந்திப்பு தீடீர் ரத்து
- வருத்தமில்லை, தேசவிரோத குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றது பெருமையே: உமர் காலி
- உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல்: ஆட்சியை களைக்க பா.ஜ.க., எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை
- நடிகர் கலாபவன் மணி வயிற்றில் கொடிய விஷம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடத் தயார் - கேரள அரசு அறிவிப்பு
- விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- புதிய மருந்துகளை மீண்டும் விலங்குகள் மீது சோதனை செய்ய மத்திய அரசு தடை
- தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தனித்து போட்டி: பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
- நேரு விளையாட்டு அரங்கில் அரசு நிகழ்ச்சிகள்: புதிய அரசாணை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- காஷ்மீர் மக்களும் இந்தியர்களே, அவர்களின் பிரச்சனைகளை எப்போதும் பேசலாம்: கன்னையா குமார்
- சென்னை மவுலிவாக்க கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு நியமனம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- திருமணம், கட்சி விழாக்கள் முடிந்த பின்னர் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்பாட்டாளர்கள் அகற்றாவிட்டால் அபராதம்: மத்திய அரசு அறிவிப்பு
- மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முன்னாள் ராணுவ வீரரை களம் இறக்கும் பா.ஜனதா
- கேரளாவில் ஆளில்லா குட்டி விமானம் கடலில் விழுந்து விபத்து
| ரூ.70 லட்சம் செலவில் மனைவிக்கு கோவில் கட்டிய போலீஸ் டி.எஸ்.பி. Posted: 18 Mar 2016 11:16 PM PDT ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையைச் சேர்ந்தவர் முனி ராமையா. இவர் திருமலையில் போலீஸ் டி.எஸ்.பி.யாக உள்ளார். இவரது மனைவி ஸ்ரீவானி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். மனைவி மீது பாசம் கொண்ட முனி ராமையா அவரது நினைவாக கோவில் |
| மம்தா பானர்ஜியை எதிர்த்து தீபா தாஸ்முன்ஷி போட்டி Posted: 18 Mar 2016 11:13 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 4 & 11, 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜக., இடது சாரிகள்–காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| திருப்பதி கோவிலில் 5 நாள் தெப்ப உற்சவம் இன்று தொடங்குகிறது Posted: 18 Mar 2016 11:02 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப உற்சவம் மிக விமர்சியாக நடப்பது உண்டு. இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் இன்று தொடங்குகிறது. |
| தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதியில் 900 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு Posted: 18 Mar 2016 10:24 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் திருப்பதி, திருமலையில் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். |
| நடிகை ரோஜாவை அனுமதிக்காததால் ஆந்திர சட்டசபையில் அமளி: கருப்பு உடை அணிந்து கண்டனம் Posted: 18 Mar 2016 10:19 PM PDT ஆந்திர சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை ரோஜாவுக்கு 1 ஆண்டு தடை விதித்த சபாநாயகரின் உத்தரவை நீக்கி ஐதராபாத் ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நடிகை ரோஜா நேற்று சட்டசபைக்கு வந்தார். ஆனால் |
| இசையாக கரைந்த இறுதிமூச்சு: பிரபல புல்லாங்குழல் கலைஞர் கச்சேரியின்போது மாரடைப்பால் மரணம் Posted: 18 Mar 2016 09:31 PM PDT பிரபல புல்லாங்குழல் இசைமேதை என்.ரமணியின் சீடரும் புல்லாங்குழல் கலைஞருமான ஏ.வி. பிரகாஷ்(74) கச்சேரியின்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். |
| தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 50 சதவீதம் குறைய வாய்ப்பு Posted: 18 Mar 2016 07:11 PM PDT நடப்பு மார்ச் மாதத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க ஆபரண விற்பனையாளர்களின் தொடர் போராட்டமே இதற்கு காரணம் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. |
| ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: மோடி-மெக்பூபா சந்திப்பு தீடீர் ரத்து Posted: 18 Mar 2016 05:28 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெக்பூபா இருவரிடையே நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| வருத்தமில்லை, தேசவிரோத குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றது பெருமையே: உமர் காலி Posted: 18 Mar 2016 05:23 PM PDT தேசவிரோத குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றது பெருமைக்குரியதே தவிர, வருத்தம் ஏதுமில்லை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் உமர் காலி கூறியுள்ளார். |
| உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல்: ஆட்சியை களைக்க பா.ஜ.க., எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை Posted: 18 Mar 2016 05:12 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹரிஸ் ரவாத் முதல்-மந்திரியாக உள்ளார். உத்தரகாண்ட் சட்டசபையில் மொத்த 71 இடங்கள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பா.ஜ.க., 28 இடங்களை கைப்பற்றியது. |
| Posted: 18 Mar 2016 04:48 PM PDT தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மதுகுடித்தபோது மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் இருந்ததாக தெரிவித்தனர். |
| விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 18 Mar 2016 04:36 PM PDT திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த், |
| புதிய மருந்துகளை மீண்டும் விலங்குகள் மீது சோதனை செய்ய மத்திய அரசு தடை Posted: 18 Mar 2016 04:36 PM PDT ஏற்கனவே வெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்ட மருந்துகளை மீண்டும் விலங்குகள் மீது சோதனை செய்ய மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றில், உடலுக்கு கேடு விளைவிக்கும், ரசாயன அளவை சோதனை |
| தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தனித்து போட்டி: பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு Posted: 18 Mar 2016 04:10 PM PDT 234 இடங்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு மே மாதம் 16-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் முக்கிய அரசியல் கட்சிகள் முனைப்பாக ஈடுபட்டுள்ளன. பாரதீய ஜனதா கட்சியைப் |
| Posted: 18 Mar 2016 03:28 PM PDT நேரு விளையாட்டு அரங்கில் அரசு விழாக்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து, ஐகோர்ட்டில் செந்தில் குமார் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், இந்த அரங்கில் பொது விழாக்கள் நடத்தப்படுவதால் |
| காஷ்மீர் மக்களும் இந்தியர்களே, அவர்களின் பிரச்சனைகளை எப்போதும் பேசலாம்: கன்னையா குமார் Posted: 18 Mar 2016 01:26 PM PDT காஷ்மீர் தற்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் உள்ளது என்றும் அதனால் இந்தியர்கள் காஷ்மீரிகளின் பிரச்சனைகள் குறித்து எந்த இடத்திலும் விவாதிக்க முடியும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் கூறியுள்ளார். |
| Posted: 18 Mar 2016 12:53 PM PDT சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மாடி குடியிருப்பு, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்த சம்பவத்தை அடுத்து, இடிந்த கட்டிடத்தின் அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தை இடித்து அகற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. |
| Posted: 18 Mar 2016 12:03 PM PDT புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், நேற்று வெளியிட்டது. இந்த விதிகளில் கிராமப்புறங்களும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட |
| மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முன்னாள் ராணுவ வீரரை களம் இறக்கும் பா.ஜனதா Posted: 18 Mar 2016 11:15 AM PDT மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கர்னல் திப்தான்சு சவுத்திரி. இவர் கார்கில் போரில் இறுதி நாள் வரை தீரத்துடன் பணியாற்றியவர். இதனால் இவர் 'கார்கில் போரின் நாயகன்' என புகழப்பட்டார். தற்போது அரசியலில் களம் இறங்கி உள்ள திப்தான்சு சவுத்திரி பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். |
| கேரளாவில் ஆளில்லா குட்டி விமானம் கடலில் விழுந்து விபத்து Posted: 18 Mar 2016 11:07 AM PDT இந்திய கடற்படைக்கு சொந்தமான, 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயங்கும் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று வழக்கம்போல் கேரள கடலோர பகுதியில் வானில் பறந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |