மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கிராமப்புற பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்
- ஆந்திராவில் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு என்.டி.ஆர். சுகாதார அட்டை
- அசாம் சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது
- மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: திரிணாமுல் காங்கிரசுக்கு 201 இடங்கள் - கருத்து கணிப்பில் தகவல்
- இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் – சபைக்கு ஆனந்த் சர்மா போட்டி
- திருப்பதி கோவிலில் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது
- விஜய் மல்லையா லண்டனில் பதுங்கல்: இந்தியா அழைத்து வர முயற்சி
- அருண்ஜெட்லி அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு
- ஆந்திர சட்டசபையில் அமளி: ஜெகன்மோகன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 37 பேர் சஸ்பெண்டு
- திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக காலியாக உள்ள அறைகளின் விவரங்களை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க ஏற்பாடு
- தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது
- ஹோலி பண்டிகை அன்று தண்ணீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்தை தடுக்க கடுமையான சட்டம்: பட்னாவிஸ் உறுதி
- ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
- நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
- சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கருப்பு பண புழக்கத்தை கண்காணிக்க 30 பார்வையாளர்கள் நியமனம்
- நகைகள் மீதான கலால் வரிக்கு எதிர்ப்பு: டெல்லியில் 17-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு
- மத்திய, மாநில அரசு விளம்பரங்களில் தலைவர்களின் படங்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- பாராளுமன்றத்தில் எதிரி சொத்து சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
- பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்
| கிராமப்புற பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் Posted: 09 Mar 2016 11:02 PM PST கிராமப்புற பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். |
| ஆந்திராவில் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு என்.டி.ஆர். சுகாதார அட்டை Posted: 09 Mar 2016 10:56 PM PST ஆந்திராவில், ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது ஏழை மக்கள் மருத்துவ வசதி பெற ''ராஜீவ் காந்தி ஆரோக்கியம்'' என்ற பெயரில் சுகாதரா அட்டை வழங்கப்பட்டது. இதன் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ரூ.1 லட்சம் வரை மருத்துவ வசதி பெற முடியும். |
| அசாம் சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது Posted: 09 Mar 2016 10:29 PM PST அசாம் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 மற்றும் 11–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரசுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் அசாம் |
| மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: திரிணாமுல் காங்கிரசுக்கு 201 இடங்கள் - கருத்து கணிப்பில் தகவல் Posted: 09 Mar 2016 10:13 PM PST மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 4 & 11, 17, 21, 25, 30 மற்றும் மே 5–ந்தேதிகளில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்– இடதுசாரி கூட்டணி ஆகிய வற்றுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் – சபைக்கு ஆனந்த் சர்மா போட்டி Posted: 09 Mar 2016 09:39 PM PST இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் – சபைக்கு காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த் சர்மா போட்டியிடுகிறார். டெல்லி மேல் – சபையில் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தவர் ஆனந்த் சர்மா. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல் – சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். நேற்றுடன் அவரது எம்.பி. பதவி காலம் முடிவடைந்தது. |
| திருப்பதி கோவிலில் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது Posted: 09 Mar 2016 09:39 PM PST திருப்பதி கோவிலில் ஏழுமலையானை உள்ளூர் மக்கள் இலவசமாக தரிசனம் செய்ய மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்காக 5 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அடிக்கடி வருவதை தவிர்க்க ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. |
| விஜய் மல்லையா லண்டனில் பதுங்கல்: இந்தியா அழைத்து வர முயற்சி Posted: 09 Mar 2016 09:29 PM PST பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங் பிஷர், யுனைடெட் ப்ரூ வரீஸ் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த தொழில் நிறுவனங்களுக்காக அவர் இந்தியாவில் உள்ள எல்லா முக்கிய வங்கிகளிடம் இருந்தும் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். |
| அருண்ஜெட்லி அவதூறு வழக்கு: கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு Posted: 09 Mar 2016 09:29 PM PST மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாக இருந்த போது முறைகேடு நடந்ததாகவும் இதில் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாகவும் டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இது பற்றி விசாரணை நடத்தவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். |
| ஆந்திர சட்டசபையில் அமளி: ஜெகன்மோகன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 37 பேர் சஸ்பெண்டு Posted: 09 Mar 2016 09:20 PM PST ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் அமைக்கப்படுகிறது. இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்த ஆளும் தெலுங்குதேசம் கட்சியின் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அங்கு பல ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. |
| Posted: 09 Mar 2016 08:32 PM PST திருமலையில் உள்ள அன்னமய பவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமை தாங்கி பேசினார். |
| தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது Posted: 09 Mar 2016 07:47 PM PST ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அதன் அமைச்சகம் வாயிலாக அறிவியலை வெவ்வேறு விதத்தில் மக்களிடையே பரப்புவோருக்கு தேசிய விருதுகளை கடந்த 1987-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. 2015-ம் ஆண்டிற்கான தேசிய விருது டெல்லியில் |
| ஹோலி பண்டிகை அன்று தண்ணீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தல் Posted: 09 Mar 2016 07:20 PM PST வண்ணங்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீரை ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். |
| மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்தை தடுக்க கடுமையான சட்டம்: பட்னாவிஸ் உறுதி Posted: 09 Mar 2016 07:14 PM PST மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுபான விடுதி உரிமையாளர்கள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசின் உத்தரவை |
| ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் Posted: 09 Mar 2016 06:00 PM PST தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. |
| Posted: 09 Mar 2016 04:23 PM PST ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து டெல்லி மேல்-சபையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன்னுடைய உரையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார். இரு |
| சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கருப்பு பண புழக்கத்தை கண்காணிக்க 30 பார்வையாளர்கள் நியமனம் Posted: 09 Mar 2016 03:58 PM PST தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. அந்தவகையில், தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளது. |
| நகைகள் மீதான கலால் வரிக்கு எதிர்ப்பு: டெல்லியில் 17-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு Posted: 09 Mar 2016 03:36 PM PST தங்கம் மற்றும் வைர நகைகள் மீது மத்திய அரசு ஒரு சதவீதம் கலால் வரி விதித்ததை கண்டித்து நகைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக டெல்லி வியாபாரிகள் அறிவித்து உள்ளனர். |
| Posted: 09 Mar 2016 03:24 PM PST மத்திய, மாநில அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதற்கு எதிராக 'காமன் காஸ்' உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தன. இது தொடர்பாக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்வி.ரமணா |
| பாராளுமன்றத்தில் எதிரி சொத்து சட்ட திருத்த மசோதா நிறைவேறியது Posted: 09 Mar 2016 02:51 PM PST போருக்கு பிறகு, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடம்பெயர்ந்து, அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் விட்டுச்சென்ற சொத்துகளையும், கம்பெனிகளையும் கையகப்படுத்த கடந்த 1968-ம் ஆண்டு எதிரி சொத்து சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்நிலையில், அதில் உள்ள குறைபாடுகளை களையும் வகையில், அதில் திருத்தம் |
| பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் Posted: 09 Mar 2016 02:20 PM PST வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் அசாம், மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |