Tamil Star |
| Whitby-Oshawa இடைத் தேர்தல் – முற்போக்கு பழமைவாதக் கட்சி வெற்றி Posted: 12 Feb 2016 10:02 AM PST
Whitby-Oshawa இற்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றிருந்தது. பழமைவாதக் கட்சியின் மாகாணசபை உறுப்பினராக கிறிஸ்டின் எலியட் பதவி விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த தேர்தல் நேற்று நடாத்தப்பட்டிருந்தது. தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததை அடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறித்த தொகுதியில் பழமைவாதக் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற முற்போக்கு பழமைவாதக் கட்சி சுமார் ஐம்பது சதவீத வாக்குகளை பெற்று பெற்றுள்ளது. குறித்த தொகுதியில் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சார்பில் லோர்ன் கோவும்(Lorne Coe) போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சி எலிசபெத் றோயையும், புதிய சனநாயக கட்சி நிக்கிலன்குயிஸ்ட்டையும் அங்கு களமிறக்கியிருந்தது. அத்துடன் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் பிடியிலிருந்த இந்த தொகுதியை கைப்பற்றிவிடும் நோக்கில் லிபரல் கட்சி பெரும் பிரயத்தனம் எடுத்திருந்த போதிலும் வெற்றியீட்ட முடியாமல் போயுள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான லிபரல் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் ஒன்ராறியோ முதல்வர் ஆகியோரும் ஈடுபடுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post Whitby-Oshawa இடைத் தேர்தல் – முற்போக்கு பழமைவாதக் கட்சி வெற்றி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்கள்! – பதவியேற்ற 100 ஆவது நாளில் அறிவிப்பு! Posted: 12 Feb 2016 09:49 AM PST
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற நூறாவது நாளை முன்னிட்டு அந்த அறிவித்தல் வெளியாகலாம் எனவும், அதில் மாணவர்களுக்கான கோடைகால வேலைவாய்ப்புகளுக்கான முதலீடுகள் தொடர்பான அறிவித்தல்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோடைகால வேலைவாய்ப்பினை இரட்டிப்பாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளடக்கியதாக அந்த அறிவிப்பினை அமையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கினறன. கடந்த வருடத்திலேயே 34,000 மேலதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் 106 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுத் திட்டங்களை கனேடிய மத்திய அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதமர் வெளியிடவுள்ள அறிவிப்பில் மேலும் பெருமளவு வேலைவாய்ப்புத் தகவல்கள் இடம்பெறும் எனவும், குறிப்பாக 15இலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான சம்பளத்தில் அரசாங்கத்தின் மானிணத் தொகையும் சேர்க்கப்படும் அறிவிப்பும் அதில் உள்ளடங்கியிருக்கும் எனவும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். தான் பதவியேற்ற நூறாவது நாளை முன்னிட்டு ரொரன்ரோவில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் வேலைவாய்ப்புக் குறித்த அறிவித்தல் வெளியாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது. The post கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்கள்! – பதவியேற்ற 100 ஆவது நாளில் அறிவிப்பு! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Whitby-Oshawa தொகுதியை முற்போக்கு பழமைவாதக் கட்சி மீண்டும் கைப்பற்றியுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவித்தல்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.