Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Posted: 02 Feb 2016 10:50 PM PST

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. இவர் 1980–ம் ஆண்டு முதல் 1989–ம் ஆண்டு வரை சபாநாயகராக பணியாற்றினார். அதன்பிறகு நரசிம்மராவ் மந்திரி சபையில் வேளாண்மைத்துறை மந்திரியாகவும் 2004 முதல் 2009–ம் ஆண்டுவரை மத்தியப்பிரதேச மாநில கவர்னராகவும்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

Posted: 02 Feb 2016 10:46 PM PST

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரில் சாலை விபத்தில் பெண் பலி: ஆப்பிரிக்க மாணவி மீது தாக்குதல்

Posted: 02 Feb 2016 10:41 PM PST

பெங்களூர் கெசரகட்டா என்ற இடத்தில் சாலையில் கார் மோதி 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார். அந்த இடத்தில் ஏராளமான கும்பல் திரண்டு இருந்தது. போலீசாரும் நின்று இருந்தனர். அதன்பிறகு அந்த வழியாக ஆச்சார்யா கல்லூரியில் படிக்கும் ஆப்பிரிக்க

8-வது நாளாக தொடர்கிறது டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

Posted: 02 Feb 2016 10:10 PM PST

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் சுமார் 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து 1.50 லட்சம் ஊழியர்களும் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில்

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Posted: 02 Feb 2016 10:07 PM PST

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த 'இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், 'மேக் இன் இந்தியா வாரம்' என்ற நிகழ்ச்சி மும்பை கிர்காவ் கடற்கரையில் வருகிற 13–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்

Posted: 02 Feb 2016 09:36 PM PST

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று விமானம் மூலம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வந்தார். பின்னர் காரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். நேற்று இரவு அவர் கோவிலில் தங்கினார். இன்று காலையில் அவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

திருப்பதியில் 14–ந் தேதி ரதசப்தமி விழா: 10 வாகனங்களில் சாமி ஊர்வலம்

Posted: 02 Feb 2016 09:33 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14–ந் தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. வழக்கமாக பிரம்மோற்சவ விழாவின் போது ஏழுமலையான் தினமும் ஒரு வாகனம் என்ற அடிப்படையில் 10 நாட்களும், 10 வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வருவார்.

காளகஸ்தி கோவிலில் தைவான் பக்தர்கள் 16 பேர் தரிசனம்: திருமணம்–குழந்தை பாக்கியத்துக்காக சிறப்பு பூஜை

Posted: 02 Feb 2016 09:28 PM PST

காளகஸ்தியில் புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. திருமண தோஷம் இருப்பவர்கள், குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து ராகுகேது சர்ப்ப தோஷ நிவாரண சிறப்பு பூஜையில் பங்கேற்றால் வேண்டியது நிறைவேறும் என்று ஐதீகம். இந்த நிலையில் தைவான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் 16 பேர் காளகஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் ராகுகேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவாரிமெட்டுவில் இருந்து திருமலைக்கு வரும் நடைபாதை பக்தர்களுக்கு இலவச வசதிகள்: தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை

Posted: 02 Feb 2016 09:23 PM PST

ஸ்ரீவாரிமெட்டுவில் இருந்து திருமலைக்கு வரும் நடைபாதை பக்தர்களுக்கு ஓய்வெடுப்பது உள்ளிட்ட வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை நடந்தே மலையேறி வந்து தரிசனம் செய்வதாக சில பக்தர்கள் வேண்டிக்கொள்வதுண்டு. அவர்களுக்கு வசதியாக திருப்பதி

கை நரம்புகளை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற பா.ஜ.க., எம்.பி.யின் மகன்

Posted: 02 Feb 2016 09:16 PM PST

கல்லூரி மாணவரான பா.ஜ.க., எம்.பி.யின் மகன் இன்று கை மணிக்கட்டின் நரம்புகளை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், முலுந்த் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., எம்.பி.யாக

முன்னாள் மக்களவை சபாநாயகர் பல்ராம் ஜக்கார் இன்று காலமானார்

Posted: 02 Feb 2016 09:12 PM PST

மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான பல்ராம் ஜக்கார் தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை உயிரிழந்தார். பல்ராம் ஜக்கார் பஞ்சாப் மாநிலம் அபோகர் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்கோசி பகுதியில் 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி பிறந்தவர். பல்ராம் ஜக்கார் 1980 முதல் 1989 வரை 8-வது மக்களவை சபாநாயகராக பதவி வகித்தார். மேலும் மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக 2004-ம்

பிரான்ஸ் நாட்டில் சீக்கியர்கள் டர்பன் அணிய தடை இல்லை: புதுடெல்லியில் உள்ள தூதரகம் விளக்கம்

Posted: 02 Feb 2016 08:55 PM PST

பிரான்சில் வாழும் சீக்கிய மக்கள் தலைப்பாகை (டர்பன்) அணிய தடை இல்லை என்று அந்நாட்டு தூதரம் விளக்கம் அளித்துள்ளது. பிரான்சில் பள்ளிகளில் மத அடையாளங்களைத் தடை செய்யும் பொறுட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களின் பர்தா மட்டுமல்லாமல், சீக்கியர்களின் டர்பனுக்கும் தடை

சித்தூர் மேயர்–கணவர் கொலை வழக்கில் கைதான ஸ்ரீகாளஹஸ்தி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி நீக்கம்

Posted: 02 Feb 2016 08:53 PM PST

சித்தூர் மேயர் கத்தாரி அனுராதாவும், அவரது கணவர் கத்தாரி மோகனும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17–ந் தேதி சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள

திருவனந்தபுரம் அருகே ஆண்வேடமிட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடிய இளம்பெண் கைது

Posted: 02 Feb 2016 08:38 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஆழப்புழை உள்பட பல்வேறு பகுதிகளில் ரெயில் நிலையங்கள் அருகில் பொது மக்கள் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. வாகனங்களை பறிகொடுத்தவர்கள் இது பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். இருசக்கர வாகனங்களை திருடும் கும்பலை பிடிப்பதற்காக

ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: கேரள மது பார் உரிமையாளர் சங்க தலைவர் மீது அவதூறு வழக்கு

Posted: 02 Feb 2016 08:12 PM PST

கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக 700–க்கும் மேற்பட்ட மது பார்கள் மூடப்பட்டன. இதனை மீண்டும் திறக்க மது பார் உரிமையாளர்கள் முயற்சி செய்தனர். அவர்களுக்கு உதவி செய்வதாக கூறி அரசியல் பிரமுகர்கள் பலரும் லஞ்சம் வாங்கியதாகவும், பணம் பெற்றுக் கொண்ட பின்பும் மதுபார்களை திறக்க

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது அனாதை குழந்தையை தத்தெடுத்த இத்தாலிய தம்பதியர்

Posted: 02 Feb 2016 07:36 PM PST

மராட்டிய மாநிலம், நாசிக் நகரில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் தலசீமியா என்ற பின்னடையும் தன்மையுள்ள மரபு சார்ந்த இரத்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தை வளர்ந்து வருவதை சமூக வலைத்தளத்தின் மூலம் அறிந்த இத்தாலிய தம்பதியர் அந்த குழந்தையை தங்களது மகனாக தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டனர்.

தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது நாங்கள் தான்: உரிமை கொண்டாடும் மோடி அரசு

Posted: 02 Feb 2016 07:31 PM PST

மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் இயற்றி, அதை 2006-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2-ந் தேதி ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கி வைத்தனர். அந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நாக்பூர் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 02 Feb 2016 07:20 PM PST

இந்தியாவில் பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ள 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முதற்கட்டமாக 20 நகரங்களை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதில், மராட்டியத்தில் புனே மற்றும் சோலாப்பூர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்தன.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லி போலீசுக்கு கெஜ்ரிவால் கண்டனம்

Posted: 02 Feb 2016 07:19 PM PST

ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட பிரச்சினை தொடர்பாக கடந்த 30-ந்தேதி டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன்பாக பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்களின் தலைமுடியை பிடித்து ஆண்

ரோகித் தற்கொலை விவகாரத்தால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கலாம்: சிவசேனா

Posted: 02 Feb 2016 07:15 PM PST

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது:- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வெறும் 15 நாட்கள் தான் இருக்கிறது. இந்த நிலையில், ரோகித் வெமுலா தற்கொலை பிரச்சினை எதிரொலியாக ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் முடங்கலாம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™