ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்
- இன்று...! எனக்கான நாள்.....!! - விமந்தனி
- துபாயில் கார் இல்லா தினம் அனுசரிப்பு
- ரயில்வே பட்ஜெட்: பிரத்யேக இணைதளம் தொடக்கம்
- இந்தோனேசியாவில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி: சிவப்பு விளக்கு பகுதிகளை மூட அரசு முடிவு
- ருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
- திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்
- இடைப்பட்ட காலம்…
- காற்செருப்பு
- பித்ருதோஷம் நீக்கும் பரமேஸ்வரன் கோயில்
- பலன் தரும் ஸ்லோகம்
- கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்)
- கட்சிகளை விஞ்சும் பிரச்சார மீம்ஸ்: அசத்தும் தமிழக தேர்தல் ஆணையம்!
- மனதை நெகிழவைத்த குட்டி கதை.
- இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ.,
- தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக …
- தேர்தல் களம்.............
- பிரணாப் முகர்ஜி உரையில் 10 துளிகள்
| அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் Posted: 24 Feb 2016 02:50 PM PST அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் அலுவலக நிமித்தமாய் அடுத்தவூர் சென்றுள்ள அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் வீடுசுத்தம் செய்யும்போதும் வீட்டைகழுவி மெழுகும்போதும் அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் பாத்திரங்கள் தேய்க்கும்போதும் பாலைக்காய்ச்சி இறக்கும்போதும் அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் துணிகளெல்லாம் துவைக்கும்போதும் தூசுதட்டி மடிக்கும்போதும் அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள் ஏன்? ஏன்? ஏன்? எப்போதும் நான்தானே இவையெல்லாம் செய்திடுவேன் இப்போது ... |
| இன்று...! எனக்கான நாள்.....!! - விமந்தனி Posted: 24 Feb 2016 12:16 PM PST இன்று...! எனக்கான நாள்.....!! என்றுமே என் மகிழ்ச்சி ஈகரை உறவுகளின் வாழ்த்துக்கள் இன்றி இரட்டிப்பானதில்லை. ஆகவே, இப்போதும், வழக்கம் போல் உங்களின் வாழ்த்துக்களுக்காக காத்திருக்கும்.................... ....... உங்கள் விமந்தனி. |
| துபாயில் கார் இல்லா தினம் அனுசரிப்பு Posted: 24 Feb 2016 09:19 AM PST - துபாய் மாநகராட்சி கார் இல்லாமல் அலுவலகத்துக்கு வரும் தினத்தை பிப்ரவரி 21 அன்று அனுசரித்தது. - இதனையொட்டி மாநகராட்சி ஊழியர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் பஸ். மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகங்களுக்கு வந்தனர் - மேலும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. - --------------------------------------- தினமலர் படம் - இணையம் |
| ரயில்வே பட்ஜெட்: பிரத்யேக இணைதளம் தொடக்கம் Posted: 24 Feb 2016 08:41 AM PST நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் குறித்த விவரங்கள் பிரத்யேக இணையதளத்தில் வழங்கப்படுகின்றன. http://www.railbudget2016.indianrailways.gov.in என்ற இணையளத்தில் ரயில்வே பட்ஜெட் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளாலம். 12 லட்சம் காதிதங்கள் சேமிப்பு ரயில்வே பட்ஜெட் தொடர்பான விவரங்கள் அனைத்தும் `பிங்க் புக் ' என்ற பெயரில் அச்சடிக்கப்படும். மேலும், மானிய கோரிக்கைகள் குறித்த விவரங்களும் அச்சடிக்கப்படும். இந்நிலையில், இந்த புத்தகங்களை இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே அச்சுப்பதிப்பது ... |
| இந்தோனேசியாவில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி: சிவப்பு விளக்கு பகுதிகளை மூட அரசு முடிவு Posted: 24 Feb 2016 08:40 AM PST உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. - முதலில் தலைநகர் ஜகர்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து விபசார விடுதிகளையும் வெளியேற்றுமாறு ஜகர்தா நகர கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அங்குள்ள விடுதிகளை காலி செய்து அதில் இருக்கும் பெண்களை வெளியேற்றும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த நடவடிக்கைகள் ... |
| ருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 24 Feb 2016 08:38 AM PST - அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட கருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேக்கி ஃபாக்ஸ். இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபாக்ஸ் அண்மையில் இறந்தார். - ஜான்சன் ... |
| திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம் Posted: 24 Feb 2016 04:54 AM PST உண்மை சம்பவம் திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம், நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற பெண்ணை, அவளது சொந்த மாமா, மற்றும் விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும் வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று . . . . . . . . . . . . . . . . . LKG ல சேத்துட்டாங்க சே.......பாவம்ல. முக நூலில் இருந்து |
| Posted: 24 Feb 2016 04:51 AM PST வெய்யலூர் மாமாவின் கையில் பசுமை மாறாமலிருக்கும் இரட்டை இலை பராசக்தி வசனம் வார்த்தை மாறாமல் வந்து விழும் " போனால் போகட்டும் போடா" அதுதான் அவருக்கு அண்மைக்காலம். – பிள்ளைகள் சொல்கிறார்கள் எம்.டிவி.,ஸ்டார் டிவி., சன் டிவி. விழுப்புரத்துக்கும் வெய்யலூருக்கும் எட்டு கிலோமீட்டார் தானாம். – சாலையோரத்துப் பலகை கூறிக்கொள்கிறது தூரம் எட்டு கிலோமீட்டர். காலம்? எட்டு நூற்றாண்டுகள் – ——————————– பழமலை |
| Posted: 24 Feb 2016 04:50 AM PST செருப்பைக் கழற்றி அடிப்பேன் என்கிறாய். நான் ஆட்சேபிக்கவில்லை என்றாலும் செருப்பை ஓங்கும் அந்தக் கணத்தில் நீ சற்று தயங்கக் கூடும் – அப்போது நான் சொல்வேன் உன் செருப்பு பிய்ந்துவிடக் கூடுமெனினும் என் செருப்பாலேயே என்னை அடிப்பதுதான் அழகென தயங்காதே அடி. – —————————- பசுவய்யா |
| பித்ருதோஷம் நீக்கும் பரமேஸ்வரன் கோயில் Posted: 24 Feb 2016 04:48 AM PST ![]() |
| Posted: 24 Feb 2016 04:48 AM PST ![]() |
| கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்) Posted: 24 Feb 2016 04:20 AM PST கணினியில் கண்டதும் கொண்டதும் (சின்னச் சின்னத் தகவல்கள்) பல துண்டு சிதறல்களாக கணினி பற்றிய தகவல்கலைக் கொண்டுவருவேன் சுவாரஸியமாக இருக்கும். ,முதலில் ஒரு தகவல் இது சரியா பிழையா தெரியாது செய்துபார்க்க வில்லை. இந்தப் பிரிவில் இருக்கட்டுமே. கீழ் காணும்படி ஒரு ஓடியோ பாக்ஸ் ற்கான வயர் ஒன்றைகொண்டு மோபைல் பொனில் சுற்றுகிறீர்கள். அதை வெள்ளித் தாள் கொண்டு மூடுகிறீர்கள். இப்போது சார்ஜ் செய்யுங்க|ள் 10 செக்கன்களீல் 75 வீதம் சார்ஜ் ஏறிவிட்டதாக கூறூகிறார் |
| கட்சிகளை விஞ்சும் பிரச்சார மீம்ஸ்: அசத்தும் தமிழக தேர்தல் ஆணையம்! Posted: 24 Feb 2016 03:39 AM PST தமிழகத்தில் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரங்கள், மேடைகள், நிகழ்ச்சிகள், மாநாடுகள், விளம்பரங்கள், மீம்ஸ் மூலம் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் அடியெடுத்து வைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையமும் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மீம்ஸ் மற்றும் வாசகங்கள் மூலம் கவன ஈர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. எந்த வயதில் உள்ளவர்கள் வாக்களிக்கலாம்? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? அதை சரிபார்ப்பது எப்படி? வாக்காளர் ... |
| Posted: 24 Feb 2016 02:12 AM PST – காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் எழுந்து நில்லுங்கள்" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது. – ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார். – "வீட்டுப்பாடம் செய்தியா?" – "இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல" – "வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே" – குழந்தை தயங்கியபடியே சொன்னது. "எனக்கு அம்மா இல்ல" – ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார். – "அம்மா ... |
| இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Posted: 23 Feb 2016 05:58 PM PST பெரிய சர்ச்சைக்குப் பிறகு புதிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் ஜான்சிராணி. மகிளா காங்கிரஸ் பிரிவின் தலைவி. காந்தியவாதி ஏ.எஸ். பொன்னம்மாளின் பேத்தி. காரசாரமாக பேசுவார் என எதிர்பார்த்துப் போனால் அரசியல்வாதிக்கான அடையாளமே இல்லாமல் இருந்தா அவர். - 'சொந்த ஊர் அழகம்பட்டி. என்னோட அப்பா, அம்மா எனக்க எட்டு வயசு இருக்கும்போதே தவறிட்டாங்க. என் கூடப் பொறந்தவங்க மொத்தம் மூணு சகோதரிகள். பாட்டி பொன்னம்மாள்தான் எங்களை வளர்த்தாங்க. ஸ்கூலிங் முழுக்க நிலக்கோட்டையில் முடிச்சேன். டிகிரி மதுரையில படிச்சேன். அப்புறம் ... |
| தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக … Posted: 23 Feb 2016 05:12 PM PST படம்- முத்துச்ஃ சிப்பி பாடலாசிரியர்- வாலி - - அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய் எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் … வளர்ந்ததாய் வாழ்ந்ததாய் வந்த தாய் எங்கள் தாய் … எங்கள் தாய் … தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக … கண் பட்ட இடம் பூ மலரும் … பொன் மகளே வருக … பொன் மகளே வருக … நீ வருக! கருணை என்ற தீபம் இரு கண்களில் ஏந்திய தாயே காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்டவள் நீயே பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே வானம் ... |
| Posted: 23 Feb 2016 04:55 PM PST 16.01.2015ல் 18 வயது பூர்த்தியான என்மகளுக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து 20.09.2015அன்று சிறப்பு முகாமில் கொடுத்துவிட்டு வந்தேன், விசாரனைக்கு வீட்டுக்கும் வரல பெயரும் சேர்க்கல. அரசு அறிவித்த நாளிலும் எங்க போளூரில் பட்டியலை வெளி இடவும் இல்லை, அலுவலகத்தில் கொடுத்துட்ட என்று என்னிடம் மனுபெற்ற பொறுப்பானவர் கூறிவிட்டார் . இப்படி உள்ளது நிர்வாக லட்சனம் . அம்மா கால் சென்டர், 1950 இலவச தேர்தல் புகார் என்றுவெற்று விளம்பரத்தால் பயனில்லைங்க. சட்டத்தை மதிக்கலிங்க யாரும். வெறும் வெற்று விளம்பரங்களினால் ... |
| பிரணாப் முகர்ஜி உரையில் 10 துளிகள் Posted: 23 Feb 2016 04:48 PM PST நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் 20 பக்க உரையை குடியரசுத் தலைவர் வாசித்தார். அதில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அவர் விவரித்தார். அதன் 10 முக்கிய துளிகள்: * 2015-ல் அதிக அளவில் யூரியா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. * மேக் இன் இந்தியா திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு 39% அதிகரித்துள்ளது, * ஜன்தன் யோஜனா திட்டம் முன்னோடித் திட்டமாக விளங்குகிறது. * பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி திட்டங்களால் கடைநிலை மக்களும் காப்பீடு பெறுகின்றனர். --- * 2019 மார்ச் மாதத்துக்குள் பிரதான் மந்திரி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

