Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Parkdale பகுதியில் தீ சம்பவம் – மூவர் மருத்துவமனையில்

Posted: 26 Jan 2016 07:01 PM PST

jkjk

jkjkParkdale பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டம் ஒன்றில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் பாதிக்க்பபட்ட மூவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்கு King வீதி மற்றும் மேற்கு Queen வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் அதிகாலை 11.30 மணியளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பத்தில் பாதிக்கப்பட்ட மூவரில் இரண்டு பேர் உயிராபத்தான நிலயிலும், மூன்றாவது நபர் மோசமான காயங்களுக்கு ஆளான நிலையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், மூன்றாவது நபர் அவ்வாறே இன்னமும் இருப்பதாக கூறியுள்ளனர்.

அதேவேளை சுவாசக் கோளாறுக்கு ஆளான ஒரு பெண்ணிற்கு சம்பவ இடத்தில் வைத்தே மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.jkjk

சமையல் அறையில அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரம் ஒன்று தீபற்றிக் கொண்டதால் இந்த தீ சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த தீயணைப்புப் படை பணியாளர்கள் 20 பேர் விரைது செயற்பட்டு தீயை 11.40 மணியவிலேயே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்

தீ சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னனெடுக்கபடப்டு வருகின்றது.

The post Parkdale பகுதியில் தீ சம்பவம் – மூவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடியர் ஒருவருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை

Posted: 26 Jan 2016 09:04 AM PST

judment_-_01262016

judment_-_01262016போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கனேடியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஒன்ராறியோவைச் சேர்ந்த 42 வயதான கட்டான் கேட்ஸ் டினல் என்ற அந்த நபர் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார் என்றும், இந்த கடத்தல் சம்பவங்கள் 2005ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ யோர்க்கின் வட பகுதியில் உள்ள எல்லைப் பகுதி ஊடாக சுமார் பத்து தொன் அளவிலான மரிஜுவானா எனப்படும் போதைப் பொருளை அவர் அமெரிக்காவினுள் கடத்தி வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இவர்களால் இவ்வாறு அமெரிக்காவுக்குள் கடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருள், அமெரிக்காவின் கிழக்கு பிராந்தியங்களில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு இவருடன் சேர்ந்து ஒன்ராறியோவைச் சேர்ந்த மற்றுமொரு நபரான 45 வயது மைக்கல் மிக்கி வூட்ஸ் என்பவரும் தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது.judment_-_01262016

இந்த கடத்தல் நடவடிக்கையின் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் இவர்கள் பத்து மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தினை பெற்றுள்ளதாகவும் அரச தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு கடந்த யூலை மாதம் முடிவுக்கு வந்திருந்த நிலையில், ஒருவருக்கு கடந்த 14 ஆம் திகதி ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.

மற்றைய நபருக்கு கடந்தவியாழக்கிழமை ஆயுள்தண்னை நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post கனேடியர் ஒருவருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தடப் பேருந்து ஓட்டுனரைக் கத்திமுனையில் மிரட்டிய பெண்கள்

Posted: 26 Jan 2016 08:45 AM PST

Two_females_threatened_TTC_bus_driver_-_20160126

Two_females_threatened_TTC_bus_driver_-_20160126தடப்பேருந்து ஓட்டுனர் ஒருவரை இரண்டு பெண்கள் கத்திமுனையில் மிரட்டியமை தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிடுகையில், இரண்டு பெண்கள் அதிகாலை 12.50 மணியளவில் தடப் பேருந்து ஓட்டுனர் ஒருவரை அணுகி அவரை கத்தி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

Yonge வீதி மற்றும் Finch அவனியூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், அவ்வாறு அச்சுறுத்திய பெண்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து வேறொரு தடப் பேருந்தில் ஏறி கிழக்கு தடம் வழியாக தப்பிச் சென்று விட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கும் பேது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Two_females_threatened_TTC_bus_driver_-_20160126

இரண்டாவது சந்தேக நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் கண்காணிப்புக் கருவியில் பதிவுகளை விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்

இந்த சம்பவத்தில் யாருக்கம் காயங்கள் ஏற்படவில்லை.

The post தடப் பேருந்து ஓட்டுனரைக் கத்திமுனையில் மிரட்டிய பெண்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™