Tamil Star |
| நெக்சன் எண்ணெய் மணல் அகழ்வு தொழில்த்துறை பகுதியில் வெடிப்பச் சம்பவம் – ஒருவர் பலி Posted: 16 Jan 2016 09:05 AM PST
ஃபோர்ட் மக்மொர்றி (Fort McMurray) பகுதியில் அமைந்துள்ள அந்த தொழிற்துறைப் பகுதியில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத்தில்ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனை நெக்சன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு,காயம் ஏற்பட்டமை தொடர்பில் கவலை வெளியிட்ட அந்த நிறுவனம்,அங்கிருந்த ஏனைய அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அந்த தொழிற்பகுதி தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அதனால் அருகாமையில் வசிப்பவர்களுக்கோ, அங்குள்ள ஏனையவர்களுக்கோ எந்தவித ஆபத்துகளும் இல்லை எனவும் நெக்சன் நிறுவனம் உறுதியளித்துள்ளது. The post நெக்சன் எண்ணெய் மணல் அகழ்வு தொழில்த்துறை பகுதியில் வெடிப்பச் சம்பவம் – ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ பங்குச் சந்தை நேற்றைய தினம் மிகக் குறைவான பதிவை காட்டியது Posted: 16 Jan 2016 08:26 AM PST
கடந்த 2013 ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் நேற்றைய தினமே அவ்வாறு குறைவான பதிவை ரொரன்ரே பங்குச் சந்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய சந்தை நேர முடிவின் போது ரொரன்ரோ பங்குச் சந்தை 262.57 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்து, 12,073.46 ஆக பதிவாகியுள்ளது. கனேடிய டொலரின் பெறுமதியும் தொடர்ச்சியாக வீழச்சியடைந்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு நிகரான கனேடிய டொலரின் பெறுமதியும் கடந்த பத்து நாட்களாக தொடர்ச்சியாக இறங்குமுகத்தில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று ஒரு கனேடிய டொலருக்கான அமெரிக்க டொலரின் பெறுமதிய 68.82 சதங்களாக பதிவாகியிருந்தது. மசகு எண்ணெயின் பெறுமதியும் ஒது தசாப்தகாலம் காணாத அளவுக்கு 29.42 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post ரொரன்ரோ பங்குச் சந்தை நேற்றைய தினம் மிகக் குறைவான பதிவை காட்டியது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

அட்லான்டாவின் ஆன்சாக்(Anzac) பகுதியில் உள்ள நெக்சன் எண்ணெய் மணல் அகழ்வு தொழில்த்துறை பகுதியில் நேற்று மாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரொரன்ரோ பங்குச் சந்தை நேற்று மிகவும் குறைவான பெறுமதியை பதிவு செய்துள்ளது.