Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

அனைத்துத் தமிழர்களுக்கும் கனேடியப் பிரதமர் பொங்கல் வாழ்த்து

Posted: 15 Jan 2016 09:23 AM PST

justin_trudeau__-_20160115

justin_trudeau__-_20160115கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அனைத்துத் தமிழர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தனது குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பொங்கல் பண்டிகையானது கனடாவிலும், உலகெங்கிலும் வாழகின்ற தமிழர்கள் தமது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிகழ்வு என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களால் இந்த பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதையும், அந்த ஒவ்வொரு நாள் பண்டிகைக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறுவடைக் காலத்தில் இந்த பண்டிகை இடம்பெறும் சிறப்பையும் பாராட்டிய அவர், நன்றி கூறுதல், அமைதி மற்றும் மகிழச்சி ஆகியவற்றையும் அதன் அடிப்படைத் தன்மையாகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.justin_trudeau__-_20160115

கனடாவின் பலத்திற்கு காரணமாக திகழும் இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பல்வேறு இனங்களுக்கும், அவர்களின் பாரம்பரியங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதனை இந்த தைப்பொங்கல் விழாவும் சுட்டிக்காட்டுவதாகவும் பிரதமர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை ஒன்ராறியோ மாகாண முதலர்வர் கத்தலின் வின் மற்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரோறி ஆகியோரும் தமிழ் சமூகத்தினருக்கு தமது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தனது குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த பொங்கல் பண்டிகையானது கனடாவிலும், உலகெங்கிலும் வாழகின்ற தமிழர்கள் தமது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிகழ்வு என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களால் இந்த பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதையும், அந்த ஒவ்வொரு நாள் பண்டிகைக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறுவடைக் காலத்தில் இந்த பண்டிகை இடம்பெறும் சிறப்பையும் பாராட்டிய அவர், நன்றி கூறுதல், அமைதி மற்றும் மகிழச்சி ஆகியவற்றையும் அதன் அடிப்படைத் தன்மையாகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கனடாவின் பலத்திற்கு காரணமாக திகழும் இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பல்வேறு இனங்களுக்கும், அவர்களின் பாரம்பரியங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதனை இந்த தைப்பொங்கல் விழாவும் சுட்டிக்காட்டுவதாகவும் பிரதமர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை ஒன்ராறியோ மாகாண முதலர்வர் கத்தலின் வின் மற்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரோறி ஆகியோரும் தமிழ் சமூகத்தினருக்கு தமது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

The post அனைத்துத் தமிழர்களுக்கும் கனேடியப் பிரதமர் பொங்கல் வாழ்த்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™