Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தேக்கு இலையின் மகத்துவங்கள்!

Posted: 14 Jan 2016 11:04 PM PST

6

6வாழை இலையைப்போலவே தேக்கு இலைகளில் நாம் உணவருந்தலாம்.

ஏனெனில் அந்த இலையானது, 30 முதல் 60 CM நீளம் மற்றும் 15 முதல் 30 CM அகலம் கொண்டது.

தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும்.5

மருத்துவ பயன்கள்

தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது.

இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்- தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்துகொள்ள வேண்டும். அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம். பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது. இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது.6

நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.

சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.

ரத்த போக்கை கட்டுப்படுத்த மருந்து

தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.

சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும். இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும். இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது.

The post தேக்கு இலையின் மகத்துவங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நொடியில் தயாராகும் ரெடிமெட் உணவுகள்: ஆபத்துக்களோ ஏராளம்!

Posted: 14 Jan 2016 11:01 PM PST

poi

poiபல வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து சாப்பிடுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டு ரெடிமெட் உணவுகளை செய்து சாப்பிடுகிறோம்.

ரெடிமெட் உணவுகள் எவ்வளவு விரைவில் சமையலாகிவிடுகிறதோ, அதே விரைவில் நோய்களும் நம்மை தொற்றிக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையான ரெடிமெட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

காலையில் சமைத்து வைக்கும் உணவு இரவில் கெட்டுப்போகும்போது, நீண்ட நாட்களாக கெடாமல் இருப்பதற்காக அந்த ரெடிமெட் உணவுகளில் நிச்சயம் இராசயனப்பொருட்கள் சேர்க்கப்படும்.poi

அப்படி சேர்க்கப்படும் இராசயனப்பொருட்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கின்றனர்.

ரெடிமெட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட நிலையில் அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அதன் சுவை குறைந்துவிடும்.

இதனால் அதன் சுவையை அதிகரிக்க செய்வதற்காக, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நறுமணம், கலர்பொடிகள் போன்றவை அதிமாக சேர்க்கப்படுகின்றன.

இதில் சேர்க்கப்படும் சல்பைடு, ஆஸ்துமா மற்றும் மனநலப்பிரச்சனைகளை உருவாக்ககூடியது, அதுமட்டுமின்றி இதில் உள்ள சோடியம் வாந்தி, அலர்ஜி, புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.

எவ்வித சத்துக்களும் இன்றி உள்ள ரெடிமெட் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் வளர்ச்சி குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோகும்.

இதனால் நம்மை நோய்கள் தாக்கும்போது, அதனை எதிர்த்து போராட முடியாத அளவுக்கு நமது உடல் பலவீனமடைந்து விடுகிறது.

எனவே, சமையல் செய்யும் காலத்தை குறைக்கும் ரெடிமெட் உணவுகள், உங்கள் ஆயுட் காலத்தையும் குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்க.

The post நொடியில் தயாராகும் ரெடிமெட் உணவுகள்: ஆபத்துக்களோ ஏராளம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மெக்சிக்கன் உணவகம் ஒன்றில் தீ

Posted: 14 Jan 2016 08:53 AM PST

fire_at_Bathurst_Street_Mexican_restaurant_-01142016

fire_at_Bathurst_Street_Mexican_restaurant_-01142016ரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் உள்ள மெக்சிக்கன் உணவகப் பகுதியில் இன்று அதிகாலை தீ பற்றிக் கொண்டுள்ளது.

Bathurst Street மற்றும் Dupont Street பகுதியில் உள்ள Dos Amigos என்ற உணவகத்தின் உள்ளே அதிகாலை 3 மணியளவில் தீ பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சிறிய ஒரு மின் ஒழுக்குக் காரணமாக கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ அந்த கட்டத்தின் சுவரின் ஊடாக உணவகத்தின் மேற்பகுதிக்கு பரவியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சுமார் எட்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த 35ற்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள், தீப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீ பரவ ஆரம்பித்த வேளையில் அந்த வீட்டில் ஒருவர் இருந்த போதிலும், தீ முற்றாக சூழ்ந்து கொள்வதற்குள் அவர் வெளியேறி விட்டதாக சம்பவ இடத்திலுள்ள தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.fire_at_Bathurst_Street_Mexican_restaurant_-01142016

இந்த விபத்து காரணமாக Bathurst Streetஇன் குறித்த அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன.

The post மெக்சிக்கன் உணவகம் ஒன்றில் தீ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தலிபான்களிடம் இருந்து விடுவிக்க்படப்ட கனேடியரின் உடல்,உள நிலையில் முன்னேற்றம்

Posted: 14 Jan 2016 08:36 AM PST

Colin_Rutherford_-_01122016

Colin_Rutherford_-_01122016தலிபான்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட கனேயர் தனது உள உடல் பாதிப்புக்களில் இருந்து மீண்டு வருவதாக பிதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

ரொரன்ரோ நகர மண்டபத்தில் நேற்றைய நாள் ஊடகவியலாளர்களை சந்தித்த போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட ஒன்ராறியோவைச் சேர்ந்த குறித்த நபர் இன்னமும் கனடாவை வந்தடையவில்லை என்றும் குறிப்பிட்ட பிரதமர், அவர் விரைவில் கனடாவை வந்தடைவார் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் விடுவிக்கப்பட்ட அவரது உடல்நிலையின் முன்னேற்றத்தினை தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்கள் தீவிரவாதிகளின் பிடியில் தொடர்ச்சியாக இருந்தமை மிகவும் துன்பமானது என்றும், மிகவும் சிரமமான நிலையிலிருந்தே அவர் வெளியே வந்துள்ளார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.Colin_Rutherford_-_01122016

எனினும் விடுதலையான அந்த கனேடியர் தற்போது எங்குள்ளார் என்பது தொடர்பிலோ, எப்போது அவர் கனடாவை வந்தடைவார் என்பது குறித்தோ மத்திய அரசாங்கம் இதுவரை தகவல்கள் எதனையும் வெளியிடவில்லைலின் ரூதர்ஃபோர்ட் எனப்படும் அந்த கனேடியர் கடந்த திங்கட்கிழமை விடுவித்ததாக அறிவித்த தலிபான்கள், மனிதாபிமான மற்றும் இரக்கத்தின் அடிப்படையிலும், இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையிலுமே அவரை விடுவித்ததாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கனேடியா விடுதலை செய்யப்பட்டதை கனேடிய வெளிவிவகார அமைச்சரும் உறுதிப்படுத்தியிருந்தது.

The post தலிபான்களிடம் இருந்து விடுவிக்க்படப்ட கனேடியரின் உடல்,உள நிலையில் முன்னேற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அட்லான்டிக் கனடாவில் பனிப்புயல் – பல இடங்களில் மின்விநியோகம் தடை

Posted: 14 Jan 2016 08:27 AM PST

snow_-_01142016

snow_-_01142016அட்லான்டிக் கனடாவை கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது.

நேற்று காலையிலேயே நியூ பிரவுன்ஸ்விக்,பிறின்ஸ் எட்வேர்ட் மற்றும் நோவா ஸ்கொட்ஷியா மாநிலங்களுக்கான பனி்ப்புயல் எச்சரிக்கையினை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் பிறப்பித்திருந்தது.

சுமார் 25 சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என்றும், மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் அது முன்னுரைத்திருந்தது.

இந்நிலையிலேயே அந்த பகுதியில் கடுமையான பனிப்புயல் தாக்கியதாகவும், அதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.snow_-_01142016

கனடாவின் கிழக்கு கரையோரமான அந்த பிராந்தியத்தை நேற்றைய தினம் தாக்கிய கடுமையான அந்த பனிப்புயலால் பல இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளதுடன், பாடசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களும் மூடப்பட்டுள்ளன.

நோவா ஸ்கொட்ஷியாவில் நேற்று காலையிலேயே 11.000 ற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

ஹலிஃபக்ஸ் அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான பல விமான சேவையுகம் இரத்துச் செய்யப்பட்டன.

பனிப்புயல் காரணமாக நோவா ஸ்கொட்ஷியாவுக்கும் நியூ ஃபவுண்ட்லான்ட் மற்றும் லேபடோருக்கும இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்துகளும் இன்று வரையிலும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அட்லான்டிக் கனடாவில் பனிப்புயல் – பல இடங்களில் மின்விநியோகம் தடை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™